India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பந்தலுார் அருகே நாடுகாணி பகுதியில் கைது செய்யப்பட்ட வேட்டை கும்பல், தமிழகம் மற்றும் கேரளாவில் தொடர் வேட்டையில் ஈடுபட்டு வருவதாக, வனத்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர்களது காரில் இரு மாநில நம்பர் பிளேட் இருந்துள்ளது. தொடர்ந்து கேரள மாநிலம் வழிகடவு பகுதியை சேர்ந்த ரெஜி, ரஹமத் அலி,37, ஆகியோரை வனத்துறையினர் கைது செய்தனர்.மேலும் அவர்களிடம் இருந்து கார், துப்பாக்கி தோட்டா பறிமுதல் செய்தனர்.
நீலகிரி மலை ரயில் மார்ச் 28ஆம் தேதி முதல் ஜூலை 6ஆம் தேதி வரை வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில்,, மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு சிறப்பு மலை ரயில் இயக்கப்படவுள்ளது. மறு மார்க்கமாக உதகையிலிருந்து மேட்டுப்பாளையத்திற்கு மார்ச் 29ஆம் தேதி முதல் ஜூலை 7ஆம் தேதி வரை சனி மற்றும் திங்கட்கிழமைகளில் சிறப்பு மலை ரயில் இயக்கப்படும்.
நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு வெளியிட்ட செய்தியில், தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு ‘ஓய்வூதியர் குறைதீர் நாள் கூட்டம் நாளை (6.3.2025) காலை 10.30 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக அரங்கில் நடைபெற உள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.
நீலகிரி மாவட்ட வளர்ச்சி திட்டங்கள் மற்றும் பல்வேறு புதிய அறிவிப்புகளை அறிவிக்கவும், மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை திறந்து வைக்கவும், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்க ஏப்ரல் 2வது வாரத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உதகைக்கு வருகை தரவுள்ளார். இதுகுறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் எம்பி ஆராசா, மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நீலகிரியில் தொழிலாளர் நலன் துறை, மாவட்ட வேலை வாய்ப்பு துறை, மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் நீலகிரி நிர்வாகம் இணைந்து நடத்தும் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம், ஊட்டி அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் (8.3.2025) அன்று காலை 9 முதல் மாலை 5 மணிவரை நடைபெறுகிறது. இதில் 8-ம் வகுப்பு முதல் பட்டபடிப்பு வரை படித்தவர்கள் பங்கேற்கலாம் என்று கலெக்டர் அறிவித்துள்ளார். இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!
குன்னுார் நகராட்சிக்கு சொந்தமான கடைகளை இடித்து கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் “2026 தேர்தலை முன்வைத்து, மார்க்கெட் கடைகள் இடிக்க, 2 ஆண்டுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது,’ என்ற தகவல் வியாபாரிகள் மத்தியில் பரவியதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.கமிஷனர் இளம்பரிதி கூறுகையில், ”இதுவரை ஒத்திவைப்பது என்ற எந்த அறிவிப்பும் வரவில்லை. இது வதந்தியாகும். அரசின் திட்டத்தின்படி பணிகள் நடக்கும்,” என்றார்.
நீலகிரி மாவட்டம், தேவர் சாலை பேரூராட்சியில் போஸ்பாரா முதல் செம்பக்கொல்லி வரை, தமிழ்நாடு நகர்ப்புற சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 2.96 கோடி மதிப்பீட்டில், 3.29 கிலோமீட்டர் தூரம் புதிதாக தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரூ தலைமையில், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. இராசா பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இன்று திறந்து வைத்தார்.
உதகை, கொடைக்கானல் போன்ற இடங்களுக்கு மின்சார பேருந்துகள், கண்ணாடி பேருந்துகளை இயக்கலாம் என்றும், கண்ணாடி பேருந்து வசதிகள் செய்து தருவதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் என்றும் தமிழக அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் யோசனை வழங்கியுள்ளது. சுற்றுலா வாகனங்கள் வருகையை கட்டுப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் யோசனையை வழங்கியுள்ளது.
ஊட்டியில் இருந்து குன்னூர் நோக்கி ராஜா என்பவர் தனது குடும்பத்தினருடன் காரில் சென்று கொண்டு இருந்தார். இந்த நிலையில் கேத்தி அருகே வேலி வியூ பகுதியில் சென்றபோது காரில் இருந்து புகை வந்தது. உடனே சுதாரித்து கொண்ட ராஜா குடும்பத்துடன் கீழே இறங்கி, தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். அதற்குள் கார் முழுவதும் எரிந்து கருகியது.
பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வை ஊட்டி, குன்னுார் மற்றும் கூடலுார் கல்வி மாவட்டங்களில் உள்ள 41 மையங்களில், 2,925 மாணவர்கள் மற்றும் 3,395 மாணவிகள் என, மொத்தம் 6,320 பேர் தேர்வு எழுத தகுதி பெற்றனர். மொழிப் பாட தேர்வான முதல் நாளில், 6,224 பேர் பங்கேற்று தேர்வெழுதினர். 76 பேர் முதல் நாள் தேர்வுக்கு வரவில்லை. 20 பேர் விலக்கு பெற்றிருந்தனர்.
Sorry, no posts matched your criteria.