India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கடந்த சில நாட்களுக்கு முன்பு நீலகிரியில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகையை தகாத வார்த்தைகளால் பேசியதாகக் கூறப்படுகிறது. இதைக் கண்டித்து, இன்று (செப் 26) ஊட்டி காங்கிரஸ் எம்எல்ஏ கணேஷ் தலைமையில் காங்கிரஸார் திரளாக வந்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

நீலகிரி மாவட்டத்தில் இன்று (26.09.2025) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உதகை நகரம் ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை முடியும் நிலையில், இன்று பந்தலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு மணி நேரம் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவர்கள் மழையில் நனைந்து சிரமப்பட்டனர். பல இடங்களில் ஆட்டோக்கள் ஓடாததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மழையால் சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியது.

நீலகிரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில், 2026 ஜூலை மாதம் நடத்தப்படவுள்ள கைவினைஞர் பயிற்சித் திட்ட அகில இந்தியத் தொழில் தேர்வுக்கான தனித் தேர்வர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான நபர்கள் விவரங்களுக்கு www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்

நீலகிரி மக்களே, ஜி.எஸ்.டி. (GST)தொடர்பான புகார்கள் இருந்தால், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நீங்கள் நேரடியாக புகார் அளிக்கலாம். இதற்காக, தேசிய நுகர்வோர் உதவி மையம் வெளியிட்டுள்ள இலவச தொலைபேசி எண்கள்: 1800-11-4000 அல்லது consumerhelpline.gov.in என்ற இணையதளத்திலும் ஜி.எஸ்.டி. குறித்து உங்கள் புகார்களைப் பதிவு செய்யலாம்.இதை மற்றவர்களுக்கு SHAREபண்ணுங்க.

முதலமைச்சர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு மேம்பாட்டு ஆணைய நீலகிரி மாவட்டப் பிரிவு சார்பில் நாளை காலை 8 மணிக்கு சைக்கிள் போட்டி நடைபெறுகிறது. பஸ் நிலையம் முதல் மான் பூங்கா வரை பள்ளி மாணவ, மாணவியருக்கான இந்தப் போட்டி இரண்டு பிரிவாக நடக்கிறது. இதில் வெற்றி பெறுவோருக்கு முறையே ரூ.5000, ரூ.3000, ரூ.2000 ரொக்கப் பரிசுகளும், 4 முதல் 10 இடங்களைப் பெறுவோருக்கு தலா ரூ.250 வழங்கப்படும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக ஏற்கனவே சுற்றுப்பயணம் அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். அதில் சில மாற்றங்கள் செய்து மீண்டும் மறு பயண திட்ட விவர அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக வருகின்ற 2026 பிப்.14ஆம் தேதி வருகை தர இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மக்களே, உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை கொண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உடனே செக் பண்ணுங்க. இந்த தளத்தில் உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை (VOTER ID) டைப் செய்து <

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகள் AAY, PHH, NPHH-S, NPHH என நான்கு வகையில் உள்ளது.
AAY : இலவச அரிசி (35 கிலோ), சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்
PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்
NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம் NPHH: சில பொருட்கள் மட்டும்..உங்க ரேஷன் அட்டைகள் மாற்றம் செய்ய இங்கு <

நீலகிரி மாவட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையில் காலியாக உள்ள Data Entry Operator, Physiotherapist பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு சம்பளமாக மாதம் ரூ.13,500 வழங்கப்படும். எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இங்கே <
Sorry, no posts matched your criteria.