India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தேவர்சோலையில் கடந்த சில மாதங்களாக யானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, நேற்று இரவு தேவர்சோலை 8 மைல் பகுதியில் கடை வைத்திருந்த உத்திரபாண்டி மளிகைக் கடையின் மேற்கூரையை யானை உடைத்து சேதப்படுத்தியது. இச்சம்பவத்தால் அப்பகுதி வியாபாரிகள், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இதையடுத்து, இரவு நேரங்களில் வனத்துறையினர் ரோந்து பணியில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

நீலகிரி மக்களே, ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு <

நீலகிரி மக்களே, மாதம் ரூ.64,820 முதல் ரூ.1,20,940 வரை சம்பளத்தில் இந்தியன் வங்கியில் காலியாக உள்ள 171 Specialist Officers பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இந்த பணியிடத்திற்கு B.Tech., B.E., M.E., CA., M.Sc., MBA., MCA., உள்ளிட்ட பட்டப்படிப்புகளை முடித்த 23 முதல் 36 வயதுக்கு உட்பட்டவர்கள், <

நீலகிரி மக்களே, பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கத்திடமிருந்து கடன் வாங்கி கொடுப்பது VAO-வின் வேலையாகும். இவற்றை முறையாக செய்யமால் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்பு துறையில் (0423-2443962) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

நீலகிரி மக்களே உங்க கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர்கள் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) இந்த எண்ணில் வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே உடனே கேஸ் வந்துடும். இதை SHARE பண்ணுங்க!

நீலகிரி மக்களே மத்திய அரசு உளவுத்துறையில் காலியாகவுள்ள 455 காவல் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு 12- வகுப்பு தேர்ச்சி போதுமானது. மாத சம்பளமாக ரூ.21,700 முதல் ரூ.69,100 வழங்கப்படுகிறது. இது குறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <

நீலகிரி மக்களே வீடுகளில் சூரிய ஒளி மின்தகடு பொருத்தினால் 300 யூனிட் வரை இலவச மின்சாரம், ரூ.78,000 வரை மானியம் பெறலாம்;<

அக். 2 காந்தி ஜெயந்தி அன்று, அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகள் (ம) பார்கள் மூடப்படும் என நீலகிரி மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா அறிவித்துள்ளார்.மீறி மதுபானம் விற்பனை செய்யப்பட்டால், ஊட்டி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் 0423 2223802; மாவட்ட உதவி ஆணையர் (ஆயம்) 0423 2443693; குன்னூர் எடப்பள்ளி டாஸ்மாக் மாவட்ட மேலாளர், 0423 2234211 ஆகிய எண்களில் தெரியப்படுத்தலாம்.SHAREit

முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி கோட்டம், தெங்குமரஹாடா பகுதியில் வனப் பணியாளர்கள் ரோந்து சென்றபோது, நீலகிரி கிழக்கு சரிவு காப்புக்காடு பகுதியில் பெண் யானை ஒன்று இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உயர் அதிகாரிகளுக்குத் தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், பிரேத பரிசோதனைக்குப் பிறகு அதே பகுதியில் அந்த யானை புதைக்கப்பட்டது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு நீலகிரியில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகையை தகாத வார்த்தைகளால் பேசியதாகக் கூறப்படுகிறது. இதைக் கண்டித்து, இன்று (செப் 26) ஊட்டி காங்கிரஸ் எம்எல்ஏ கணேஷ் தலைமையில் காங்கிரஸார் திரளாக வந்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
Sorry, no posts matched your criteria.