Thenilgiris

News October 3, 2024

உதகைக்கு படையெடுக்கும் சுற்றலாப் பயணிகள்

image

நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களை பார்க்க தினமும் வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். குறிப்பாக தாவரவியில் பூங்காவை பார்வையிட அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இதே போன்று ஊட்டி படகு இல்லம், தொட்டபெட்டா காட்சி முளை உள்ளிட்ட பகுதிகளிலும் சுற்றுலா பயணியர் வருகை அதிகரித்து காணப்பட்டது.

News October 3, 2024

நீலகிரி மாவட்டத்திற்கு மழை

image

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. அதன்படி, 18 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 3, 2024

பழங்குடியின கிராமத்தில் கலெக்டர் ஆய்வு

image

நீலகிரி, கூடலூரில் உள்ள கோழிகொல்லி ஆதிவாசி பழங்குடியின கிராமத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அடிப்படை வசதிகள் குறித்து நீலகிரி மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா நேற்று நேரில் ஆய்வு செய்தார். மேலும் அப்பகுதியை சேர்ந்த பழங்குடியின மக்களின் குறைகளை கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது கூடலூர் கோட்டாட்சியர் செந்தில் குமார் உடனிருந்தார்.

News October 2, 2024

நீலகிரி: கைகலப்பாக மாறிய கிராம சபை கூட்டம்

image

நீலகிரி மாவட்டம் பர்லியார் ஊராட்சியின் கிராம சபை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கடந்த சில நாட்களாக சர்ச்சையில் இருந்து வரும் டால்பின் நோஸ் கடை சம்பந்தமான பிரச்சனையால், கிராம சபை கூட்டத்தில் இரு தரப்பினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது கைகலப்பாக மாறியது. இதனால் தீர்மானம் எதுவும் நிறைவேற்ற முடியாமல் கூட்டம் பாதியில் முடிந்தது.

News October 2, 2024

காந்தி சிலைக்கு கலெக்டர் மரியாதை

image

மகாத்மா காந்தியின் 156வது பிறந்த நாளான இன்று நீலகிரி மாவட்டம் முழுவதும் உள்ள கிராம ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ஊட்டி சேரிங் கிராஸ் பகுதியில் உள்ள காந்தியின் திருவுருவ சிலைக்கு, மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, அங்குள்ள கதர் கிராம அங்காடியில் காந்தியடிகளின் உருவப்படுத்தற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

News October 2, 2024

ஐடி ஊழியர் உட்பட 2 பேரிடம் ரூ.12 லட்சம் மோசடி.

image

ஊட்டியை சேர்ந்த 46 வயது இல்லத்தரசி ஒருவரை போன் மூலம் (SBI) கால் சென்டரில் இருந்து பேசுவதாக தொடர்பு கொண்டு கூடுதல் பணம் தருவதாக ஆசை வார்த்தை கூறி அவரது கணக்கில் இருந்த ரூ.5 லட்சத்தை மோசடி செய்தது குறித்து ஊட்டி சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். இதேபோல் குன்னூர் ஐடி ஊழியர் ஒருவருக்கு வீட்டில் இருந்து வேலை என்ற மெசேஜ் மூலம் ஆசைகாட்டி ரூ.7 லட்சம் மோசடி செய்துள்ளனர்.

News October 2, 2024

மூத்த தமிழறிஞர்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

image

தமிழ் வளர்ச்சி துறை சார்பில் 58 வயதுக்கு மேற்பட்ட தமிழ் வளர்ச்சிக்கு சேவை செய்த தமிழறிஞர்கள் மாத உதவித்தொகை 4 ஆயிரம் பெற விண்ணப்பிக்க இம்மாதம் 31 ம் தேதி கடைசி நாள் எனவும், தமிழ் வளர்ச்சிக்கு செய்த சேவை செய்த விபரம், ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய்க்கான வருமான சான்று குடும்ப அட்டை, ஆதார் அட்டையுடன் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சி துறையில் நேரிடையாக விண்ணப்பிக்க கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.

News October 1, 2024

தேசிய கருத்தரங்கம்: நீலகிரி வழக்கறிஞர்கள் பங்கேற்பு

image

பெங்களூரூ விதான் சவுதா, பெனிகுயிட் அரங்கில் இன்று அகில இந்திய பெண் வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு மற்றும் கர்நாடக மாநில பெண் வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு சார்பில் தேசிய கருத்தரங்கம் தொடங்கியது. இதில் நீலகிரி மாவட்ட பெண் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் மாலினி பிரபாகரன், கவிதா, ரேவதி, நிர்மலா, சப்னா, லிபிகா, நஜுமா, பிச்சையம்மாள், ஜீவிதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

News October 1, 2024

நீலகிரி மழை: மலை ரயில் இன்றும் ரத்து.

image

நீலகிரியில் 2 நாட்களாக பெய்த மழையால் ஆங்காங்கே சாலையில் மரங்கள் விழுந்தும், மண் சரிவு ஏற்பட்டும் வருகிறது. இந்த நிலையில் ஹில்குரோவ் அருகே ரயில் பாதையில் கல், மண் சரிந்ததால் ரயில் பயணம் நேற்று நிறுத்தப்பட்டது. அதை சீராக்கும் பணிகள் தொடர்ந்து நடைப்பெற்று வருகின்ற நிலையில் இன்று ( அக்.1) ரயில் பயணம் மீண்டும் நிறுத்தப்பட்டு உள்ளது.

News October 1, 2024

நீலகிரிக்கு வர இ பாஸ் நடைமுறை தொடரும்

image

நீலகிரி மாவட்டத்திற்கு வரும் வெளி மாநில மற்றும் வெளி மாவட்ட பதிவெண் கொண்ட சுற்றுலா வாகனங்களுக்கு கடந்த மே மாதம் 7 ஆம் தேதி முதல் இ-பாஸ் பெற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது. மறு உத்தரவு இன்னும் பிறப்பிக்கப்படாததால் அதே நடைமுறை தொடரும் எனவும் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் கலெக்டர் லட்சுமி பவ்யா கேட்டுக்கொண்டுள்ளார்.