India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நீலகிரி மக்களே, உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை கொண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உடனே செக் பண்ணுங்க. <

நீலகிரியில், தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச தையல் பயிற்சி விரைவில் வழங்கப்படவுள்ளது. 15 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில், தையல் தொடர்பாக அனைத்து நுட்பங்களும் கற்றுத்தரப்படவுள்ளது. இதற்கு 8வது படித்திருந்தால் போதுமானது. இதற்கு விண்ணப்பிக்க இந்த லிங்கை <

நீலகிரி மக்களே, யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC), துறையில் காலியாக Accounts Officer உள்ளிட்ட 213 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு டிகிரி முடித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.47,600 வழங்கப்படுகிறது. இப்பணிக்கு Recruitment Test, Interview அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் ஆக்.2 தேதிக்குள் <

ஊட்டி அரசு மருத்துவ கல்லுாரிக்கு, மின்னஞ்சல் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அறிந்து மருத்துவமனை நிர்வாகம் அதிர்ச்சியடைந்தது. உடனடியாக நீலகிரி எஸ்.பி அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இரண்டு மோப்ப நாய்கள் மற்றும் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் உட்பட போலீசார் சோதனை செய்ததில் வெடிகுண்டு எதுவும் இல்லை. மின்னஞ்சல் புரளி என்பதால் அனைவரும் நிம்மதி அடைந்தனர்.

நீலகிரி மாட்டம், முதுமலை புலிகள் காப்பகம், சீகூர் வனச்சரகத்திற்குட்பட்ட உப்பல்லா ஓடைப் பகுதியில், ஐந்து வயது மதிக்கத்தக்க பெண் புலி ஒன்று இறந்து கிடந்தது கண்டறியப்பட்டது. தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், வேறொரு புலியுடன் ஏற்பட்ட சண்டையில் தாக்கப்பட்டதால் அந்த புலி இறந்திருக்கலாம் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கூடலூர் அருகே ஓவேலி பகுதியில் பொதுமக்களை தாக்கிக் கொல்லும் காட்டு யானையை பிடிக்க தமிழ்நாடு முதன்மை தலைமை வன உயிரின பாதுகாவலர் ராகேஷ் குமார் டோக்ரா உத்தரவிட்டுள்ளார். முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர், மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு தலைமையில் கும்கி யானைகள் உதவியுடன் வனத்துறையினர் காட்டு யானையின் நடமாட்டத்தை கண்காணித்து பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

நீலகிரி கூடலூர் முழுவதும் வனவிலங்குகளால் ஏற்படும் மனித உயிர் மற்றும் உடைமைகள் இழப்புகளைக் கண்டித்து, நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டனப் போராட்டம் நடைபெற உள்ளது. வரும் (செப். 21) ஞாயிறன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கூடலூர் காந்தி திடலில் இந்த தொடர் முழக்கப் போராட்டம் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை நாம் தமிழர் கட்சியின் கூடலூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் செய்து வருகின்றனர்.

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் முகாம் நீலகிரி மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. நாளை ஊட்டி வட்டம் தும்மனாட்டி பகுதிக்கான முகம் கெந்தோரை அருகே உள்ள சமுதாய கூடத்திலும் நடைபெறுகிறது. பொது மக்கள் தங்கள் பகுதிக்கு அறிவிக்கப்பட்டுள்ள முகாம்களில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் மசினகுடி சீகூர் யானை வழித்தடத்தில் உள்ள 39தங்கும் விடுதி கட்டிடங்கள் விரைவில் இடிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தெரிவித்துள்ளார். யானைகள் வழித்தடத்தில் விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களை அகற்ற 2008ல் வழக்கு தொடரப்பட்டது. உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் 2018ல் 39 கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. தற்போது சென்னை உயர் நீதிமன்றம் அக்கட்டிடங்களை இடிக்க உத்தரவிட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம், உதகைக்கு வருகை புரிந்த தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை, திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி மாநில துணை செயலாளர் மு.வாசிம் ராஜா மற்றும் உதகை நகர மன்ற துணைத் தலைவர் ரவிக்குமார் ஆகியோர் அவரை வரவேற்றனர். பின்னர் திராவிட முன்னேற்ற கழக நிர்வாகிகளுடன் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
Sorry, no posts matched your criteria.