Thenilgiris

News August 5, 2024

ஊட்டிக்கு GOOD NEWS சொன்ன அமைச்சர்!

image

ஊட்டி அருகே பைக்காரா அணையில் படகு சவாரி செய்த பிறகு சுற்றுலா துறை அமைச்சர் ராமசந்திரன் நேற்று கூறுகையில், ‘பைக்காராவில் 26 படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் தற்போது, 5 இருக்கைகள் கொண்ட ஒரு உல்லாச படகு மற்றும் 2 வாட்டர் ஸ்கூட்டர்கள் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளன’ எனக் குறிப்பிட்டார்.

News August 5, 2024

நீலகிரி திமுக மாவட்ட செயலாளர் அழைப்பு

image

மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் 6வது நினைவு நாள் நாளை மறுநாள் (ஆகஸ்ட் 7) அனுசரிக்கப்படுகிறது.
அதன்படி அன்று காலை 11:30 மணி அளவில் நீலகிரி மாவட்ட திமுக அலுவலகத்தில் நினைவஞ்சலி நடைபெறுகிறது என
நீலகிரி மாவட்ட திமுக செயலாளர் பா.மு.முபாரக் திமுகவினருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

News August 5, 2024

இன்று நீலகிரியில் மக்கள் குறைதீர் நாள் முகாம்

image

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை 10 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தன்னீரு முன்னிலையில் மக்கள் குறைதீர் முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் ஊட்டி, கூடலூர், பந்தலூர், குந்தா, கோத்தகிரி, குன்னூர், மஞ்சூர் ஆகிய ஆறு தாலுகாவுக்குட்பட்ட மக்கள் தங்களுடைய கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கி குறைகளைத் தீர்த்துக் கொள்ளலாம். இத்தகவலை ஷேர் பண்ணுங்க!

News August 4, 2024

உதகை: முன்னாள் எம்பி மறைவுக்கு நினைவஞ்சலி

image

உதகையில் இளம்படுகர் சங்க அரங்கில் மறைந்த முன்னாள் பாஜக எம்.பி. மாஸ்டர் மாதன் அவர்களுக்கு இன்று நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. இதில், சுற்றுலா துறை அமைச்சர் ராமச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் குண்டன், சாந்தி ராமு, உதகை தொகுதி எம்.எல்.ஏ.கணேஷ், நான்கு சீமைகளின் தலைவர்கள் பங்கேற்று மாஸ்டர் மாதன் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். பின்னர் 2 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

News August 4, 2024

நீலகிரியில் இன்று மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் பருவ மழை தீவிரமடைந்து பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகின்றது. இந்நிலையில், நீலகிரி உள்ளிட்ட 16 மாவட்டங்களில் இன்று இரவு 8.30 மணி வரை இடியுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இடையிடையே 30-40 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 4, 2024

யானை கணக்கெடுப்பு: நீலகிரியில் 2,253 யானைகள்!

image

தமிழ்நாட்டில் யானைகள் வசிக்கும் 8,989.63 சதுர கி.மீ. பரப்பளவில் யானைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் சராசரி அளவாக 3,063 யானைகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஒரு சதுர கி.மீ. பரப்பளவில் வசிக்கும் யானையின் அடர்த்தியின் அளவு 0.34 என்று கூறப்பட்டுள்ளது. அதிகபட்சமாக நீலகிரி கிழக்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மட்டும் 2,253 யானைகள் வாழ்கின்றன.

News August 4, 2024

நீலகிரி மாவட்டத்தில் இன்று மழை பெய்யக்கூடும்

image

தமிழகத்தில் இன்று (ஆக.04) இரவு 7 மணி வரை 29 மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 4, 2024

நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கத்தில் முதன்முறையாக!

image

கோவை மேட்டுப்பாளையத்தில், நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கத்தில் முதன்முறையாக பூண்டு ஏலம் துவங்கியது. சங்கம் துவங்கபட்ட 1935-ம் ஆண்டு முதல் நீலகிரி மாவட்டத்தில் விளையும் உருளைக்கிழங்குகளை இடைத்தரகர்கள் இன்றி விற்பனை செய்து நீலகிரி விவசாயிகள் பயன்பெறுகின்றனர். இந்நிலையில் இன்று முதல் இச்சங்கத்தில் ஊட்டி மலை பூண்டு ஏலம் துவங்கியது.

News August 4, 2024

ரேஷன் கடையில் பருப்பு, பாமாயில் இந்த மாதம் வழங்கப்படும்

image

தமிழ்நாடு சிறப்பு பொது விநியோகத்திட்டம்மூலம் 2.23 கோடி குடும்ப அட்டை தாரர்களுக்கு மாதந்தோறும் துவரம் பருப்பு, பாமாயில் வழங்கப்படுகிறது. ஜூன்.2024 மாதம் துவரம் பருப்பு, பாமாயில் பெற இயலாத அட்டை தாரர்கள் ஜூலை மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. ஏனவே நீலகிரி மாவட்டத்தில் உள்ள 217640 அட்டை தாரர்களில் ஜூலையில் பொருட்கள் பெற இயலாதவர்கள் இந்த மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

News August 4, 2024

நட்புன்னா என்னான்னு தெரியுமா?

image

இன்று சர்வதேச நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இவ்வுலகில் நண்பர்கள் இல்லாமல் எவரும் இல்லை. கிணற்றில் குளித்தது, கிரிக்கெட் ஆடியது, பள்ளிக்கு செல்வதாக கூறி படத்துக்கு போவது என சினிமாவை மிஞ்சும் அளவுக்கு நண்பர்களுடன் செய்த சேட்டைகளுன்டு. அந்த வகையில், நீலகிரி சொந்தங்களே நீங்க உங்க நண்பனை பற்றி கீழே கமெண்ட் பண்ணுங்க, நண்பனுக்கு சேர் செய்யுங்க.

error: Content is protected !!