Thenilgiris

News January 14, 2025

இளம் வல்லுனராக பணியாற்ற விண்ணப்பிக்கலாம்! 

image

நீலகிரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு திட்டங்களின் விவரங்கள் சேகரித்தல் மற்றும் செயலாக்கத்தினை கண்காணிக்க கலெக்டர் தலைமையில் உருவாக்கப்பட உள்ள மாவட்ட கண்காணிப்பு அலகில், இளம் வல்லுனராக பணியாற்ற தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு கணிப்பொறி, தகவல் தொழில்நுட்ப அறிவியலில் இளநிலை பொறியாளர் படித்தவர்கள் வரும் 23ம் தேதிக்குள் ddsooty@gmail.com என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

News January 14, 2025

‘பெட்டா குயின்’ நீராவி எஞ்சின் இயக்கம்

image

மேட்டுப்பாளையம் – ஊட்டி இடையே நீராவி எஞ்சின் மூலம் பெட்டா குயின் நீராவி எஞ்சின் மூலம் நேற்று இயக்கப்பட்டது. இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், “நாட்டில் முதல் ஹைட்ரஜன் ரயில் ஹரியானாவில் அறிமுக படுத்தப்பட உள்ள நிலையில், 35 ரயில்கள் இயக்க திட்டமிட பட்டு உள்ளது. அதில் நீலகிரி ரயிலும் எரிபொருள் கொண்டு இயக்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளது” என்றனர்.

News January 14, 2025

நீலகிரி: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம் 

image

நீலகிரி மாவட்டத்தில் இன்று (13.01.2025) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. உதகை நகரம் ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.

News January 14, 2025

தொடங்கியது படுகர் இன பாரம்பரிய திருவிழா

image

கோத்தகிரி பேரகணி பகுதியில் படுகர் இன பாரம்பரிய எத்தையம்மன் திருவிழா இன்று காலை தொடங்கப்பட்டது. இந்த பண்டிகையில் பல்வேறு ஊர்களில் இருக்கும் படுகர் இன மக்கள் தவறாமல் கலந்து கொண்டு, தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் வழிபடுவார்கள். இந்த பண்டிகையானது பேரகணி பகுதியில் இருந்து தொடங்கப்பட்டு 7 நாட்கள் வெவ்வேறு ஊர்களில் கொண்டாடப்பட்டு பின்னர் மீண்டும் பேரகணி பகுதியில் முடிவடைகிறது.

News January 13, 2025

நீலகிரியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 

image

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு, பொதுமக்களிடமிருந்து அடிப்படை வசதிகள் மற்றும் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 56 மனுக்களை பெற்றுக் கொண்டார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் உட்பட பலர் இருந்தனர்.

News January 13, 2025

உதகையில் Maggi நூடுல்ஸ் பாக்கெட்டில் புழு

image

நீலகிரி மாவட்டம் உதகையில் மளிகை கடையில் வாங்கிய (Maggi) நூடுல்ஸ் பாக்கெட்டில் வெள்ளை நிறத்தில் புழுக்கள் நெளிந்து கொண்டிருந்ததை கண்டு வாடிக்கையாளர் அதிர்ச்சியடைந்துள்ளார். நூடுல்ஸ் பாக்கெட்டில் காலாவதி ஆவதற்கு ஒரு மாத காலம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், வாடிக்கையாளர் சமைப்பதற்கு முன் நூடுல்ஸ் பாக்கெட்டில் புழுக்கள் இருப்பதை கண்டறிந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

News January 13, 2025

சமத்துவ பொங்கல் விழாவில் ஆட்சியர் பங்கேற்பு

image

நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு தலைமையில் இன்று நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில், பொங்கல் பொருட்களை கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கௌசிக்கிடம் வழங்கி பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், குன்னூர் சார் ஆட்சியர் செல்வி சங்கீதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

News January 13, 2025

நீலகிரியில் 30 குண்டுகள் முழங்க அஞ்சலி

image

குன்னூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்த சிறப்பு எஸ்ஐ மைதீன் அப்துல் காதர் நேற்று மாரடைப்பால் காலமானார். அவரது உடல் குன்னூர் காவல் துறை குடியிருப்பு உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டு, பின்பு மக்களின் பார்வைக்காக போலீஸ் மைதானத்தில் வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு ஏடிஎஸ்பி சௌந்தர்ராஜன் அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு நிதி உதவி வழங்கினார். பின்னர் 30 குண்டுகள் முழங்க அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

News January 13, 2025

நீலகிரியில் 2 நாள் டாஸ்மாக் கடைகள் மூடல்

image

நீலகிரி மாவட்டத்தில் செயல்படும் மதுபான சில்லறை விற்பனை கடைகள், ஓட்டல் பார்கள் இம்மாதம் 15ஆம் தேதி நடக்கும் திருவள்ளுவர் தினம் மற்றும் 26ல் நடக்கும் குடியரசு தினத்தை முன்னிட்டு செயல்படாது. மேற்கண்ட நாட்களில் மது கடைகள் ஏதேனும் திறந்து இருந்தால் ஏடிஎஸ்பி 0423-2223802, உதவி கமிஷனர் 0423-2443693 ஆகிய எண்களுக்கு புகார் தெரிவிக்கலாம்.

News January 13, 2025

நடைபாதையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்கள்

image

உதகை நகரில் நாளுக்கு நாள் பெருகிவரும் வாகனங்களின் எண்ணிக்கையால் நடைபாதையில் வாகனங்களை நிறுத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இதனால் வாகனங்கள் வரும் சாலையில் நடக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் விபத்து ஏற்படும் ஆபத்து உள்ளது. எனவே நடைபாதையில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு போக்குவரத்து காவல்துறை அபராதம் விதித்து எச்சரிக்கை செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

error: Content is protected !!