Thenilgiris

News February 2, 2025

நீலகிரி மாவட்டத்தில் ரூ.5.26 கோடியில் நலத்திட்ட உதவி

image

நீலகிரி மாவட்டத்தில் தாட்கோ (ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டு கழகம்) மூலம் 399 பேருக்கு, தொழில் முனைவோர் திட்டம், இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு திட்டம், மகளிர் சுய உதவிகளுக்கான பொருளாதார கடன் உதவி திட்டம், முதலமைச்சரின் ஆதிதிராவிடர், பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவு திட்டம் ஆகியவைக்கு ரூ.5.26 கோடியில் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

News February 2, 2025

ஊட்டி உருளை கிழங்கு இன்றைய விலை நிலவரம்

image

நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கம், விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு ஊட்டி உருளை கிழங்கை, தினசரி ஏலத்தின் மூலம் விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் இன்றைய ஏலத்தில் முதல் ரகம் ஒரு மூட்டை ஊட்டி உருளை கிழங்கு அதிகபட்சமாக ரூ.2,100 க்கும், குறைந்த பட்சமாக ரூ.1,350 க்கும் விற்பனையானது. இதில் மொத்தம் 425 மூட்டைகள் வரத்தாகின.

News February 2, 2025

நீலகிரி கிழக்கு மாவட்ட தவெக செயலாளர் நியமனம்!

image

தமிழக வெற்றிக் கழகத்தின் நீலகிரி கிழக்கு மாவட்ட (குன்னூர் தொகுதி, உதகமண்டலம் தொகுதி) செயலாளராக S.பாமா ரமேஷ் என்பவரை, அக்கட்சியின் தலைவர் விஜய் நியமித்துள்ளார். மேலும், மாவட்ட இணைச் செயலாளராக N.கணேஷ், பொருளாளராக A. ராஜேஷ் குமார், துணைச் செயலாளர்களாக V.ஆனந்த குமார் மற்றும் ஹீனா கௌசர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

News February 2, 2025

நீலகிரியில் இன்று செயல்படும்: விடுமுறை இல்லை

image

தமிழ்நாடு முழுவதும் இன்று (பிப்.2) பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. “காலை 10 மணி முதல் பொதுமக்கள் ஆவணப் பதிவு முடியும் வரை அலுவலகம் இயங்கும். ஞாயிற்றுக்கிழமை செய்யப்படும் ஆவணப் பதிவுக்கு, விடுமுறை நாள் கட்டணம் வசூலிக்கப்படும். பதிவுத்துறை அலுவலர்களுக்கு மாற்று விடுப்பு தரப்படும்” என  பதிவுத்துறை தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரியில் பத்திர பதிவு அலுவலகம் திறந்திருக்கும்

News February 1, 2025

உதகை: போக்குவரத்து தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

image

உதகை மத்திய பஸ் நிலையம் பகுதியில் AITUC மண்டல தலைவர் தங்கதுரை, CITU மண்டல செயலாளர் ரமேஷ் ஆகியோர் கூட்டு தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கோவை மண்டலத்தில் ஒப்பந்த பணியாளர்கள் நியமனத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. AITUC பொது செயலாளர் சையத் இப்ராஹிம் கவுரவ தலைவர் குணசேகரன், CITU மண்டல துணை பொது செயலாளர் கணேசன் மற்றும் ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.

News February 1, 2025

ஈட்டி மரம் வெட்டிய திமுக கவுன்சிலர் கைது

image

கூடலூர் வனச்சரகத்தில், தோட்டமூலா பகுதியில் உள்ள தனியார் நிலத்தில் ஆபத்தான மரங்களை வெட்ட, கூடலூர் கோட்டாட்சியரிடம் 7வது வார்டு கவுன்சிலர் சத்தியசீலன் மனு கொடுத்துள்ளார். கோட்டாட்சியர் ஆய்வு செய்து 2 மரங்களை மட்டும் வெட்ட அனுமதி வழங்கியுள்ளார். அந்த அனுமதி கடிதத்தை வைத்து அரியவகை பாதுகாப்பு பட்டியலில் உள்ள ஈட்டி மரத்தையும் சேர்த்து வெட்டியதாக தெரிகிறது. இந்நிலையில் வனத்துறையினர் அவரை கைது செய்தனர்.

News February 1, 2025

நீலகிரியில் கோழி கழிச்சல் தடுப்பூசி முகாம்

image

நீலகிரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள தகவலில், மாவட்டத்தில் கால்நடை பராமரிப்பு துறை கட்டுப்பாட்டில் கீழுள்ள கால்நடை மருத்துவமனைகள், கால்நடை மருத்தகங்கள், மற்றும் கால்நடை கிளை நிலையங்களின் மூலம் அனைத்து கிராமங்களிலும் இன்று (பிப்.1) முதல் வரும் 14 ஆம் தேதி வரை இரு வார கோழி கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. பொதுமக்கள் தங்களது கோழிகளுக்கு தடுப்பூசி போட்டு பயன்பெற வேண்டுமென கூறியுள்ளார்.

News January 31, 2025

துணை ராணுவத்தில் டிரைவர் வேலை

image

மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் (CISF) காலியாக உள்ள கான்ஸ்டபிள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. டிரைவர், ஆப்பரேட்டர் பிரிவில் 1,124 காலிப்பணியிடங்கள் உள்ளன. 10 வகுப்பு தேர்ச்சி தகுதி போதும். ரூ.21,700- ரூ.69,100 வரை சம்பளம் வழங்கப்படும். உடற்தகுதி தேர்வு, திறன் தேர்வு, எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தேர்வு செய்யப்படும். <>விண்ணப்பிக்க கிளிக்<<>>, SHARE பண்ணுங்க

News January 31, 2025

நீலகிரி மாவட்ட ஆட்சியர் தகவல்

image

மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் நீலகிரியில் வாழும் நலிந்த கலைஞர்களின் மரபுரையினர் நிதி உதவி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. சுற்றுலா மற்றும் பண்பாட்டு துறையின் மூலம் நலிந்த நிலையில் வாழும் கலைஞர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோருக்கு நலிந்த கலைஞர் நிதி உதவி திட்டத்தினை அரசு செயல்படுத்தி வருகிறது. மாதம் 3000 வீதம் அவர்களின் வாழ்நாள் முழுவதும் வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

News January 31, 2025

தடை செய்த புகையிலை விற்ற கடைக்கு சீல்

image

நீலகிரி ஓவேலி சூண்டி மரப்பாலம் பகுதியை சேர்ந்தவர் புண்ணிய மூர்த்தி (63). இவர் தனது கடையில் தமிழக அரசால் தடை செய்ய பட்ட புகையிலையை விற்பதாக நியூஹோப் போலீசுக்கு தகவல் வந்தது. இதன் பேரில் எஸ்எஸ்ஐ, கிருஷ்ணமூர்த்தி அங்கு சென்று புகையிலையை பறிமுதல் செய்து உணவு பாதுகாப்பு அதிகாரி உதவியுடன் சீல் வைத்தார்.

error: Content is protected !!