Thenilgiris

News August 6, 2024

நீலகிரியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

image

நீலகிரி மாவட்டத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 16.08.2024 அன்று நடைபெறவுள்ளது. இதற்காக கூடுதல் ஆட்சியர் வளாகம் பகுதியில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரில் அணுகலாம். அல்லது 0423-2444004, 7200019666 என்ற எண்கள் வாயிலாக தொடர்பு கொள்ளலாம். இதனை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரூ தெரிவித்துள்ளார்.

News August 6, 2024

நீலகிரி மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் இன்று இரவு 10 மணிவரை 32 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணிவரை, இடியுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 6, 2024

BREAKING நீலகிரியில் தேர்தல்: புதிய தலைவர் தேர்வு

image

நீலகிரி மாவட்டம் குன்னூர் நகர்மன்றத் தலைவர் பதவி காலியாக இருந்தது. இதில் 16வது வார்டு கவுன்சிலர் சுசிலா போட்டியிடுவார் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்த நிலையில் இன்று இந்தப் பதவிக்கான மறைமுகத் தேர்தல் நடைபெற்றது. இதில் சுசிலா போட்டியின்றி ஏகமனதாகத் தேர்வு செய்யப்பட்டார். மக்களே உங்கள் கருத்து என்ன?

News August 6, 2024

கூடலூரில் வாழ்வதா? சாவதா? மக்கள் ஆர்ப்பாட்டம்

image

கூடலூர், சேரம்பாடி சுற்று வட்டாரத்தில் உள்ள குடியிருப்புகள் மற்றும் விளை நிலங்களில் யானை உள்ளிட்ட வன விலங்குகளின் தொந்தரவுகள் தொடர்கதையாகி வருகிறது. இந்த நிலையில், சம்பந்தப்பட்ட துறையினருக்கு புகார் கொடுத்தும் பயன் இல்லை என்பதால் வாழ்வதா? சாவதா? என்ற பதாகைகளை ஏந்தி நேற்று கூடலூர் சுற்றுவட்டார மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

News August 6, 2024

நீலகிரியில் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்: கலெக்டர்

image

நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பாவ்யா தன்னீரு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழில் பயிற்சி நிலையங்களில் 2024ஆம் ஆண்டுக்கான நேரடி மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 16 வரை நடைபெறும். இதில், 14 வயது பூர்த்தி அடைந்த ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். இதர விவரங்களுக்கு: 94990 55707 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்’ எனத் தெரிவித்துள்ளார்.

News August 5, 2024

உதகை: சுதந்திர தினவிழா ஆலோசனை கூட்டம்

image

உதகை , அரசினர் கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் வரும் 15-ஆம் தேதி சுதந்திர தின விழா கொடாடப்படவுள்ளது. இதை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரூ தலைமையில் இன்று சுதந்திர தின விழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் கெளசிக் மற்றும் அரசு துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

News August 5, 2024

நீலகிரி கலெக்டருக்கு படுக தேச பார்ட்டி வாழ்த்து

image

நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரூவை, படுக தேச பார்ட்டி நிறுவன தலைவர் மற்றும் பாலகொலா ஊராட்சித் துணைத் தலைவர் மஞ்சை வி.மோகன், பாடுகதேச கட்சித் துணைத் தலைவர்கள் ஆனந்த், பூபதி, கண்ணன் மற்றும் மகாலிங்கன் ஆகியோர் இன்று நேரில் சந்தித்து வெண்மை சால்வை அணிவித்து மலர்க்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

News August 5, 2024

நீலகிரி: சுகாதார பணியாளர்களுக்கு பாராட்டு

image

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டம் மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரூ தலைமையில் நடந்தது. அப்போது, மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூன்றாம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 20 சுகாதார மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஆட்சியர் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.

News August 5, 2024

முன்னாள் எம்பி மறைவுக்கு பாஜக அஞ்சலி

image

நீலகிரி முன்னாள் எம்பி மாஸ்டர் மாதன் கடந்த ஜூலை 27ல் காலமானார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில், ஊட்டி இளம் படுகர் சங்கம் அரங்கில் நாளை மதியம் 2.30 மணிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடை பெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News August 5, 2024

கூடலூரில் ஷெட்டரை உடைத்த யானை: மக்கள் பீதி!

image

நீலகிரி மாவட்டம்  கூடலூர்  புத்தூர் வயல் கவள என்ற பகுதியில் அங்கு இன்று அதிகாலை நேரத்தில் காட்டு யானை ஒரு சூப்பர் மார்க்கெட்டின் ஷெட்டரை உடைத்தது. இது அப்பகுதியினரிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. இங்கு தொடர்ந்து 4 மாதமாக யானைகளின் அட்டாகாசம் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. பலமுறை வனத்துறைக்கு புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. உங்கள் பகுதியில் யானைகள் நடமாட்டம் உள்ளதா?

error: Content is protected !!