Thenilgiris

News January 22, 2025

உதகையில் நடிகரின் ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

image

உதகையில் இந்தி நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்கு சொந்தமான நட்சத்திர ஹோட்டல் உள்ளது. இந்த ஹோட்டலுக்கு இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதாக தெரிகிறது. இது குறித்து ஓட்டல் நிர்வாகம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து காவல்துறையினர், வெடிகுண்டு நிபுணர்கள் போலீசார் மோப்பநாயுடன் தீவிர சோதனை செய்து வருகின்றனர்.  இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

News January 22, 2025

குன்னூரில் தொடரும் ஆன்லைன் மோசடி

image

ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால், லாபம் தருவதாக கூறி, குன்னூரை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியையிடம் ரூ.21 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. 53 வயதான ஆசிரியை தனது வாட்ஸ் அப்பில் வந்த குறுஞ்செய்தியை நம்பி, தனது நிலத்தை ரூ.8 லட்சத்திற்கு மற்றும் சக ஆசிரியர்களிடம் ரூ.7.50 லட்சம் கடனாக பெற்று ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்து ஏமாற்றம் அடைந்ததால், ஊட்டி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.

News January 21, 2025

கோத்தகிரியில் திமுக வீர வணக்க நாள் பொதுகூட்டம் 

image

உதகையில் கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட திமுக மாணவர் அணி அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. மாவட்ட திமுக செயலாளர் பா.மு.முபாரக் தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பாளர் விவேகானந்தன் வரவேற்றார். கூட்டத்தில், மாணவர் அணி சார்பில் ஜனவரி 25ம் தேதி கோத்தகிரியில் நடைபெறும் “வீர வணக்க நாள்” பொதுக்கூட்டத்தை சிறப்பாக நடத்த முடிவு செய்யப்பட்டது .

News January 21, 2025

ஊட்டியின் உண்மையான பெயர் தெரியுமா?

image

உதகமண்டலத்தின் உண்மையான பெயர் – ‘ஒற்றைக்கல் மந்து’ என்பதாகும். இதனை உச்சரிக்க முடியாத வெள்ளையர்கள் ‘உடகமண்ட்’ எனக் குழறினார்கள். நாளடைவில் உடகமண்ட் நிலைத்து அதற்கு உதகமண்டலம் என்ற தமிழ் வடிவம் ஏற்பட்டது. ஆங்கிலேயர் உச்சரித்த உடகமண்ட் என்பதின் சுருக்கமே ஊட்டி.

News January 21, 2025

ஹெத்தையம்மன் திருவிழாவில் நடிகை சாய்பல்லவி

image

நீலகிரி படுகர் இன மக்களின் குலதெய்வமான ஹெத்தையம்மன் திருவிழா நேற்று கோத்தகிரி அருகே பேரகணி கோயிலில் நடந்தது. இதில் பிரபல சினிமா நடிகை சாய்பல்லவி பங்கேற்று காணிக்கை செலுத்தி தரிசனம் செய்தார். இவரை இவரது அணையட்டி வீட்டில் பாஜகவைச் சேர்ந்த சபிதா போஜன் (HUDCO) இயக்குநர் நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி பாராட்டினார்.

News January 21, 2025

காவல் நிலையத்தில் வாகன பாகங்கள் திருட்டு

image

நீலகிரி மாவட்டம் உதகை புதுமந்து காவல் நிலையத்தில், கோக்கால் கிராமத்தை சேர்ந்த நாகராஜ் என்பவரின் பிக்கப் வாகனம், சாராய வழக்கு சம்பந்தமாக 2020-ல் பறிமுதல் செய்யப்பட்டு, காவல் நிலைய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பின்னர், ரூ.17,110 கட்டி வாகனத்தை எடுக்க சென்றபோது கியர் பாக்ஸ், உதிரி பாகங்கள் களவாடப்பட்டிருந்தன. இந்நிலையில் இதுகுறித்து அவர் எஸ்பி மற்றும் கலெக்டரிடம் புகார் கொடுத்துள்ளார்.

News January 20, 2025

நீலகிரி மாவட்ட இரவு ரோந்து பணி விபரம்

image

நீலகிரி மாவட்டத்தில் இன்று (20.01.2025) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உதகை நகரம் ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.

News January 20, 2025

உதகை தொட்டபெட்டா சாலையில் அருகே சரிந்த சிற்றுந்து

image

உதகை தொட்டபெட்டா காட்சி முனைக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் தங்கள் வாகனங்களில் சென்று வருகின்றனர். இந்நிலையில் சமவெளி பகுதியில் இருந்து வந்திருந்த சிற்றுந்து சாலையின் அருகே நிலை தடுமாறி சரிந்தது மேலும் பயணிகள் யாரும் இந்த சிற்றுந்தில் இல்லாததால் விபத்து தவிர்க்கப்பட்டது.

News January 20, 2025

குடியரசு தின விழா ஆலோசனைக் கூட்டம்

image

நீலகிரி மாவட்டத்தில், குடியரசு தின விழா 26-01-2025 அன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு  தலைமையில், அனைத்துத்துறை அலுவலர்களுடனான முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சௌந்திரராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

News January 20, 2025

பொங்கல் பரிசு தொகுப்பை 42,764 பேர் வாங்கவில்லை

image

நீலகிரியில் பொங்கல் பரிசு தொகுப்பை 42,764 பேர் வாங்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. பச்சரிசி, வெள்ளை சர்க்கரை, கரும்பு மட்டுமே வழங்கப்பட்ட நிலையில், பந்தலூர் தாலுகாவில் 88 % பேரும், கூடலூரில் 86 % பேரும், கோத்தகிரி, குன்னூர், குந்தா, தாலுகாவில் 77 % பேரும் மட்டுமே வாங்கியுள்ளதாக, வட்ட வழங்கல் துறை அதிகாரிகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.1000 வழங்கியபோது 99% பேர் வாங்கியதாகவும் தகவல்.

error: Content is protected !!