India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேரம்பாடி காவல் நிலைய காவல் ஆய்வாளர் துரைபாண்டி வழக்கமான ரோந்து பணியில் நேற்று கொளப்பள்ளி ஆட்டோ நிறுத்தம் பகுதியில் ஈடுபட்டபோது சந்தேகம் படும் படியாக நின்றிருந்தவரை சோதனையிட்டார். இதில், அவர் கொளப்பள்ளியை சேர்ந்த சசிகுமார் (44) என்றும், விற்பனைக்கு கஞ்சா வைத்து இருந்ததும் தெரியவந்தது. அவரிடம் கஞ்சாவை பறிமுதல் செய்து கைது செய்தார்.
நீலகிரி: கோத்தகிரி அருகே கெங்கரை சிவகிரிநகரை சேர்ந்தவர் விஜயராஜ் (34). இவர் நேற்று மாலை யானை தாக்கியதில் படுகாயமடைந்து, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வனத்துறையினர், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் இருக்கை மற்றும் படுக்கை வசதியுடன் கூடிய சொகுசு பேருந்து சேவை இன்று முதல் துவங்கப்பட்டது. கூடலூரிலிருந்து சென்னைக்கு தினமும் பிற்பகல் 2 மணிக்கு இயக்கப்படவுள்ளதாக தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் , கூடலூர் அருகே நாடுகானி என்ற இடத்தில் இருந்து வழிக்கடவு செல்லும் நெடுஞ்சாலை உள்ளது . அந்த சாலையில் இன்று மாலை 3 மணி அளவில் இரண்டு லாரிகள் நேர் எதிரே மோதியது . அதனால் தமிழ்நாடு , கேரளா மாநிலங்களுக்கு இடையே வாகன போக்குவரத்து தடைப்பட்டது . காவல் துறையினர் போக்குவரத்தை ஒழுங்கு படுத்தினார்கள்.
நீலகிரி மாவட்ட காவல் துறை சார்பில் Police Commemoration Day அக்டோபர் 21 தேதி நடைபெறுகிறது. அதை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான வண்ண ஓவிய போட்டி நடத்தப்படுகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஆகிய தலைப்புகளில் போட்டிகள் நடைபெறுகின்றன. இதற்கான போட்டியில் கலந்துகொள்ள அக்டோபர் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் 33 புதிய வகை ஊர்வனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சீகூர், சிங்காரா, தெங்குமரகடா பகுதிகளில் 36 புதிய நீர், நிலங்களில் வாழும் உயிரினங்களும் முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கேரளாவைச் சேர்ந்த வல்லுனர் குழுவினர் 3 நாட்கள் மேற்கொண்ட கணக்கெடுப்பின்போது பார்த்துள்ளனர். புதிய உயிரினங்களில் 16 வகை உயிரினங்கள் அழிவின் பட்டியலில் உள்ளன.
நீலகிரி: பந்தலுார் அருகே தாளூரில் உள்ள நீலகிரி கலை அறிவியல் கல்லுாரி மைதானத்தில், பாரதியார் பல்கலைக்கழக கல்லுாரி மாணவர்களுக்கு இடையிலான ‘ஏ’ பிரிவு கால்பந்து போட்டி நடந்தது. அதில் நீலகிரி, கோவை கல்லுாரிகளை சேர்ந்த 22 அணி வீரர்கள் விளையாடின. இறுதி போட்டியில், கோவை பாரதியார் பல்கலைக்கழக அணி – நீலகிரி கலை அறிவியல் கல்லுாரி அணி மாணவர்கள் விளையாடினர். 3 கோல்கள் அடித்து நீலகிரி அணி முதல் இடம் பிடித்தது.
நீலகிரி மாவட்ட இஸ்லாமிய மக்களின் காஜியின் பதவி காலம் வரும் 13ஆம் தேதி நிறைவடைகிறது. புதிய காஜியை தேர்வு செய்ய முஸ்லிம் சமுதாயத்திற்கு சேவை செய்து உழைத்த உலமாக்கள் 2 பேர் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதி உள்ள உலமாக்கள் புகைப்படத்துடன் கூடிய சுய விபரங்கள் மற்றும் கல்வி சான்றிதழுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 10 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் 2024-2025ஆம் ஆண்டில் ஏழ்மை நிலையில் உள்ள கணவனை இழந்த, கணவனால் கைவிடக்கப்பட்ட (ம) ஆதரவற்ற பெண்களுக்கு நாட்டு இன கோழி குஞ்சுகள் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது. இதை பெற விரும்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை சரியான ஆவணங்களுடன் இணைத்து அருகில் உள்ள கால்நடை மருந்தகங்களில் அளிக்க வேண்டும்.
நீலகிரி: குன்னூர், மேட்டுப்பாளையம் சாலையில் பர்லியார் என்ற இடம் உள்ளது. அந்த பகுதியில் உள்ள கொண்டை ஊசி வளைவில் இன்று மாலை 7 மணியளவில் அரசு பேருந்து பழுதாகி நின்றது. இதனால் சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் வரிசைகட்டி நின்றன. இதனால் அவசர பணிகள் காரணமாக செல்பவர்கள், கோத்தகிரி வழியாக செல்ல அறிவிக்கப்பட்டு வருகிறது. மேலும், பேருந்து பழுது சரிசெய்து இயக்க காலதாமதமாகும் என கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.