Thenilgiris

News February 16, 2025

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

image

உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில், வரும் 21ஆம் தேதி காலை 11 மணி அளவில், மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறை தீர்ப்பு முகம் நடைபெறுகிறது . இதில் அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள் 4 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், குடும்ப அட்டை அசல் மற்றும் நகல், ஆதார் அட்டை அசல் மற்றும் நகலுடன் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரூ தெரிவித்துள்ளார்.

News February 16, 2025

நீலகிரி மக்களுக்கு கலெக்டர் சொன்ன குட் நியூஸ்!

image

நீலகிரி முதன்மை கல்வி அதிகாரி, நீலகிரியில் உள்ள எந்த ஒரு அரசு தொடக்க பள்ளியும் மூடப்படவில்லை என அறிவிப்பு. மேலும் நீலகிரி கலெக்டரும் எந்த ஒரு அரசு ஆரம்ப பள்ளியும் மூடப்பட மாட்டாது என்று தெரிவித்துள்ளார். முன்னதாக 85 பள்ளிகள் மூடப்படும் என அறிவிப்பு வெளியான நிலையில், மத்திய அமைச்சர் எல்.முருகன், எந்தப் பள்ளியையும் மூடக்கூடாது என வலியுறுத்திய நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

News February 16, 2025

நீலகிரியில் கலப்படம்: கலெக்டர் அதிரடி உத்தரவு

image

நீலகிரியில் இத்தலார் உள்ளிட்ட இடங்களில் கேரட் விளைகிறது. இந்நிலையில் கர்நாடகா மாநிலத்திலிருந்து கேரட் கொண்டுவரப்பட்டு ஊட்டி கேரட்டுடன் கலப்படம் செய்து பயன்படுத்தப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து தோட்டக்கலை இணை இயக்குநர் தலைமையில் தனி குழு அமைத்து ஏழு நாட்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

News February 16, 2025

நீலகிரி: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம் 

image

நீலகிரி மாவட்டத்தில் இன்று (15.02.2025) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. உதகை நகரம் ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.

News February 15, 2025

நீலகிரி: பிரசவித்த தாய்மார்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்!

image

பிரசவித்த தாய்மார்கள், சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும். தினமும் 2 லிட்டர் முதல் 3 வரை தண்ணீர் குடிக்க வேண்டும். தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்ளுதல் நலம். இதனால் ஆட்சியரை இரத்த உறவை தடுக்க முடியும். 8 மணி நேரம் உறக்கம் அவசியம், குழந்தைக்கு 2 மணி நேரத்துக்கு ஒரு முறை தாய் பால் புகட்ட வேண்டும், குழந்தைக்கு 6 மாதங்கள் வரை கட்டாயமாக தாய் பால் கொடுக்க வேண்டும் உள்ளிட்ட வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

News February 15, 2025

சைரன் சப்தம்: அலறி ஓடிய தொழிலாளர்கள்

image

கேத்தி அருகே அருவங்காடு வெடி மருந்து தொழிற்சாலை சிடி பிரிவில் வழக்கம் போல் நேற்று பணி நடைபெற்று கொண்டு இருந்தது. அப்போது மின் மோட்டார் அதிக அளவு சூடு ஏறியதால் நிர்வாகத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. சிறிது நேரத்தில் மின் மோட்டாரில் தீ ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த தானியங்கி சைரன் ஒலிக்க தொடங்கியதால், தொழிலாளர்கள் அலறியடித்து ஓடினர், தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை கட்டுப்படுத்தினர்.

News February 15, 2025

நீலகிரியில் 85 பள்ளிகளை மூடாதீங்க: மத்திய அமைச்சர்

image

நீலகிரி மாவட்டத்தில் 85 அரசு தொடக்கப் பள்ளிகளை மூடும் நடவடிக்கையை அரசு கைவிட வேண்டும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அரசின் முடிவால் விளிம்பு நிலை மக்களின் கல்வி, குழந்தைகளின் அடிப்படை உரிமை தடைபடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏழை, எளிய மக்களின் கல்விக் கனவை தகர்த்தெறியும் நடவடிக்கையை உடனே நிறுத்த வேண்டும் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

News February 14, 2025

வாழ்த்து பெற்ற நீலகிரி மாவட்ட பொறுப்பாளர்

image

நீலகிரி மாவட்ட திமுக பொறுப்பாளராக தலைமை கழகத்தால் அறிவிக்கப்பட்டுள்ள கே.எம்.ராஜு இன்று தமிழக அரசு தலைமை கொறடா கா.இராமசந்திரனுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார். மாவட்ட அவை தலைவர் போஜன், முன்னாள் ஒன்றிய செயலாளர் வீரபத்திரன், திமுக பொது குழு உறுப்பினர்கள், மாவட்ட பிரதிநிதிகள் ஒன்றிய செயலாளர் மற்றும் கழகத்தினர் உடன் இருந்தனர்.

News February 14, 2025

அஞ்சல் துறையில் வேலை… உடனே அப்ளை பண்ணுங்க

image

அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் மட்டும் 42 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச் 3ஆம் தேதிக்குள்<> விண்ணப்பிக்க வேண்டும்.<<>> ஷேர் பண்ணுங்க

News February 14, 2025

சுற்றுலா தலங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு

image

காதலர் தினத்தை முன்னிட்டு, நீலகிரி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில், பாதுகாப்பு பணியில் கூடுதல் போலீசார் ஈடுபட முடிவு செய்துள்ளனர். பூங்கா, சுற்றுலா தளங்களுக்கு வரும் காதலர்களிடம் அத்துமீறாமல் இருக்கவும், அதேசமயம் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் காதல் ஜோடிகளை தொந்தரவு செய்யாத வண்ணம் பாதுகாப்பு பணிகளில், கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ரோந்து பணிகளில் ஈடுபடவுள்ளனர்.

error: Content is protected !!