Thenilgiris

News March 31, 2024

இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

image

நீலகிரி மாவட்டம், குன்னூர், ஓட்டுபட்டறை ஸ்டான்லி பார்க் பகுதியை சார்ந்த இரு இளைஞர்கள் கேரளாவில் உள்ள குருசுமலைக்கு சென்ற போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி இறந்துள்ளனர் இறந்த இருவரின் உடலும் பிரேத பரிசோதனை முடிந்து இன்று குன்னூர் கொண்டுவரப்பட உள்ளது. இரண்டு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News March 31, 2024

பூண்டு விதைப்பில் விவசாயிகள் தீவிரம்

image

கோத்தகிரி பகுதிகளில் தேயிலைக்கு அடுத்தப்படியாக கேரட், பீட்ரூட், பீன்ஸ், முட்டைகோஸ், காளிபிளவர் , பட்டாணி, புருக்கோலி, முள்ளங்கி, உருளை கிழங்கு, பூண்டு போன்ற மலை காய்கறிகள் பயிரிட படுகின்றன. இதில், நீலகிரி பூண்டுக்கு வெளி மார்க்கெட்டில் நல்ல கிராக்கி உள்ளது. இதனால் தற்போது விவசாயிகள் பூண்டு விதைப்பில் முனைப்பு காட்டி வருகின்றனர்.

News March 30, 2024

கூடலூர்: ஆற்றில் குளிக்க சென்ற இளைஞர் உயிரிழப்பு

image

நீலகிரி மாவட்டம் கூடலுர் SS நகர் பகுதியை சேர்ந்த மணி என்ற இளைஞர், பாண்டியார் குண்டமுலா ஆற்றில் குளிக்க சென்றபோது தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். உடனடியாக அக்கபக்கத்தில் உள்ளவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்து தீயணைப்பு துறையினர் அவரது உடலை மீட்டு கூடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கூடலூர் காவல்துறையினர் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 30, 2024

ஆ.ராசா காரை சோதனையிடாத அலுவலர் சஸ்பெண்ட்!

image

நீலகிரியில் பறக்கும்படையை சேர்ந்த கீதா என்ற அலுவலரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட தேர்தல் அலுவலர் உத்தரவிட்டுள்ளார். கடந்த 25ம் தேதி நீலகிரி மக்களவை தொகுதி வேட்பாளர் ஆ.ராசா எம்பியின் வாகனத்தை சோதனை செய்தனர். அப்போது, சரிவர சோதனை செய்யவில்லை என புகார் எழுந்தது. அந்த புகாரின் பேரில் விசாரணை நடைபெற்ற நிலையில், இன்று பறக்கும் படை அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

News March 30, 2024

ஊட்டி வாக்குச்சாவடி மையத்தில் கலெக்டர்

image

நீலகிரியில் வருகிற மக்களவைத் தேர்தலில் பொதுமக்கள் வாக்கு செலுத்த ஏதுவாக வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஊட்டியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளை இன்று (மார்ச் 30) நீலகிரி மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான மு.அருணா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வுசெய்தார். அவருடன் துறை அலுவலர்கள் சென்றனர்.

News March 30, 2024

தேர்தல் பார்வையாளர் நியமனம்

image

நீலகிரி எம்பி தொகுதி பொது பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ‘நீலகிரி தொகுதிக்கு தேர்தல் செலவின பார்வையாளராக மஞ்சித் சிங் பரார் (94899 – 30725), காவல் பார்வையாளராக மனோஜ் குமார் (63796 – 52828) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் விதிமீறல் புகார்களை கைப்பேசியிலோ (அ) நேரிலோ தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

News March 30, 2024

நீலகிரி: காங்கிரஸ் கண்டனம் ஆர்ப்பாட்டம்

image

நீலகிரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் உதகை சுதந்திர நினைவு திடல் முன்பு இன்று (மார்ச் 30) மதியம் 12.30 மணியளவில் வருமான வரித்துறையின் செயலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என்று நீலகிரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஆர்.கணேஷ் அறிக்கையில் கூறியுள்ளார்.

News March 29, 2024

நீலகிரி: கல்லூரி முதல்வர் மீது லஞ்ச வழக்கு பதிவு

image

ஊட்டி அரசு கலைக் கல்லூரியில் முதல்வராக இருந்தவர் அருள் ஆண்டனி. பேராசிரியாக இருந்தவர் ரவி. இருவரும் மாணவர்களிடம் துறை மாற்றம் செய்ய லஞ்சம் பெற்றதாக தெரிகிறது. இந்த விவகாரம் தொடர்பாக இருவர் மீதும் லஞ்ச ஒழிப்பு துறையினர் இன்று(மார்ச்.29) வழக்கு பதிவு செய்தனர். இதுகுறித்து உதகை லஞ்ச ஒழிப்புத் துறை டி எஸ்.பி., ஜெயக்குமார் தலைமையிலான குழுவினர் விசாரணை செய்து வருகின்றனர்.

News March 29, 2024

கவர்னர் ஆர்.என்.ரவி 30-ந்தேதி ஊட்டி வருகை

image

கவர்னர் ஆர். என்.ரவி 30-ந்தேதி ஊட்டி வருகிறார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு கவர்னர் 4-ந் தேதி காலை 11 மணி அளவில் கார் மூலம் கோவை விமான நிலையம் சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார். கவர்னர் அரசியல் ரீதியான கருத்துகளை அவ்வப்போது கூறி சர்ச்சை ஏற்படுவதால், கவர்னர் பயணத்தையொட்டி போலீசார் பாதுகாப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளார்கள்.

News March 29, 2024

மாரத்தான் விழிப்புணர்வு ஓட்டம் – மாவட்ட ஆட்சியர்

image

நீலகிரி மாவட்ட நிர்வாகம் மற்றும் கூடலூர் ரோட்டரி கிளப் இணைந்து நடத்தும் தேர்தல் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நாளை (30.3.24) காலை 8 மணிக்கு கூடலூரில் நடைப் பெறும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதில், முதல் பரிசு ரூ.10,001, 2 ஆம் பரிசு ரூ.5,001, 3 ஆம் பரிசு ரூ.3,001 என அறிவிக்கப் பட்டுள்ளது.