Thenilgiris

News October 25, 2024

குன்னூரில் அலறியடித்து ஓடிய பயணிகள் 

image

குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வன விலங்குகள் அதிகரித்து காணப்படுகிறது. மேலும், அடிக்கடி குடியிருப்பு பகுதிகளுக்குள்ளும் நுழைந்து வருகிறது. இந்நிலையில் இன்று மாலை குன்னூர் பேருந்து நிலையத்திற்குள் நுழைந்த காட்டொருமையால், அங்கிருந்த பயணிகள் அலறி அடித்து ஒட்டம் பிடித்தனர். மேலும், வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News October 24, 2024

நீலகிரி மழை: மார்லிமந்து அணை உயர்ந்தது

image

உதகை நகராட்சியின் 3 மற்றும் 4 வார்டுகளை உள்ளடக்கிய வண்டிசோலை, சர்ச் ஹில் பகுதிகளுக்கு மார்லிமந்து அணையில் இருந்து குடிநீர் வினியோகம் செய்ய படுகிறது. இந்த நிலையில், தற்போதைய மழையால் மார்லிமந்து அணையில் நீர் மட்டம் உயர்ந்து உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவான 23 அடியில் தற்போது 20 அடிவரை நீர் இருப்பு உள்ளது.

News October 24, 2024

வன்கொடுமை குறித்து புகார் தெரிவிக்கலாம்: கலெக்டர் அறிவிப்பு

image

நீலகிரி மாவட்டத்தில் வன்கொடுமை குறித்து இலவச அழைப்பு எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என கலெக்டர் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “ஜாதி வன் கொடுமையால் பாதிக்கப்பட்ட பழங்குடியினர், ஆதிதிராவிடர், பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக தகவல் தெரிவிப்போர்கள் – 18002021989 & 14566 என்ற இலவச தொலைபேசி எண்களை பயன்படுத்தி புகார்களை பதிவு செய்யலாம் என  தெரிவித்துள்ளனர்.

News October 24, 2024

நீலகிரி: சாலை அமைக்க இடம் வழங்கிய பொதுமக்கள்

image

நீலகிரி: தேவர்சோலை பேரூராட்சிக்குட்பட்ட 3ஆம் வார்டு மற்றும் 10ஆம் வார்டுக்குட்பட்ட பகுதிகளில், புதிதாக சாலை அமைப்பதற்கு பேரூராட்சி நிர்வாகம் ஒப்புதல் அளித்திருந்தது. இந்த சாலை அப்பகுதி மக்களின் பட்டா நிலங்களின் வழியாக செல்ல உள்ளதால், அப்பகுதி மக்கள் சாலை அமைப்பதற்காக தங்களது நிலத்தினை வழங்கினார்கள். அதற்கான ஆவணங்களை வார்டு உறுப்பினர்கள் எமி போல், ரம்சீனா ஆகியோர் தலைவர் வள்ளியிடம் வழங்கினார்கள்.

News October 23, 2024

தாசில்தார் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு

image

கோத்தகிரி தாசில்தார் அலுவலகத்தில் அனுபோக சான்று உள்ளிட்ட சான்றிதழ்களை பெற, இடைத்தரகர்கள் பொதுமக்களிடம் இருந்து ஆயிரக்கணக்கில் பணத்தை பெற்று அதிகாரிகளுக்கு கொடுப்பதாக, நீலகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, இன்று இரவு 7 மணிக்கு லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அதிரடியாக அலுவலகத்தில் நுழைந்து, சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதில் கணக்கில் வராத பணம் கிடைத்ததாக கூறப்படுகிறது.

News October 23, 2024

நீலகிரி மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, நீலகிரி மாவட்டத்தில் அக்டோபர்-23 (இன்று) இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியே செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. SHARE NOW!

News October 23, 2024

நீலகிரி மாணவனை கௌரவித்த சினிமா பிரபலங்கள்

image

பாலகொலா ஊராட்சி பி.மணியட்டி ஊரைச் சேர்ந்த கங்காதரன்-பசவகான தம்பதியினரின் 6 வயது மகன் யாசிக், 90 வரிகள் கொண்ட சிவப்புராணத்தை 42 நொடிகளில் வாசித்து ஆன்லைன் போட்டியில் வெற்றி பெற்றார். இந்நிலையில் அந்த சிறுவனை கௌரவிக்கும் விதமாக, உதகையில் நடைபெற்றுவரும் புத்தக திருவிழாவில் கலந்து கொண்ட திரைப்பட பாடகர்கள் புஷ்பவனம் குப்புசாமி – அனிதா தம்பதியினர், மாணவனை மேடைக்கு அழைத்து வாழ்த்து தெரிவித்தனர்.

News October 23, 2024

நீலகிரியில் சிறந்த தனிநபர் நூலகங்களுக்கு பரிசு திட்டம் 

image

நீலகிரி மாவட்டத்தில் தனிநபர் இல்லங்களில் நூலகம் அமைத்து மாவட்ட அளவில் சிறப்பாக பராமரிக்கப்படும் ஒரு நூலகத்தை தேர்ந்தெடுத்து ஒரு ரூ.3,000 மதிப்பில் கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். இது குறித்து மாவட்ட நூலக அலுவலருக்கு தெரிவிக்கலாம். மேலும் dlonlg3@gmail.comஇல் 25.10.2024ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரூ தெரிவித்துள்ளார்.

News October 23, 2024

நீலகிரியை வெளுக்க வரும் மழை

image

நீலகிரி மாவட்டத்திற்கு வடகிழக்கு பருவமழையை தொடர்ந்து இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. மொத்தமாக நேற்று மட்டும் 6 செ.மீ மழை கொட்டித் தீர்த்துள்ளது. இந்நிலையில் இன்றும் காலையில் முதலே பல்வேறு பகுதிகளில் மழை பெய்து கொண்டிருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

News October 22, 2024

நீலகிரி டைட் எனப்படும் பட்டாம் பூச்சி ஆய்வில் பதிவு

image

நீலகிரி மாவட்டம் மேற்குதொடர்ச்சி மலையில் அறிய வகையில் உள்ள தாவரங்கள், உயிரினங்கள் குறித்து பல்வேறு ஆராச்சியாளர்களால் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில், தற்போது நீலகிரி டைட் எனப்படும் சிறியவகை நீலகிரிகா பட்டாம் பூச்சி “யூலோபியா எபிடெண்ட்ரியா” என்ற தாவரத்தில் இருப்பது கண்டறியப்பட்டு, உலகளவில் “தி ட்ராபிக்கல் லெபிடோப்டெரா” அறிவியல் இதழில் பதிவு செய்யப்பட்டுள்ளது.