Thenilgiris

News January 31, 2025

நீலகிரி மாவட்ட ஆட்சியர் தகவல்

image

மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் நீலகிரியில் வாழும் நலிந்த கலைஞர்களின் மரபுரையினர் நிதி உதவி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. சுற்றுலா மற்றும் பண்பாட்டு துறையின் மூலம் நலிந்த நிலையில் வாழும் கலைஞர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோருக்கு நலிந்த கலைஞர் நிதி உதவி திட்டத்தினை அரசு செயல்படுத்தி வருகிறது. மாதம் 3000 வீதம் அவர்களின் வாழ்நாள் முழுவதும் வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

News January 31, 2025

தடை செய்த புகையிலை விற்ற கடைக்கு சீல்

image

நீலகிரி ஓவேலி சூண்டி மரப்பாலம் பகுதியை சேர்ந்தவர் புண்ணிய மூர்த்தி (63). இவர் தனது கடையில் தமிழக அரசால் தடை செய்ய பட்ட புகையிலையை விற்பதாக நியூஹோப் போலீசுக்கு தகவல் வந்தது. இதன் பேரில் எஸ்எஸ்ஐ, கிருஷ்ணமூர்த்தி அங்கு சென்று புகையிலையை பறிமுதல் செய்து உணவு பாதுகாப்பு அதிகாரி உதவியுடன் சீல் வைத்தார்.

News January 30, 2025

நீலகிரி மாவட்டத்தில் முதல் பெண் நடத்துநர்

image

நீலகிரி மாவட்ட தொமுச நிர்வாகியும், போக்குவரத்து கழக ஊழியருமான கருப்புசாமி 2024ல் மறைந்த நிலையில், அவரின் மனைவி சுகன்யாவின் கோரிக்கையை ஏற்று, தமிழக முதல்வர் பணி நியமன ஆணை வழங்கி உத்தரவிட்டார். இதன்மூலம் நீலகிரி மாவட்டத்தின் முதல் பெண் நடத்துநர் என்ற பெருமையை அவர் பெற்றார். மேலும், பணியில் சேர்ந்த அவரை திமுக மாவட்ட செயலாளர் முபாரக், ஒன்றிய செயலாளர் நெல்லை கண்ணன், துணை செயலாளர் கணபதி பாராட்டினர்.

News January 30, 2025

ஊட்டி உருளை கிழங்கு இன்றைய விலை விவரம்

image

நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கம் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு ஒவ்வொரு நாளும் ஏலத்தின் வாயிலாக ஊட்டி உருளை கிழங்கை விற்பனை செய்து வருகிறது. இதன்படி இன்றைய ஏலத்தின் மூலம் முதல் தரம் அதிகபட்சமாக ஒரு மூட்டை ரூ.1950 க்கும், குறைந்தபட்சமாக ரூ.1100 க்கும் விற்பனையானது. மேலும், இன்றைய ஏலத்தில் மொத்தம் 700 மூட்டைகள் விற்பனையானது.

News January 30, 2025

உதகை கொலை – துப்பாக்கி கொடுத்தவர் கைது

image

தேவர்சோலை பகுதியை சேர்ந்த ஜம்ஷித் (32) என்பவர் நண்பர்களுடன் வேட்டைக்கு சென்ற இடத்தில் துப்பாக்கி தோட்டா தாக்கி கடந்த (25.1.2025) ல் உயிரிழந்த வழக்கில் நவசாத் (35), ஜாபர் அலி (43), ஐதர் அலி (59), சதிஷ் (37) மற்றும் 9 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், வேட்டை கும்பலுக்கு துப்பாக்கி கொடுத்து உதவியதாக அப்துல் ரகுமான் (59) நேற்று கைது செய்யப்பட்டார்.

News January 30, 2025

நீலகிரியில் உதவி தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

image

நீலகிரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள தகவலில் நீலகிரி மாவட்டத்தில் தகுதியுடைய படித்த வேலைவாய்ப்பற்றோருக்கு தமிழக அரசின் சார்பில் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. மாதம் ஒன்றுக்கு படித்த தகுதியின்படி 200 முதல் 600 வரை வழங்கப்படுகிறது.இந்த உதவி தொகையினை பெறுவதற்கான விண்ணப்பித்தினை நீலகிரி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி காட்டும் மையத்தை அணுகி பெற்று தகுத சான்றிதழ் உடன் உதவித்தொகை பெறலாம்.

News January 30, 2025

இந்தி நடிகர் பெயரில் ஆன்லைன் மோசடி: பறிபோன ரூ.20 லட்சம்

image

கடந்த ஜன.13ம் தேதி அன்று இந்தி நடிகர் மிதுன் சக்கரவர்த்தி பெயரில் உதகையில் உள்ள ஓட்டல் மேலாளரின் செல்போன் எண்ணுக்கு வாட்ஸ் அப்பில் ஒரு குறுஞ்செய்தி வந்தது.பொங்கல் தினமான மறுநாள் மிதுன் சக்கரவர்த்தி வேறு ஒரு வேலை விஷயமாக இங்குள்ள மேலாளரை தொடர்பு கொண்டு உள்ளார். அப்போது நீங்கள் கூறியபடி ரூ.20 லட்சத்தை உங்கள் வங்கி கணக்குக்கு அனுப்பிவிட்டேன் என்று மேலாளர் கூறியபோது தான் மோசடி நடைபெற்றது தெரிய வந்தது.

News January 29, 2025

நீலகிரி கலெக்டருக்கு நீதிமன்றம் கடும் கண்டனம் 

image

நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் தடை உத்தரவை அமல்படுத்தியது தொடர்பாக பொய்யான அறிக்கை தாக்கல் செய்ததாக, நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு, சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், வழக்கு விசாரணையை பிப்ரவரி 4ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு, அன்றைய தினம் நீலகிரி மாவட்ட ஆட்சியர், காணொலி மூலம் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

News January 29, 2025

கோடநாடு எஸ்டேட் மேலாளருக்கு சம்மன்

image

நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டி வீட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான பங்களாவில் நடந்த கொலை கொள்ளை குற்றங்கள் தொடர்பான வழக்கு ஊட்டி கோர்ட்டில் நடந்து வருகிறது. இதுவரை 500க்கும் மேற்பட்டவரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சிபிசிஐடி போலீசார் கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் விசாரணை நடத்த பிப்ரவரி 4ஆம் தேதி கோவை காவல் அலுவலகத்தில் வருமாறு சம்மன் அனுப்பி உள்ளனர்.

News January 29, 2025

உதகை துப்பாக்கி சூட்டில் பலி:13 பேர் கைது

image

போலீசார் கூறுகையில்,’இந்த சம்பவம் தொடர்பான விசாரணையில்,விலங்கை வேட்டையாட நடந்த துப்பாக்கி சூட்டில் ஜெம்ஷித் மீது துப்பாக்கி தோட்டா பாய்ந்து அவர் உயிரிழந்துள்ளார். அப்போது, அவருடன் சென்ற 4 பேர், அப்பகுதியை சேர்ந்த,9 பேரை அழைத்து,அவர் உடலை மருத்துவமனைக்கு கொண்டு சென்றது தெரியவந்தது. இது தொடர்பாக,13 பேர்,கைது செய்யப்பட்டு 3 நாட்டு துப்பாக்கிகள்,2 கார்கள்,தோட்டாக்கள், வெடி பொருட்கள் பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!