India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நீலகிரி மாவட்டத்தில் இன்று (01.03.2025) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உதகை நகரம் ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.
பந்தலூர் அருகே தேவாலப் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வரும் மாணவி, நேற்று தனது வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவ இடத்திற்கு தேவால போலீசார் சென்று உடலை மீட்டு பந்தலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தேவாலா காவல் நிலைய பொறுப்பு இன்ஸ்பெக்டர் துரைப்பாண்டி வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டுள்ளார்.
நீலகிரி மாவட்டம், உதகை, முத்தோரை ரேடியோ வானிலை மையத்தில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு பார்வையிட்டார். தொடர்ந்து இஸ்ரோ விஞ்ஞானி க்ரிஷ் உரையாற்றிய நிகழ்வினில் பங்கேற்றார். இதில் பள்ளி மாணவ, மாணவியர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
சேரங்கோடு ஊராட்சி படச்சேரி பகுதியை சார்ந்த இன்பசேகர். கேரள மாநிலம் காசர்கோடு பகுதியில் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வருகிறார். இவர் டிஜிட்டல் நில அளவை திட்டத்தை சிறப்பாக செயலாற்றியதால் இவருக்கு கேரளா அரசின் சிறந்த மாவட்ட ஆட்சியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார். பின்னர் நேற்று கேரளா முதல்வர் பினராயி விஜயன் பாராட்டி சான்றிதழ் வழங்கி கௌரவப்படுத்தினார்.
அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச் 3ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணபிக்க இங்கே<
கோடநாடு வழக்கில் தொடர்புடைய கணினி ஆப்ரேட்டர் தினேஷ் தற்கொலை தொடர்பாக சிபிசிஐடி போலீசார் நேற்று விசாரணை நடத்தினர். தற்கொலை வழக்கு தனி வழக்காக விசாரிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக சங்கரன், சுரேஷ், கபீர் ஆகிய மூவருக்கு சம்மன் அனுப்பி நேற்று விசாரணை நடைபெற்றது. டிஎஸ்பி அண்ணாதுரை மூவரிடமும் விசாரணை நடத்தினார்.
நீலகிரி ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு கூறுகையில், ‘ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சி மொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் மார்ச் 6, 7 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் வாரியம், அரசு துறை பணியாளர்கள், தன்னாட்சி பணியாளர்கள், உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர் போன்றோர் பங்கேற்க வேண்டும்,’ என்று தெரிவித்தார்.
கூடலூரைச் சேர்ந்த ராஜன் என்பவர் தனது இரு சக்கர வாகனத்தில் நாடுகாணியை நோக்கி நேற்று சென்று கொண்டு இருந்தார். இரும்பு பாலம் அருகே சாலையை கடக்கும் போது குறுக்கே ரோட்டை கடக்க முயன்ற சிறுத்தை ஒன்று எதிர்பாரதவிதமாக பைக்கில் மோதி நடுரோட்டில் மயங்கி விழுந்தது. பின்னர் சிறிது நேரம் மயக்கத்தில் கிடந்த சிறுத்தை, மயக்கம் தெளிந்து திடீரென காட்டுக்குள் ஓடியது பார்வைகளைப் அசத்தியது.
நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கம் தனது விவசாய உறுப்பினர்களின் நலனை கருத்தில் கொண்டு தினசரி பொது ஏலத்தின் மூலம் ஊட்டி உருளை கிழங்கை விற்பனை செய்து வருகிறது. இதன்படி இன்றைய ஏலத்தில் முதல் ரகம் ஒரு மூட்டை அதிக பட்சமாக ரூ.1600 க்கும், குறைந்த பட்சமாக 1150 க்கும் விற்பனை செய்ய பட்டது. இன்று மொத்தம் 150 மூட்டை வந்தன.
பொதுத்துறையை சேர்ந்த யூனியன் வங்கியில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘அப்ரென்டிஸ்’ பிரிவில் தமிழகம் முழுவதும் 122 காலிப் பணியிடங்கள் உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க எதாவது ஒரு பட்டப்படிப்பு படித்திருந்தால் போதும். 20 -28 வயது உடையவராக இருக்க வேண்டும். மாதம் ரூ.15,000 வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் வரும் மார்ச் 5ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.