India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திமுக மாவட்ட பொறுப்பாளர்களை நியமித்து தலைமைக்கழகம் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஈரோடு, நீலகிரி, திருப்பூர், விழுப்புரம், மதுரை மாவட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கு திமுக மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அந்தவகையில், நீலகிரி மாவட்ட பொறுப்பாளராக கே.எம்.ராஜு நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்திய அரசின் கோல் இந்தியா நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 434 மேனேஜ்மெண்ட் டிரைய்னி பணியிடங்கள் உள்ளன. கணினி வழி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ரூ.50,000 – ரூ.1,60,000 வரை சம்பளம் வழங்கப்படும். 1 வருட பயிற்சிக்கு பின்னர் ரூ.60,000 – ரூ.1,80,000 வரை சம்பளம் நிர்ணயிக்கப்படும். நாளைக்குள் (பிப்.14) <
பந்தலூர் அருகே வெள்ளேரி சொரியான் காப்பு கிராமத்தை சேர்ந்தவர் மானு (47), இவரது மனைவி சந்திரிகா (38.) இருவரும் ஆட்டோவில் வயநாடு, காப்புகாடு கிராமம் அருகே இறங்கி நடந்து சென்றபோது எதிரே வந்த யானை தாக்கியதில் மானு அதே இடத்தில் உயிரிழந்தார். மனைவி ஓடி உயிர் தப்பினார். தகவல் அறிந்த வனத்துறை ஆய்வு மேற்கொண்டனர்.
கேரளா மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்தவர் ஆதர்ஷ் (39), கேரளா மாநிலத்தில் போலீசாக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளன. தொழில் நஷ்டத்தால் ஊட்டிக்கு வந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலின் பேரில் ஊட்டி பி1 இன்ஸ்பெக்டர் முரளிதரன், எஸ்ஐ சுரேஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் இன்று (12.02.2025) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள், உதகை நகரம் ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.
உதகையில் 150 ஆண்டுகளாக பிரிக்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி செயல்படுகிறது. மாவட்ட ஆட்சியர் தலைவராக உள்ள இந்த பள்ளியில் விடைத்தாள் வாங்க பணம் இல்லாத காரணத்தால் 10- ம் வகுப்புக்கான திருப்புதல் தேர்வை ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் கொதிப்படைய செய்திருக்கிறது. இந்த விவகாரம் மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
பந்தலூர் பெருங்கரை பகுதியில் எதிரே வந்த டிப்பர் லாரி மீது ஜீப் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில், அத்திமாநகர் பகுதியைச் சேர்ந்த மகேஸ்வரி (45), நெல்லியாளம் பகுதியை சேர்ந்த, 14 வயது பெண், டிரைவர் ராஜேந்திரன் (55) ஆகியோர் காயம் அடைந்தனர். மூவருக்கும் பந்தலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சாலை விபத்து காரணமாக, உப்பட்டி- பந்தலுார் இடையே 40 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம் அருவங்காடு ஜெகதலா பேரூராட்சிக்கு உட்பட்ட காந்திநகர் பகுதி மக்கள், வெடி மருந்து தொழிற்சாலை குடியிருப்பு பகுதிக்கு அருகில் உள்ள பொதுமக்கள் பயன்படுத்தும் நடைபாதையை, தொழிற்சாலை நிர்வாகத்தினர் கொரோனா பேரிடர் காலகட்டத்தில் அடைத்து 5 ஆண்டு காலத்திற்கு மேலாகியும் திறக்கப்படவில்லை என்று கூறி, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.
நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கம், விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, ஊட்டி உருளை கிழங்கை தினசரி ஏலத்தின் மூலம் விலை நிர்ணயம் செய்து வருகிறது. அதன்படி இன்று முதல் ரகம் ஒரு மூட்டை அதிகபட்சமாக ரூ.1720 க்கும், குறைந்த பட்சம் ரூ.1310 க்கும் விற்பனை ஆனது. இதில் மொத்தம் 400 மூட்டை விற்பனைக்கு வந்துள்ளன.
சேரங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட ஐயன்கொல்லி அடுத்து நூல்புழ பகுதியை சேர்ந்த மனு மற்றும் அவரது மனைவி இருவரின் நேற்று தினம் இரவு முதல் காணவில்லை என்று தேடிவந்த நிலையில், அருகே உள்ள வனப்பகுதியில் மனு என்பவரை யானை தாக்கி மரணம் அடைந்த நிலையில் காணப்பட்டார். மேலும் இவருடன் இருந்த இவரின் மனைவியை வனத்துறை தேடும் பணி ஈடுபட்டு வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.