India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நீலகிரி மாவட்டத்தில், ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலுார் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில், 35 ஊராட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. 29ம் தேதி மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து கிராம ஊராட்சிகளில் காலை, 11:00 மணிக்கு கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், கிராம ஊராட்சி பொதுமக்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
நீலகிரி மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் ஓட்டுநர், மெடிகல் ஆபிசர் உள்ளிட்ட பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 12ஆம் வகுப்பு முதல் டிகிரி முடித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.13,000 முதல் 60,000 வரை வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு இங்கே<
நீலகிரி, கவர்னர் சோலை பகுதியில் உள்ள கொல்லகோடு மந்தையைச் சேர்ந்த கேந்தர் குட்டன் என்பவர் நேற்று புலி தாக்கி உயிரிழந்தார். இந்தநிலையில் உயிரிழந்த கேந்தர் குட்டன் குடும்பத்திற்கு, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார். மேலும் ரூ.10 லட்சம் நிதியுதவியையும் அறிவித்துள்ளார். இதற்கான காசோலையை ந்தர் குட்டன் குடும்பத்திற்கு வனத்துறையினர் வழங்கினர்.
பந்தலூர் அருகே பேரி அக்ரோ தனியார் தேயிலை தோட்டத்தில் சிறுத்தை குட்டி கடந்த வாரம் உயிரிழந்தது. இந்நிலையில் இதே தேயிலை தோட்டத்தில் நேற்று மீண்டும் ஒரு சிறுத்தை குட்டி உயிரிழந்து கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் வந்தது. இதன் அடிப்படையில் வனச்சரகர் சஞ்சீவி தலைமையில் கால்நடை டாக்டர் உடல் கூராய்வு செய்து விசாரிக்கிறார்.
கோடை காலம் முன்னரே நீலகிரியில் குடிநீர் கேன்கள் விற்பனை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்தநிலையில் குடிநீர் கேன்களை அதிகமுறை பயன்படுத்தும் போது அதில் உள்ள மைக்ரோ பிளாஸ்டிக் தண்ணீரில் கலந்துவிடும் அபாயம் உள்ளது. எனவே ஒரு குடிநீர் கேனில் 30 முறை மட்டுமே மறுசுழற்சி செய்து குடிநீரை நிரப்பவேண்டும் என உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளார். இதை ஷேர் செய்யுங்கள்.
“மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது.இதன் காரணமாக இன்று (27-03-2025) நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.(Share செய்யவும்)
கூடலூர் வன கோட்டம் பந்தலூர் வனச்சரகத்திற்குட்பட்ட பந்தலூர் பகுதிக்கு உட்பட்ட பாரி அக்ரோ தேயிலை தோட்டம் செம்மண் வயல் பகுதியில் சிறுத்தை குட்டி ஒன்று இறந்து கிடப்பதாக தகவல் வனத்துறைக்கு கிடைத்ததை அடுத்து வனப்பணியாளர்கள் தணிக்கை செய்து மாவட்ட வன அலுவலருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் இறப்பு குறித்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் படுகர் இன மக்கள் ஆண்டுதோறும் டிசம்பர், ஜனவரி மாதங்களில் ஹெத்தையம்மன் பண்டிகையை கொண்டாடுகின்றனர். ஜெகதளாவில் கொண்டாடும் இந்த பண்டிகை சிறப்பு வாய்ந்தது. 48 நாட்கள் விரதம் மேற்கொண்ட ஹெத்தைக்காரர்கள், தாய் வீடான கொதுமுடி கோவிலுக்கு பாரம்பரிய உடை மற்றும் செங்கோலுடன் நடைபயணம் மேற்கொண்டு , அருள்வாக்கு கூறுவர். ஷேர் செய்யவும்.
வெலிங்டன் ஆற்றில் ஒன்பது டன் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் கரும்பாலம் பகுதியில் இருந்து பிருந்தாவன் வரை ஆறுகள் தூர் வாரும் பணி நடைபெற்றது. இதில் ஒன்பது டன் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக வெலிங்டன் பாளைய வாரிய அதிகாரி தெரிவித்துள்ளார். தற்போது பெய்த கனமழையில் மழைநீர் ஆறுகளின் சீராக செல்வதாக அவர் தெரிவித்தார்.
ஊட்டி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஏப். 6 இல் தமிழ்நாடு முதல்வரால் திறக்கப்பட உள்ளது. இந்த நிலையில், மருத்துவ கல்லூரி டீன் கீதாஞ்சலி கூறுகையில், “மருத்துவ மனையில் 415 பேர் பணியில் இருக்க வேண்டும், ஆனால் தற்போது 269 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். மீதம் உள்ள பணி இடங்கள் விரைவில் நிரப்பப்படும்” என்றார்.
Sorry, no posts matched your criteria.