Thenilgiris

News March 20, 2024

நீலகிரி: புலி தாக்கி மீண்டும் பசு மாடு பலி

image

ஓவேலியில் வன விலங்குகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட எல்லமலை பகுதியை சேர்ந்தவர் புஷ்ராஜ். இவர் வழக்கம் போல் தனது பசு மாடுகளை நேற்று ( மார்ச் 19) மேய்ச்சலுக்கு விட்டு உள்ளார். அதில் ஒரு மாடு திரும்பி வரவில்லை. இதையடுத்து தேடி சென்ற போது புலியிடம் சிக்கி பலியானது தெரிந்தது. ஏற்கனவே பந்தலூரில் பசுமாட்டை புலி வேட்டையாடி கொன்றது குறிப்பிடத்தக்கது.

News March 20, 2024

நீலகிரி தொகுதி திமுக வேட்பாளர் அறிவிப்பு

image

நீலகிரி மக்களவைத் தொகுதியின் (தனி) வேட்பாளராக ஆ.ராசா அறிவிக்கப்பட்டுள்ளார். மக்களவைத் தேர்தல்-2024 தமிழகத்தில் அடுத்த மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதைமுன்னிட்டு மக்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களின் பட்டியலை இன்று (மார்ச் 20) அக்கட்சியின் தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

News March 20, 2024

இஸ்ரோ இளம் விஞ்ஞானிகள்: இன்றே கடைசி நாள்

image

மாணவர்களிடம் விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் ‘யுவிகா’ இளம் விஞ்ஞானிகள் திட்டத்தை 2019ல் இஸ்ரோ அறிமுகம் செய்தது. இதன்கீழ் மாணவர்கள் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல், செய்முறை விளக்கப் பயிற்சி அளிக்கப்படும். இந்தாண்டுக்கான பயிற்சிக் காலம்: மே 13 – 24. விண்ணப்பிக்க இன்றே(மார்ச் 20) கடைசி நாள். தகுதி: 9ம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே. விண்ணப்பிக்க: jigyasa.iirs.gov.in/yuvika

News March 20, 2024

நீலகிரி: பிரதமரை சந்தித்த வாரிய உறுப்பினர்

image

கோவை ரோட்சோவுக்கு வந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடியை காண திரளானவர்கள் வாகனங்கள் மூலம் கோத்தகிரி பகுதியிலிருந்து (மார்ச் 18) சென்றனர். கோத்தகிரியை அடுத்த ஒன்னதலை கிராமத்தை சேர்ந்தவரும், முன்னாள் தேயிலை வாரிய உறுப்பினரும், மத்திய அரசு வழக்கறிஞருமான குமரன் பிரதமரை மரியாதை நிமித்தம் சந்தித்துப் பேசினார்.

News March 19, 2024

நீலகிரி: வெடி குண்டு மிரட்டல், மோப்ப நாய் சோதனை

image

நீலகிரி, உதகையில் இன்று (மார்ச் 19) வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ஊட்டியில் உள்ள புகழ் பெற்ற 2 சர்வதேச பள்ளிகளுக்கு மின் அஞ்சல் மூலம் வெடி குண்டு மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. மேலும் 3 வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையிட்டு வருகின்றனர்.

News March 19, 2024

உதகை: மாரியம்மன் கோயில் திருவிழா

image

உதகை மாரியம்மன் கோயில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, நான்காவது நாளான நேற்று (மார்ச் 18) நீலகிரி மாவட்ட ஒக்கிலிகர் இனத்தார் சார்பில் புலி வாகனத்தில் அம்மன் பராசக்தி அலங்காரத்தில் திரு உலா நடைபெற்றது. இதில் கேரளாவின் செண்டை மேளம், கர்நாடகாவின் கிராமிய நடனம், தமிழ்நாட்டின் கோலாட்டம், தப்பாட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

News March 18, 2024

நீலகிரி: தேயிலையில் மைட்ஸ் நோய் பாதிப்பு

image

நீலகிரி, தேயிலையில் மைட்ஸ் நோய் வெகுவாக பரவி வருகிறது. இதனால் மகசூல் குறைந்து, விவசாயிகளுக்கு பெருமளவு பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து நீலகிரி மாவட்ட விவசாயிகள் சங்க நிர்வாகி போஜராஜன் இன்று(மார்ச் 18) கூறுகையில், “வறட்சியால், ‘மைட்ஸ் ‘ நோய் அதிகரித்து உள்ளது. எனவே விவசாயிகளுக்கு அரசு மானியம் வழங்க வேண்டும்” என்றார்.

News March 18, 2024

நீலகிரி (தனி) தொகுதியில் மீண்டும் திமுக

image

2024 மக்களவை தேர்தலில் நீலகிரி (தனி) தொகுதியில் திமுக போட்டியிடுகிறது. 2019 மக்களவைத் தேர்தலில் நீலகிரி தொகுதியில் திமுக நாடாளுமன்ற உறுப்பினராக ஆ.ராசா போட்டியிட்டு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த தேர்தலிலும் அவர் மீண்டும் போட்டியிட வாய்ப்புள்ளது.

News March 18, 2024

மாரியம்மன் கோயில் பூ குண்டம் திருவிழா

image

உதகை அருகே உல்லாடா கிராமம் உள்ளது . இந்திய அளவில் சிறந்த சுற்றுலா கிராமமாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த கிராமத்தில் அருள்மிகு மாரியம்மன் கோயில் பூ குண்டம் திருவிழா நேற்று நடைபெற்றது. இதில் விரதம் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பூ குண்டம் இறங்கி வேண்டுதலை நிறைவேற்றினார்கள். அதை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. 

News March 17, 2024

நீலகிரி: குடிநீர் குறித்து கலெக்டர் ஆய்வு

image

நீலகிரி ஆட்சியாளர் அலுவலகத்தில், நீலகிரி குடிநீர் குறித்த ஆய்வுக்கூட்டம் ஆட்சியர் மு.அருணா தலைமையில் (மார்ச் 16) மாலை நடந்தது. கோடை வெயில் தாக்கத்தால் நீர் நிலைகள் வறண்டு வரும் சூழல் நிலவுகிறது. இதனால் மக்களுக்கு ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டுக்கு தீர்வு காண்பது குறித்து அலுவலர்களுடன் விவாதித்தார்.