Thenilgiris

News April 19, 2024

நீலகிரி: 47 ஓட்டு சாவடியில் யானைகள்

image

கூடலூர், வன பகுதியை ஒட்டிய, 47 ஓட்டு சாவடிகளில் யானை நடமாட்டம் இருந்து வருகிறது. வாக்காளர்களுக்கு யானைகளால் பாதிப்பு ஏற்படாத வகையில் வன ஊழியர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். இப்பணியில் ஓவேலி வனச்சரகர் சுரேஷ்குமார், பறக்கும் படை வனச்சரகர் இலியாஸ் மீரான், வனவர் சுபத் குமார் மற்ற உள்பட வன ஊழியர்கள் பங்கேற்கின்றனர்.

News April 19, 2024

நீலகிரியில் பலத்த பாதுகாப்பு: கலெக்டர்

image

நீலகிரி ஆட்சியர் அருணா நேற்று கூறியதாவது: நீலகிரி மாவட்டத்தில் 689 வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் உள்ளன. அதில் 176 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை. அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கூடலூர் அருகே ஓவேலி, சேரம்பாடி, எருமாடு ஆகிய பகுதி வாக்குச்சாவடிகளில் போலீசாருடன் வனத்துறையின் காட்டுயானை விரட்டும் குழுவினரும் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்றார்.

News April 18, 2024

நீலகிரி தொகுதி வேட்பாளர்கள் பற்றி தெரியுமா?

image

நீலகிரி மக்களவைத் தொகுதியில் மொத்தம் 16 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்கள் யார் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள நீங்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தையோ அல்லது செய்தியின் தலைப்பையோ க்ளிக் செய்து அறப்போர் தொகுதிவாரி காணொளி மூலமாகவோ அறிந்து கொள்ளுங்கள். நாளை அனைவரும் வாக்களிப்போம்! ஜனநாயகத்தை தழைக்கச் செய்வோம்! வாக்களிப்பது நமது உரிமை மட்டுமல்ல, நமது கடமையும் கூட.

News April 18, 2024

நீலகிரி: அடுத்த 3 மணி நேரம் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில்,
நீலகிரி, சேலம், தேனி, கன்னியாகுமரி மற்றும் கிருஷ்ணகிரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (இன்று மாலை 7 மணி வரை) இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News April 18, 2024

கூடலூர் பள்ளியில் ஆட்சியர் ஆய்வு

image

கூடலூர், புனித தாமஸ் பள்ளியில் நீலகிரி பாராளுமன்ற பொதுத்தேர்தல் 19 தேதியன்று வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்படும் தேர்தல் தொடர்பான பொருட்கள் வைக்கப்பட்டுள்ளது. அவைகள் இன்று ( 18 தேதி ) வாக்குசாவடி அலுவலர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. இது தொடர்பாக அங்கு மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மு . அருணா நேரில் ஆய்வு நடத்தினார். உதவி தேர்தல் அலுவலர்கள் உடன் உள்ளனர்.

News April 18, 2024

நீலகிரி: கடந்த தேர்தல் ஒரு பார்வை

image

2019 மக்களவைத் தேர்தலில், நீலகிரி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட ஆ.ராசா வெற்றிபெற்று எம்பியானார். இவர், மொத்தம் 5,47,832 (54.2%) வாக்குகள் பெற்று முதலிடம் பிடித்தார். சுயேச்சை வேட்பாளரான ஆறுமுகம் என்பவர் 1,621 வாக்குகள் பெற்று கடைசி இடம் பிடித்தார். நாளை அனைவரும் வாக்களிப்போம்! ஜனநாயகத்தை தழைக்கச் செய்வோம்! நம் ஓட்டு நமது குரல்!

News April 18, 2024

நீலகிரி: வாக்குசாவடி பொருள்கள் ஆட்சியர் ஆய்வு

image

உதகை பிரிக்ஸ் பள்ளி அரங்கில் நீலகிரி பாராளுமன்ற தேர்தலில் வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்படும் தேர்தல் தொடர்பான பொருட்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அவைகளை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான மு.அருணா நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். உதவி தேர்தல் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

News April 18, 2024

நீலகிரி: ஒரு குடம் தண்ணீர் 20 ரூபாய்!

image

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் மழையின்றி அணைகள் வறண்டு வருகின்றன. இந்த நிலையில் குன்னூர் நகர கடைகளுக்கு ஒரு குடம் தண்ணீர் ரூ.20-க்கு தினசரி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்காக பலர் தங்களது கிணற்று நீரை தள்ளுவண்டியில் கொண்டு சென்று சப்ளை செய்வதால், வியாபாரிகளுக்கு ஓரளவு பயனுள்ளதாக உள்ளது.

News April 18, 2024

உதகை கல்லூரியில் பட்டமளிப்பு விழா

image

நீலகிரி மாவட்டம் உதகை அரசு கலைக் கல்லூரியில் 2021-22ஆம் கல்வியாண்டில் தேர்ச்சி பெற்ற 18 பாடப் பிரிவுகளை சார்ந்த 773 இளங்கலை, 178 முதுகலை மாணவர்கள் என 951 பேருக்கு பட்டம் வழங்கும் நிகழ்வு கல்லூரி அரங்கில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ராமலக்ஷ்மி தலைமை தாங்கினார். பேராசிரியர் சனல் வரவேற்றார். நிகழ்வில் பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், பெற்றோர் என பலர் கலந்துகொண்டனர்.

News April 17, 2024

உதகை: கல்லட்டி மலை பாதையில் விபத்து

image

உதகை அருகே கல்லட்டி மலை பாதையில் இன்று (17 தேதி) கார் ஒன்று வேகம் கட்டுபாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. அந்த காரில் நான்கு பேர் பயணித்த நிலையில் இரண்டு பேர் சிறு காயங்களுடன் உதகை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். உதகை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இவர்கள் கேரளாவில் இருந்து உதகைக்கு சுற்றுலா வந்தவர்கள் என்று போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.