India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
உதகை மலைப்பகுதி மேம்பாட்டுத்திட்ட திறந்தவெளி விளையாட்டு அரங்கில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் முதலமைச்சர் கோப்பை – 2024 மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் இன்று தொடங்கியது. சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் கால்பந்து போட்டியை தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரூ , நகரமன்ற துணை தலைவர் ரவிக்குமார் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
நீலகிரி, உதகை தலைகுந்தா அருகே உள்ள காமராஜர் அணை தனது முழு கொள்ளளவான 118 அடியை எட்டியுள்ளது. கடந்த சில நாட்களாக அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக தற்போது அணை முழுவதுமாக நிரம்பியுள்ளது. முதுமலை வனவிலங்கு சரணாலய விலங்குகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது காமராஜர் அணை என்பது குறிப்பிடத்தக்கது.
கோத்தகிரி, தெங்குமரஹாடா அருகே அல்லி மாயார் கிராமத்தின் பழங்குடியினர் தலைவர் ரங்கசாமி நேற்று (9 தேதி) உதகையில் மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்னீரூ-விடம் மனு அளித்தனர். அதில், தங்களுடைய விவசாய உபகரணங்கள் (ம) வீடு சீரமைப்பு செய்ய தேவையான பொருள்களை கொண்டு செல்ல பவானிசாகர் வன சோதனை சாவடியில் தடை விதித்து பொருள்கள் பறிமுதல் செய்கின்றனர். இதற்கு தீர்வு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.
கூடலூர், தொரப்பள்ளி அருகே தேன்வயல் என்ற இடம் உள்ளது. அங்கு இரண்டு காட்டு யானைகள் கடந்த ஒரு வாரமாக அட்டூழியம் செய்து வருகின்றன. நேற்று மாக்க மூலா என்ற இடத்தில் செரியன் என்பவருக்கு சொந்தமான 10 பாக்கு மரங்கள் மற்றும் வாழை மரங்களை நாசம் செய்தன. வன பணியாளர்கள் சென்று பட்டாசு வெடித்து விரட்டினர். மீண்டும் அந்த யானைகள் அந்தப் பகுதியில் வலம் வருகின்றன. இதனால் இப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
சிவகங்கை, சிங்கம்புணரி கிராமத்தை சேர்ந்த ராஜபாண்டி(31) என்பவர் கடந்த 2020 அக்டோபர் மாதம் 5 ம் தேதி கோத்தகிரி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை பலாத்காரம் செய்து போக்சோ வழக்கில் கைதாகி சிறையில் இருந்தார். இந்த வழக்கில் ஊட்டி மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறை மற்றும் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து இன்று தீர்ப்பளித்தார். பின் அவர் கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.
நடிகர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் இன்று ஊட்டி வந்தார். அவரிடம் நடிகர் விஜய் மாநாடு குறித்து கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கையில், ‘2005 இல் மதுரையில் நடந்த தேமுதிக மாநாட்டில் பங்கேற்ற 35 லட்சம் பேருக்கும் சாப்பாடு வழங்கப்பட்டது. தற்போது நடிகர் விஜய் நடத்தும் மாநாட்டை பார்த்த பிறகே கருத்து கூற முடியும்’ என தெரிவித்தார்.
நீலகிரி, உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை அமைச்சர்.கா.ராமச்சந்திரன் கலந்து கொண்டு, 388 மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சார்ந்த 766 பயனாளிகளுக்கு ரூ.37.35 கோடி மதிப்பில் கடனுதவிகளை வழங்கினார். இந்நிகழ்வில் அரசு அதிகாரிகள் (ம) துறை சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.
கோத்தகிரி அருகே உள்ள கோடநாடு கர்சன் வேலி கிரீன் டீ எஸ்டேட் தோட்டத்தில், கடந்த 6ஆம் தேதி தேயிலை பறித்துக்கொண்டிருந்த தோட்டத்தொழிலாளர்கள் ஆறு பேரை குளவி கொட்டியது. இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஜமுனா குமாரி என்பவர் இன்று உயிரிழந்தார். இதுகுறித்து சேலூர்மட்ட காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் கன்டோன்மென்ட் விளையாட்டு மைதானத்தில், தேசிய சிலம்பம் பள்ளிகள் கூட்டமைப்பு மற்றும் வஜ்ரம் விளையாட்டு மேம்பாட்டு கூட்டமைப்பு சார்பில் நேற்று சிலம்பம் சுற்றும் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 1,200 மாணவ மாணவியர் 78 நிமிடம் 24 வினாடி நேரம் விடாமல் சிலம்பம் சுற்றி ராயல் புத்தகம் உலக சாதனை நிகழ்த்தப்பட்டது.
நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் சாலையோரம் நிற்கும் வனவிலங்குகளுக்கு உணவு அளித்து வருகின்றனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில் “வனப்பகுதியில் வாகனங்களை நிறுத்துவது, உணவு சமைப்பது மற்றும் வனவிலங்குகளை உணவு அளிப்பது வனச்சட்டத்தின் படி குற்றச் செயல்களாகும். இந்த செயல்களில் வரம்பு மீறும் நபர்கள் மீது வரும் நாட்களில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.