Thenilgiris

News January 18, 2025

நீலகிரி: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம் 

image

நீலகிரி மாவட்டத்தில் இன்று (17.1.2025) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. உதகை நகரம் ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது

News January 17, 2025

பிரேக் பிடிக்காமல் கார் கம்பத்தில் மோதி விபத்து

image

நீலகிரி: கோத்தகிரி காம்பாய்கடை பகுதியை சேர்ந்த ராஜா என்பவர் இன்று கோத்தகிரி புயல் நிவாரண கூடத்திலிருந்து, தாசில்தார் அலுவலகம் செல்லும் தாழ்வான சாலையில், தனது காரில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது காரின் பிரேக் பிடிக்காததால், அவரது கட்டுப்பாட்டை இழந்து தாசில்தார் அலுவலக நுழைவு வாயில் அருகே இருந்த இரும்பு கம்பத்தில் மோதி நின்றது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

News January 17, 2025

முத்துமலையில் வாகனங்களுக்கு வனத்துறை எச்சரிக்கை

image

பருவ மழை நிறைவு பெற்ற நிலையில், பனியின் தாக்கம் அதிகரித்து செடிகள், புற்கள் போன்றவை பனியில் கருகி உள்ளன. இதனால் வனத்தில் இருந்து வெளி வரும் யானைகள், குடிநீர், உணவு தேடி, மைசூரு தேசிய நெடுஞ்சாலையை, அடிக்கடி கடந்து, மாயாறு ஆற்றை நோக்கி வர தொடங்கி உள்ளன. எனவே பயணிகள், வாகனங்களை நிறுத்தி, இடையூறு செய்வது கூடாது என வனத்துறை எச்சரித்து உள்ளது.

News January 17, 2025

ஊட்டி அருகே  அந்நிய மரங்கள் அகற்றம்

image

நீலகிரியில் உள்ள கற்பூரம் உள்ளிட்ட அந்நிய மரங்களை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. தொடர்ந்து, நீலகிரி வனக்கோட்டம் சார்பில், ஊட்டி, குந்தா, குன்னூர், கூடலுார், பந்தலுார், அவலாஞ்சி, அப்பர்பவானி, கோரகுந்தா உள்ளிட்ட பகுதிகளில் இதுவரை,300 ஏக்கர் பரப்பளவில் அந்நிய அகற்றப்பட்டன. தற்போது,ஊட்டி அருகே தலைகுந்தா, அப்பர்பவானி, கோரகுந்தா, அவலாஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் மரங்களை அகற்ற அகற்றப்பட்டு வருகிறது.

News January 16, 2025

பழங்குடியினருடன் பொங்கல் வைத்த எஸ்பி

image

நீலகிரி மாவட்டம் மசினகுடி காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பூதனத்தம் ஆதிவாசி கிராமத்தில் உள்ள ஆதிவாசி மக்களுடன், நீலகிரி காவல் துறை கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா பொங்கல் வைத்து , பொங்கல் பொங்கி வரும் போது மக்களுடன் சேர்ந்து பொங்கலோ பொங்கல் என்று கோஷமிட்டு சிறப்பாக கொண்டாடினார். பின்னர் அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது.

News January 16, 2025

குன்னூர் பேருந்து நிலையத்தில் மீண்டும் ஆக்கிரமிப்பு

image

குன்னூர் பேருந்து நிலையப் பகுதியில் நீதிமன்ற உத்தரவுப்படி வருவாய்த் துறையினரின் கடும் நடவடிக்கையால் பல ஆண்டுகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த கடைகள் அகற்றப்பட்டு போக்குவரத்து சிரமம் இல்லாமல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மீண்டும் தள்ளுவண்டி கடை முளைத்துள்ளன. இதைப் பார்த்து மற்றவர்களும் கடை வைக்க துவங்கினால் மீண்டும் ஆக்கிரமிப்பு ஆரம்பமாகக் காரணமாக அமைந்து விடக்கூடும். தேவை நடவடிக்கை.

News January 16, 2025

தெப்பக்காட்டில் யானைப்பொங்கல் விழா

image

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காடு யானைகள் முகாமில் நடந்த யானைப்பொங்கல் விழாவில், சுற்றுலாப் பயணிகள் உற்சாகத்துடன் பங்கேற்றனர். விழாவை முன்னிட்டு வளர்ப்பு யானைகள் அலங்கரிக்கப்பட்டு வரிசையாக நிறுத்தப்பட்டன. யானைகளுக்கு பொங்கல், பழம், கரும்பு ஆகியவை வழங்கப்பட்டன.விழாவில் பழங்குடியினர் பாரம்பரிய இசையுடன் நடனம் ஆடினர். திரளாக சுற்றுலா பயணிகள் யானைப் பொங்கலை ரசித்தனர்.

News January 16, 2025

பழங்குடியினருடன் பொங்கல் வைத்த எஸ்பி

image

நீலகிரி மாவட்டம் மசினகுடி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பூதனத்தம் ஆதிவாசி கிராமத்தில் உள்ள ஆதிவாசி மக்களுடன் நீலகிரி காவல் துறை கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா பொங்கல் வைத்து , பொங்கல் பொங்கி வரும் போது மக்களுடன் சேர்ந்து பொங்கலோ பொங்கல் என்று கோஷமிட்டு சிறப்பாக கொண்டாடினார். பின்னர் அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது.

News January 16, 2025

கோத்தகிரியில் பிளாஸ்டிக்’ பயன்பாடு அதிகரிப்பு!

image

நீலகிரி மாவட்டத்தில், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டு, 21 வகை ‘பிளாஸ்டிக்’ பொருட்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் கோத்தகிரி பேரூராட்சியில், மீண்டும் ‘பிளாஸ்டிக்’ கேரிபேக் உட்பட தடை செய்யப்பட்ட ‘பிளாஸ்டிக்’ பொருட்களின் புழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. அதிகாரிகள் இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

News January 15, 2025

நடமாடும் இலவச காசநோய் பரிசோதனை முகாம்

image

தேசிய காச நோய் ஒழிப்பு திட்டம், மக்களை தேடி மருத்துவம் நடமாடும் இலவச டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனத்தின் மூலம், பொது மக்களுக்கு இலவச காச நோய் பரிசோதனை முகாம், அருவங்காடு ஓசட்டி பகுதியில் இன்று நடைபெற்றது. சுமார் 50 க்கும் மேற்பட்ட மக்களுக்கு, இலவசமாக எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. சுகாதார மேற்பார்வையாளர் ஆண்டனி செபாஸ்டின் மற்றும் அருவங்காடு சுகாதார நிலைய மருத்துவப் பணியாளர்கள் உடன் இருந்தனர்.

error: Content is protected !!