India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நீலகிரி மக்களே; உஜ்வாலா யோஜனா என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கபட்டுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் <

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம்!
மொத்த பணியிடங்கள்: 2,708
கல்வித் தகுதி: PG, Ph.D, NET, SLET, SET படித்திருந்தால் போதும்.
சம்பளம்: ரூ.57,700 முதல் ரூ.1,82,400 வழங்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.11.2025.
ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <

நீலகிரி மக்களே வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987-94987 தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE பண்ணுங்க!

தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு நல வாரியம் உருவாக்கப்பட்டு 20 வகையான தொழிலாளர் நல வாரியங்கள் உள்ளன. இந்நிலையில் ஊட்டியில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் வரும் அக்.22 ஆம் தேதி வீட்டு பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கைக்கான சிறப்பு முகாம் காலை 10 மணி முதல் மாலை 5:30 மணி வரை நடைபெறுகிறது.

குன்னூர் – மேட்டுப்பாளையம் மலை ரயில் சேவை உலக பாரம்பரிய முதல் பெற்றது. இந்நிலையில் மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக நாள்தோறும் பெய்தாலும் கனமழையால் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ரன்னிமேடு ஹில்குரோவ் நிலையங்களுக்கு இடையேயான பகுதியில் தண்டவாளத்தின் மீது மண் சரிந்தது. இதை அகற்றும் பணி இரண்டு நாட்களாக நடைபெற்ற வருவதால் இன்றும் மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில், கடந்த நான்கு நாட்களாக, கனமழை பெய்து வருகிறது. இரவு நேரங்களில் விடிய, விடிய இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால், காய்ந்து கிடந்த தேயிலை தோட்டங்களில் ஈரப்பதம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், மழைக்கு நடுவே, வானம் தொடர்ந்து மேகமூட்டமாக காணப்படுகிறது. போதிய சூரிய வெளிச்சம் இல்லாததால், தேயிலை தோட்டங்களில் கொப்புள நோய் தாக்கும் அபாயம் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் அவசரகால கட்டுப்பாட்டு மையத்தின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் கட்டுப்பாட்டு மையத்தில் தொடர்பு கொள்ளும் எண்கள் குறித்த தகவல்களை கேட்டறிந்தார். உடன் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

உச்சநீதிமன்ற உத்தரவின்படி தீபாவளி தினத்தில் அனுமதிக்கப்பட்ட ( காலை 6 மணி முதல் 7 மணி வரை, இரவு 7 மணி முதல் 8 மணி வரை) நேரங்களில் மட்டும் பட்டாசு வெடிக்கலாம். பட்டாசு கடைக்காரர்கள் தடை செய்யப்பட்ட பட்டாசுகளை விற்பனை செய்யக் கூடாது. உரிமம் இல்லாமல் பட்டாசு விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த தகவலை மாவட்ட ஆட்சியர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார்.

நீலகிரியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் உள்ள Sales Manager பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாத ஊதியமாக ரூ.25,000-ரூ.50,000 வழங்கபடும். எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் <

இந்திய அஞ்சல் கட்டண வங்கியில் இந்திய முழுவதும் காலியாக உள்ள 348 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதோனும் ஒரு டிகிரி முடித்த 18 வயது முதல் 30 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இந்த <
Sorry, no posts matched your criteria.