India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கூடலூர் சாலையில் 22 கிலோ மீட்டர் தொலைவில் வனப்பகுதிக்கு மத்தியில் பைக்காரா அணை உள்ளது.
இது கடந்த 4 மாதங்களாக மூடப்பட்டிருந்தது. சாலை பணிக்காக மூடப்பட்டிருந்த பைக்காரா படகு இல்லம் இன்று மூதல் மீண்டும் திறக்கப்படுவதாக சுற்றுலா துறை அறிவித்துள்ளது. இது சுற்றுலா பயணிகள் இடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கூடலுர் ஒசூர் வனத்துறை சார்பில், ரூ. 3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் வயநாடுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலச்சரிவில் பலர் காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பல்வேறு அமைப்பினர் நிவாரணஉதவிகளை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் கூடலுர் ஒசூர் வனத்துறை சார்பில் நேற்று, ரூ.3 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் கூடலூர் வன அலுவலர் வெங்கடேஷ்பிரபு தலைமையில் அனுப்பிவைக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சியில் பணி புரிந்து வந்த ஆணையர் எகராஜ் தேனி மாவட்டத்திற்கு மாற்றலாகி சென்றதை அடுத்து புதிய ஆணையர் நியமிக்கப்பட்டு உள்ளார். புதிய ஆணையராக நியமிக்கப்பட்ட ஜஹாங்கிர் பாஷா இன்று பதவி ஏற்றுக் கொண்டார். இவரை நகராட்சி அலுவலர்கள், நகர் மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
நீலகிரியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. எனவே நீலகிரி மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பு கொள்ள மாவட்ட நிர்வாகம் சார்பாக உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மழைபாதிப்புக்கு 24 மணிநேரமும் செயல்படும் 0423-2444111, 9498101206, 9789800199 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று காவல்துறையினர் மற்றும் மாவட்ட தனிப்பிரிவு அலுவலம் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இன்று முதல் 05.08.2024 வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பில், பருவ மழை பாதிப்பை எதிர் கொள்ளும் வகையில், ஒவ்வொரு உட்கோட்டங்களிலும் பயிற்சி பெற்ற 10 பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் தெரிவித்துள்ளார். மேலும், பொதுமக்கள் எந்த நேரத்திலும் 0423 2444111 என்ற எண்ணை அணுகலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகளில் இந்திய ராணுவம் ஈடுபட்டுள்ளது. இதற்காக, பாதிக்கப்பட்ட சூரல் மலை – முண்டகை இடையே 85 அடி நீள தற்காலிக பாலம் கட்டி முடிக்கப்பட்டது. இந்த பலமானது, இந்திய ராணுவத்தின் வெல்லிங்டன் (நீலகிரி) மெட்ராஸ் ரெஜிமென்ட்டின் பெண் மேஜர் ‘சீதா ஷெல்கே ‘ தலைமையில் 31 மணி நேரத்தில் இன்ஜினியரிங் வீரர்கள் கட்டி முடித்துள்ளனர்.
உதகை கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில் வங்கி கல்விக் கடன் வழங்குவது தொடர்பான கூட்டம் மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், நீலகிரி மாவட்டத்தில் 2024-2025 கல்வியாண்டில் 2,000 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 28 கோடி கல்விக் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. மேலும், பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே கல்விக் கடன் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனிடையே, கூடலூர் அருகே கோக்கால் பகுதியில் கனமழை காரணமாக 7 வீடுகளின் கட்டடங்கள் விரிசல் ஏற்பட்டு மண்ணில் புதைந்து வருகிறது. இந்நிலையில், இந்திய மண்ணியல் ஆராய்ச்சியாளர் மற்றும் பொதுப்பணித்துறை பொறியாளர்கள் இணைந்து கட்டடங்கள் மண்ணில் புதைவது குறித்து ஆய்வு நடத்தியுள்ளனர்.
நீலகிரியில் உள்ள எம்.பாலாடா, ஓர நள்ளி, கொல்லி மலை, கடநாடு, கட்டபெட்டு, பில்லி கம்பை, பன ஹட்டி, கக்குச்சி, மிளிதேன் உள்ளிட்ட பகுதிகளில் பூண்டு அதிகளவில் பயிரிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் வெள்ளை பூண்டுகளை பயிரிட்ட விவசாயிகள், அதனை அறுவடை செய்து மேட்டுபாளையம் மற்றும் ஊட்டி மண்டிகளுக்கு அனுப்புவதில் வேகம் காட்டி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.