India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நீலகிரி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகைக்காக தற்காலிக பட்டாசு கடைகள் நடத்த இன்றே (19.10.24) கடைசி நாள் என்று நீலகிரி மாவட்ட ஆட்சி தலைவர் லட்சுமி பவ்யா தெரிவித்துள்ளார். மேலும், விருப்பம் உள்ளவர்கள் இணையதள முகவரிக்கு, வரைபடம், பாஸ்போர்ட் புகைபடம், வங்கி கணக்கு எண், ஆதார், குடும்ப அட்டை, உரிமை கட்டணம் கட்டி இணையதளம் மூலம் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், குன்னூர், மணியாட்டி பகுதியில் ஆன்லைன் மூலம் சிவபுராணம் போட்டியில் கலந்துகொண்டு 90 வரிகள் கொண்ட சிவபுராண பாடலை 2 நிமிடம் 42 நொடிகளில் வாசித்து குன்னூர் பி.மணியட்டி பகுதியை சேர்ந்த கங்காதரன் – பசவகானா தம்பதியரின் மகன் யாசிக் சாதனை படைத்துள்ளான். இந்த சாதனையை நிகழ்த்திய சிறுவனை ஊர் மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
நீலகிரி, துணை வட்டார பதவிக்கு (Deputy area Commander) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு கடைசி தேதி அக்.31ஆம் ஆகும். 21 வயது முதல் 50 வயதிற்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை காவல் கண்காணிப்பாளர், நீலகிரி என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். இது கவுரவப்பதவி ஆகவே, ஊதியம் வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி, முஸ்லிம் மக்களின் பிரதிநிதியாக உள்ள மாவட்ட காஜியின் பதிவிகாலம் 2023ஆம் ஆண்டே முடிவடைந்தது. தற்போது புதிய காஜி நியமிக்கப்பட உள்ளதால், தகுதியானவர்கள் மாவட்ட அளவிலான தேர்வுக்குழு உறுப்பினர்களுக்கு விண்ணப்பத்தை அக்.30ஆம் தேதிக்குள் அனுப்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு ஊட்டி பிற்படுத்தப்பட்டோர் – சிறுபான்மையினர் நலத்துறை அலுவலகத்தை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊட்டி புறநகர் காவல் நிலைய எஸ்எஸ்ஐ பாபு நேற்று இரவு எம்.பாலாடா பிரிவில் (TN-01-U-4065) எண் கொண்ட காரை தடுத்து சோதனை செய்தார். அப்போது காரில் இருந்த ஒரு நாட்டு துப்பாக்கி, ஒரு பெரிய கத்தி, 6 சிறிய கத்திகள், 2 (HEAD-LIGHT), ஒரு பண்டல் பாலிதீன் கவர் போன்றவற்றை காருடன் பறிமுதல் செய்தனர். மேலும், காரில் பயணித்த 5 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வன சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா நேற்று கறுகையில், “சோதனை சாவடிகளில் கண்காணிப்பு தீவிர படுத்த பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த ஒரு வாரத்தில் வன விலங்கு வேட்டை கும்பலிடம் இருந்து 2 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதனால் சோதனை சாவடிகளில் வாகன சோதனை மேலும் தீவிர படுத்த பட்டுள்ளது” என்றார். அப்போது கூடுதல் எஸ்பி சவுந்திரராஜன் உடனிருந்தார்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் இருந்து மீட்கப்பட்டு, முதுமலை யானைகள் முகாமில் பராமரிக்கப்பட்டு வந்த பெண் யானை குட்டியின் உடல்நிலை குன்றிய நிலையில் கடந்த ஒன்றரை மாதங்களாக சிகிச்சையில் இருந்து வந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி இறந்தது. மேலும் கள இயக்குநர் முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் துணை இயக்குநர் அறிவுரைப்படி பிரேத பரிசோதனைக்குப் பிறகு அங்கு புதைக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை விபரம்: ஊட்டி – 18.8 மிமீ, குந்தா தாலுகா எமரால்டு பகுதிகளில்- 22 மிமீ, குன்னூர், கேத்தி பகுதிகளில் 31 மிமீ, கீழ் கோத்தகிரி மற்றும் கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 62 மிமீ, கூடலூர் பந்தலூர் பகுதிகளில் 7 மிமீ என கடந்த 24 மணி நேரத்தில் மொத்தமாக 449.8 மிமீ மழை பதிவாகியுள்ளது.
நீலகிரி தேயிலை விவசாயிகள், தொழிலாளர்களின் குழந்தைகள் படிப்பிற்காக, வாரியத்தின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு தேர்ந்தெடுக்கபடும் மாணவ, மாணவியர்கள் பள்ளி படிப்புக்கு ஆண்டுக்கு ரூ.10,000மும், கல்லூரி படிப்புக்கு ரூ.20,000மும் வழங்கபடும். இதை பெற https//serviceonline.gov.in என்ற இணையதளத்தில் 15.10.24 முதல் 30 நாட்களுக்குள் விண்ணப்பிக்க டீ போர்டு துணை தலைவர் ராஜேஷ் சந்தர் அறிவித்துள்ளார்.
உதகை புத்தகத் திருவிழா 18.10.2024 முதல் 27.10.2024 வரை
காலை 10.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை உதகமண்டலம், பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் இந்த நிகழ்ச்சியில் கலை, இலக்கிய சொற்பொழிவுகள், உணவரங்கங்கள், குழந்தைகளுக்கான விளையாட்டுகள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. மாணவ மாணவியர்களும் பொதுமக்களும் புத்தக வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்க இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.