Thenilgiris

News September 15, 2025

நீலகிரி: லஞ்சம் வாங்கிய எஸ்.எஸ்.ஐ சஸ்பெண்ட்!

image

நீலகிரி மாவட்டம், பந்தலுார் அருகே தேவாலா போலீஸ் நிலையத்தில் பணிபுரிபவர், எஸ்.எஸ்.ஐ.,ரங்கராஜ். இவர் ரோந்து வாகனத்தில் சுழற்சி முறையில் பணியாற்றி வருகிறார். செப்.7- இரவு, நாடுகாணி வழியாக கேரள மாநிலம், மலப்புரத்திற்கு காய்கறி கொண்டு செல்லும் லாரியை நிறுத்தி, டிரைவரிடம் லஞ்சம் வாங்கினார். இந்த வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வைரலானது. எஸ்.பி.,நிஷா விசாரணையில், ரங்கராஜ் நேற்று சஸ்பெண்ட் செய்யபட்டார்.

News September 15, 2025

கூடலூர்: உதகை தேசிய நெடுஞ்சாலையில் விபத்து

image

கூடலூர் அரசு மருத்துவமனை அருகே உதகை நோக்கி சுற்றுலாவிற்கு வந்த கேரளா பகுதியைச் சேர்ந்தவர்களின் வாகனம், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகிலுள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சிலர் படுகாயம் அடைந்துள்ளனர். பொதுமக்கள் உதவியால் அவர்களை அருகே உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

News September 14, 2025

நீலகிரி: ரூ.25,000 சம்பளத்தில் வேலை! APPLY NOW

image

நீலகிரி செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் உள்ள 25, Business Development Executive பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாத ஊதியமாக ரூ.15,000 – ரூ.25,000 வழங்கபடும். டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மற்றும் விண்ணப்பிக்க <>இங்கே கிளிக் <<>>செய்யவும். இதை வேலைதேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News September 14, 2025

நீலகிரி: சாலையோர கடைகள் அகற்ற உத்தரவு!

image

நீலகிரி மாவட்டம் குன்னூர் உழவர் சந்தை செல்லும் சாலையில் தற்போது சாலை பணிகள் நடைபெற்று வருவதால், இங்கு செல்லும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. மேலும் இச்சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள சாலையோர கடைகளை இரண்டு நாட்களில் அகற்ற வேண்டும் என்று நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதனால் வியாபாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

News September 14, 2025

நீலகிரி: அரசு சேவைகளை எளிதாக பெற கிளிக்!

image

அரசு திட்டங்களுக்கு தனித் தனி இணைய தளங்கள் உள்ளன. ஏதேனும் சேவை பெற இதில் விண்ணப்பித்து அத்தாட்சியுடன் அணுகினால் வேலை உடனடியாக முடியும்.
பதிவுத்துறை: https://tnreginet.gov.in/portal/index.jsp
பொது விநியோகம்: https://tnpds.gov.in/
உழவர் நலத்துறை: https://www.tnagrisnet.tn.gov.in/home/schemes/
மற்ற தளங்களை அறிய: <>கிளிக்<<>> செய்யவும். யாருக்காவது உதவும் அதிகம் SHARE பண்ணுங்க.!

News September 14, 2025

நீலகிரி: ரூ.30000 சம்பளம் நபார்டு வங்கியில் வேலை!

image

தமிழக நபார்டு வங்கி நிதிச்சேவை நிறுவனத்தில் காலியாக உள்ள கஸ்டமர் சர்வீஸ் ஆப்பீஸர் பணிக்கு ஆட்தேர்வு நடக்கிறது. காலிப்பணியிடங்களுக்கு நேர்காணல் நடக்கிறது. படிப்பு 12th போதும். 18 வயது முதல் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.30000 வரை. கடைசி தேதி: செப்.27. விண்ணப்பக் கட்டணம் இல்லை. மேலும், விவரம் மற்றும் ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கு<> கிளிக் <<>>செய்யும். இதை மற்றவர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.

News September 14, 2025

நீலகிரியில் முதியவரை தாக்கிய யானை!

image

நீலகிரி கூடலூர் அருகே முதுமலை புலிகள் காப்பகம், கார்குடி சரக எல்லைக்குட்பட்ட தெப்பக்காடு தேக்குபாடி பகுதியில் வசிப்பவர் மதன்குமார் (80). இன்று விடியற்காலை 3:30 மணிக்கு சிறுநீர் கழிக்க வீட்டிற்கு வெளியே சென்ற போது, யானை தாக்கியதில் காயமடைந்தார். அவரை உடனடியாக கார்குடி வனவர் மற்றும் ஊர் மக்கள் உதவியுடன் அவரை மீட்டு கூடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர்.

News September 14, 2025

நீலகிரி: திருடப்பட்ட பணத்தை மீட்பது ஈஸி!

image

நீலகிரி மக்களே உங்களுடைய யுபிஐ, வங்கி கணக்கு, ஆன்லைனில் பணம் மோசடி நடந்தது தெரிந்தால், திருடிய மர்ம கும்பலின் வங்கி கணக்கிற்கு மாறிய பணத்தை அவர்களால் எடுக்க முடியாமல் செய்ய முடியும். அதற்கு நீங்கள் 24 மணி நேரத்திற்கு 1930 இந்த எண்ணில் புகார் அளிக்கவும். மேலும், https://cybercrime.gov.in/ என்ற முகவரி வாயிலாகவும் புகார் அளிக்கலாம். இதை மற்றவர்களுக்கு உடனடியாக ஷேர் செய்யவும்.

News September 14, 2025

நீலகிரி மக்களே சொத்து, குடிநீர் வரி இனி சுலபம்!

image

நீலகிரி மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். இந்த லிங்கை <>கிளிக்<<>> செய்து அனைத்து சேவையையும் இதிலே பெறலாம். மேலும், இந்த சேவையைப் பெற உதவி தேவைப்பட்டால் 9884924299 என்ற உதவி எண்ணை அழைக்கலாம். இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். Share பண்ணுங்க.

News September 14, 2025

நீலகிரி: செப்.19ல் வேலை வாய்ப்பு முகாம்!

image

கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு கூறியிருப்பதாவது: நீலகிரி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலமாக தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் வரும் 19ம் தேதி அன்று மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறுகிறது. அனைத்து விதமான தகுதியாளர்களும் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 0423-2444004, 7200019666 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும். SHAREIT

error: Content is protected !!