India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நீலகிரி மாவட்டத்தில் 4வது புத்தகத் திருவிழாவினை, அரசு தலைமைக் கொறடா கா. ராமச்சந்திரன் குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார். பின்னர், அவர் புத்தக அரங்குகளைப் பார்வையிட்டார். மேலும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் 2000 பள்ளி மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் தலா ரூ.150 மதிப்பிலான இலவசக் கூப்பன்களை வழங்கும் அடையாளமாக, 10 மாணவ, மாணவியர்களுக்குப் புத்தகங்களை வழங்கினார்.

நீலகிரி மாவட்டத்தில் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் உள்ள அனைத்து வார்டுகளிலும், வார்டு உறுப்பினர் தலைமையில் வரும் 27, 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் சிறப்பு வார்டு கூட்டம் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. கூட்டத்தில் குடிநீர் , திடக்கழிவு, தெரு விளக்கு, சாலை போன்றவைகளில் குறைபாடுகள் இருந்தால் தெரிவிக்கலாம் என்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார்.

நீலகிரி மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்கிறார்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது அதிகாரப்பூர்வ <

நீலகிரி மக்களே வாடகை வீட்டில் உள்ளீர்களா? இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். (SHARE பண்ணுங்க)

மத்திய அரசு நிறுவனமான திட்டங்கள் (ம) மேம்பாட்டு இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு டிப்ளமோ, டிகிரி(பி.இ) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் மாதம் ரூ.26,600 முதல் ரூ.59,700 வரை வழங்கப்படுகிறது. இப்பணிக்கு <

வடகிழக்கு பருவமழையால் நீலகிரியில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதை அப்பகுதி வழியாக பயணிக்கும் சுற்றுலாப் பயணிகள் பார்த்து ரசிப்பதோடு, போட்டோ எடுத்து மகிழ்கின்றனர். எனவே, மழை அடுத்து சில நாள்களுக்கு இருப்பதால் சாலையோரம் அருவிகளுக்குள் சென்று குளிக்ககூடாது என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

வடகிழக்கு பருவமழையின் தொடர்ச்சியால் நீலகிரி மாவட்டம் 6 தாலுகாக்களிலும் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களின் அவசர உதவி எண்களை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. பொதுமக்கள் தங்கள் அவசர தேவைகளுக்காக மேற்கண்ட எண்களை அழைக்கலாம் என தகவல் வழங்கப்பட்டுள்ளது.

உதகையில் 2025ஆம் ஆண்டுக்கான புத்தகத் திருவிழா, உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடைபெற உள்ளது. இப் புத்தகத் திருவிழா இன்று (அக்டோபர் 24) தொடங்கி, நவம்பர் 2ஆம் தேதி வரை நடைபெறுகிறது. காலை 10 மணிக்குத் துவங்கும் இந்தக் கண்காட்சி இரவு 7 மணி வரை நடைபெறும். இந்தப் புத்தகக் கண்காட்சியில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம்பெற உள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நீலகிரி வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துநர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருட்களை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். (SHARE IT)
Sorry, no posts matched your criteria.