Thenilgiris

News January 6, 2025

நீலகிரி வாக்காளர்களின் இறுதி பட்டியல் வெளியீடு

image

மாவட்டத்தில் 2 லட்சத்து79ஆயிரத்து 21ஆண் வாக்காளர்களும் 3 லட்சத்து 5 ஆயிரத்து 41 பெண் வாக்காளர்களும் 18 மூன்றாம் பாலினத்தவரும் என மொத்தம் 5 லட்சத்து 84 ஆயிரத்து 260 வாக்காளர்கள் இடம் பெற்று உள்ளனர்.உதகமண்டலம் சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து98 ஆயிரத்து 405 வாக்காளர்களும்,கூடலூர் சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 95ஆயிரத்து 312 வாக்காளர்களும்குன்னூர் சட்டமன்ற தொகுதியில்1லட்சத்து 90 ஆயிரத்து 543 உள்ளனர்.

News January 6, 2025

நீலகிரி மாவட்டத்திற்கு எச்சரிக்கை

image

வடக்கில் இருந்து வரும் குளிர் காற்றின் தாக்கத்தால் நீலகிரி மாவட்டத்தில், ஒரு சில இடங்களில் அடுத்த,24 மணி நேரத்தில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் சில இடங்களில் உறைபனி ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், அடர்ந்த வனப்பகுதியாக உள்ள அவலாஞ்சியில், இதன் தாக்கம் கடுமையாக உள்ளது. 

News January 6, 2025

நீலகிரி: இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

image

உதகையில் மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சி தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு உதகை, குன்னூர், கூடலூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. நீலகிரி மாவட்ட திமுக சார்பில் மாவட்ட திமுக துணை செயலாளர் ஜே.ரவிகுமார் பெற்றுக்கொண்டார். உதகை, குன்னூர் மற்றும் கூடலூர் வருவாய் கோட்டாட்சியர்கள் உடன் இருந்தனர்.

News January 6, 2025

நீலகிரியில் விண்ணப்பிக்க அழைப்பு

image

சர்வதேச விமான நிலையத்தில் பணிபுரிய நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு சர்வதேச விமான போக்குவரத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தால் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது. சிறப்பு பயிற்சிகள் தாட்கோ மூலம் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தில் பதிவு செய்வதற்கு www.tahdco.com இந்த இணையதளத்தில் பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார்.

News January 6, 2025

நீலகிரி: குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி

image

இந்த ஆண்டு நடைபெறும் குரூப்-4 தேர்வு வரும் ஜூலை 13ஆம் தேதி நடைபெற உள்ளது. எனவே ஊட்டியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தன்னார்வ பயிலும் வட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் வரும் ஜன.9ஆம் தேதி தொடங்குகின்றது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 25 பேர் இலவச பயிற்சி வகுப்புகளின் மூலம் தேர்ச்சி பெற்று பணி வாய்ப்பு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

News January 6, 2025

நீலகிரி கலெக்டர் அறிவிப்பு

image

நீலகிரி மாவட்டத்தில் அனைத்து அரிசி அட்டைதாரருக்கும் பொங்கல் பரிசு தொகைக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் புகார்கள் ஏதேனும் இருப்பின் கட்டணமில்லா தொலைபேசி எண்களான (1967) மற்றும் (18004255901) தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு அறிவித்துள்ளார். நீலகிரி மாவட்ட அளவில் புகார் தெரிவிக்க 0423 2441216 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

News January 6, 2025

நீலகிரி கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

நீலகிரி ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு விடுத்த செய்தி குறிப்பில், நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறை சார்பில், பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டம் 2015-16 ல் இருந்து செயல் படுத்த பட்டு வருகிறது. இதில் நீர் பாசன கருவிகள் 100% மானியத்தில் சிறு விவசாயிகளுக்கும், இதர விவசாயிகளுக்கு 75 % மானியத்திலும் வழங்கப்படுகிறது’ என தெரிவித்துள்ளார். 

News January 6, 2025

நீலகிரி கிராமங்களில் 1133 கூட்டம்: எஸ்பி தகவல் 

image

2024-ல் கோவை சரகத்தில், போதை பொருள் விற்பனை, கண்காணிப்பு கேமராக்களை நிறுவுதல், குற்ற நடவடிக்கை தடுக்க முயற்சி மேற்கொள்ளுதல் போன்ற அறிவுரை வழங்கி, அதன் மூலம் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது வழக்கு பதிந்து, குற்றம் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக நீலகிரி கிராமங்களில் 1133 கலந்தாய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டதாக நீலகிரி எஸ்பி,. நிஷா தெரிவித்துள்ளார்.

News January 5, 2025

நீலகிரி: இன்றைய இரவு ரோந்து அதிகாரிகள் விவரம் 

image

நீலகிரி மாவட்டத்தில் இன்று (05.1.2025) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. உதகை நகரம் ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள், நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.

News January 5, 2025

தடுப்பு சுவரில் மோதி வாகனம் விபத்து

image

நீலகிரி மாவட்டம், கூடலூர் – மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று  இரவு உதகையிலிருந்து, கேரளா நோக்கி சென்று கொண்டிருந்த கேரளா பதிவு என் கொண்ட வாகனம், சாலை நடுவில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு சுவரில் மோதி, விபத்துக்குள்ளானது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இந்நிலையில் இந்த விபத்து குறித்து கூடலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!