Thenilgiris

News January 8, 2025

நீலகிரியில் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு

image

நீலகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 24ஆம் தேதி ஊட்டியில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது. முகாமில் முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன. இதில் 8ம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் பட்டதாரிகள் பட்டய படிப்பு படித்தவர்கள், ஐடிஐ, கணினி இயக்குபவர்கள் ஓட்டுநர்கள் கலந்து கொள்ளலாம்.

News January 8, 2025

ஊட்டியில் -1 டிகிரி பதிவான குளிர்

image

உதகையில் கடந்த சில நாட்களாகவே பயங்கரமான குளிர் நீடித்து வருகிறது. தற்போது ஊட்டியில் -1 டிகிரி குளிர் பதிவான நிலையில் ஊட்டியே பனி மண்டலமாக காட்சி அளிக்கிறது. அதிகாலையில் உறைந்த பனி நிலமெங்கும் வெண்படலமாக படர்ந்து காணப்படுகிறது. இதனால மக்கள் வீட்டிலே முடங்கி இருக்கின்றனர்.

News January 8, 2025

நீலகிரிக்கு வர எவ்வித கட்டுப்பாடும் இல்லை: ஆட்சியர்

image

HMPV வைரஸ் வைரஸ் நீலகிரி மாவட்டத்தின் அண்டை மாநிலமான கர்நாடகாவில் உறுதியானது. இதையடுத்து மாவட்ட ஆட்சியர் கூறுகையில், HMPV வைரஸ் தொற்று மட்டும் இன்றி, காய்ச்சல் காலங்களிலும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் முகக்கவசம் அணிவது நல்லது. தற்போதைக்கு நீலகிரிக்கு வர சுற்றுலா பயணிகளுக்கு எவ்வித கட்டுப்பாடும் இல்லை. தொற்று அதிகரிக்கும் பட்சத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றார்.

News January 7, 2025

நீலகிரி – HMPV சந்தேகங்களுக்கு எண்கள் அறிவிப்பு!

image

HMPV வைரஸ் தொடர்பான உதவி எண்களை நீலகிரி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதற்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உதவி மைய எண் 93423 30053இல் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 104 என்ற கட்டணமில்லா எண்ணையும் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார். மேலும் துண்டு, சோப்பு, கைக்குட்டை போன்றவற்றை மற்றவர்களுக்கு பகிர்வதை தவிர்க்க வேண்டும். SHARE IT!

News January 7, 2025

நீலகிரியில் முகக்கவசம் கட்டாயம்

image

HMPV தொற்று பரவல் மற்றம் பாதிப்பு எதிரொலியாக நீலகிரி மாவட்டத்தில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என நீலகிரி கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு அறிவித்துள்ளார். நீலகிரியில் பொது இடங்கள்வரும் மக்கள், சுற்றுலாப் பயணிகள் கட்டயாம் முகக்கவசம் அணிய வேண்டும்.

News January 7, 2025

நீலகிரி: மக்கள் குறைதீர் கூட்டத்தில் குவிந்த மனுக்கள்

image

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டத்தில் சாலை வசதி, வீட்டுமனை பட்டா குடிநீர் மருத்துவ உதவி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொது மக்களிடம் இருந்து சுமார் 143 மனுக்கள் குவிந்தன. பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் அரசு அலுவலர்களிடம் வலியுறுத்தி உள்ளார்.

News January 7, 2025

நீலகிரியில் மைனஸ் 1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை

image

உறைபனிப் பொழிவு காரணமாக உதகையில் கடும் குளிர் நிலவுகிறது. நவம்பரில் தொடங்கி பிப்ரவரி இறுதி வரை உறைபனி நிலவும். வெப்பநிலை மிகவும் குறைந்து, மைனஸ் டிகிரி செல்சியஸை எட்டி குளிரான காலநிலை நிலவுகிறது. அவலாஞ்சி உட்பட்ட சில பகுதிகளில், கடந்த சில நாட்களாக வெப்பநிலை மைனஸ் டிகிரி செல்சியஸுக்கும் கீழ் சரிந்திருக்கிறது. அவலாஞ்சியில் நேற்று அதிகாலை மைனஸ் ஒரு டிகிரி செல்சியஸும், உதகையில் 2.3 டிகிரி பதிவானது.

News January 7, 2025

நீலகிரி பழங்குடியின மாணவி பிரதமரிடம் வாழ்த்து

image

புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் 2024-25ம் கல்வி ஆண்டிற்கான தன்னார்வலர்கள் சேர்க்கையின்கீழ் கோத்தகிரி அரசு பள்ளியில் பிளஸ்-1 பயிலும், இருளர் பழங்குடியின மாணவி பார்த்தசாரதி, இந்த திட்டத்தில் இணைந்து, எழுத படிக்க தெரியாதவர்களுக்கு, சொல்லி தரும் பணியில் தன்னார்வலராக இணைந்து சாதித்த மாணவி தமிழகத்திலிருந்து டெல்லி செல்லும் 44 பேர் அடங்கிய குழுவில் இடம் பெற்று பிரதமரிடம் நாளை வாழ்த்து பெற சென்றார்.

News January 7, 2025

குன்னூரில் நாய் வேட்டையில் சிறுத்தை

image

குன்னூர் சுற்றுப்புற பகுதிகளில் உணவு தேடி சிறுத்தை குடியிருப்பு பகுதிக்கு வந்து செல்கின்றன. அதில் எடப்பள்ளி பந்துமை இந்திரா நகர் பகுதியில், இரவு நேரங்களில் நாய் வேட்டையில் சிறுத்தை ஈடுபட்டு உள்ளது. அப்பகுதியில் 4 நாட்களில் 3 நாய்களை வேட்டையாடியதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இது குறித்து நேற்று வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

News January 6, 2025

நீலகிரி காவல் அதிகாரிகளின் இரவு ரோந்து பணி விபரம்

image

நீலகிரி மாவட்டத்தில் இன்று (06.01.2025) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உதகை நகரம் ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!