Thenilgiris

News April 20, 2024

நாளை ஒரு நாள் மீண்டும் விடுமுறை அறிவிப்பு

image

நீலகிரி மாவட்டத்தில் நாளை (ஏப் 21) ஞாயிற்றுக்கிழமை மகாவீர் ஜெயந்தி முன்னிட்டு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகளும் அத்துடன் மாவட்டத்தில் உள்ள அனைத்து இறைச்சி கடைகளும், வதைக்கூடங்களும் நாளை ஒரு நாள் முழுநேரம் இயங்காது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். விதி மீறி செயல்படும் கடைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது

News April 20, 2024

நீலகிரி: மீண்டும் யானை நடமாட்டம்

image

கோத்தகிரி அருகே உள்ள சுண்டட்டி கிராமத்தை சுற்றி விவசாயிகள் தேயிலை மற்றும் மலை காய்கறிகள் போன்றவற்றை பயிரிட்டு விவசாயம் செய்துவருகிறார்கள். சமீபத்தில் யானைகள் தண்ணீர் தேடி இங்கு வந்தன. அதன்பின் யானை நடமாட்டம் தென்படவில்லை. இந்த நிலையில் நேற்று மீண்டும் யானை ஒன்று நடமாடியது மக்களை அச்சமடைய செய்தது. யானையை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

News April 20, 2024

பழங்குடியின பெண்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு

image

நீலகிரியில் குறும்பர், இருளர், தோடர், கோத்தர் போன்ற பல்வேறு பழங்குடியினர் வசித்து வருகின்றனர். நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் கோத்தகிரி பகுதியில் உள்ள கோத்தர் இன பெண்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர். தங்களுக்கான வாக்கு சாவடியில், வாக்களித்து ஜனநாய கடமையை நிறைவேற்றினர். வாக்களிப்பது எங்கள் உரிமை என்று கூறினர்.

News April 20, 2024

உதகையில் ஆதரவற்ற முதியோர்கள் ஜனநாயக கடமை

image

நீலகிரி மாவட்டம் உதகை முள்ளிகொரை என்ற இடத்தில் அப்துல் கலாம் ஆதரவற்றோர் முதியோர் இல்லம் செயல்படுகிறது. இதில் 85 பேர் தங்கியுள்ளனர். அவர்களில்  26 பேர் முள்ளிகொரை வாக்குச்சாவடியில் நேற்று தங்களுடைய வாக்குகளை பதிவுசெய்தனர். இதற்கு  அப்துல்கலாம் அறக்கட்டளை இயக்குநர் தஸ்தகீர் ஏற்பாடுகளை செய்து இருந்தார்.

News April 19, 2024

நீலகிரியில் 64.31% வாக்குப்பதிவு

image

நீலகிரி பாராளுமன்ற தொகுதி மொத்த வாக்காளர்கள் 14 லட்சத்து 28 ஆயிரத்து 252 பேர். அரசியல் கட்சி மற்றம் சுயேட்சை வேட்பாளர்கள் 16 பேர் போட்டி களத்தில் உள்ளனர். நீலகிரி தொகுதியில் இன்று (19 தேதி ) வாக்குபதிவு நிலவரம் காலை 9 மணி 8.7 சதவிகிதம் . 11 மணி 21.69 சதவிகிதம். பகல் 1 மணி  40.88 சதவிகிதம். பிற்பகல் 3 மணி  53.02 சதவிகிதம். அதை தொடர்ந்து மாலை 5 மணி நிலவரம் 64.31 சதவிதம் பதிவானது.

News April 19, 2024

நீலகிரி தொகுதி 3 மணி நிலவரம்

image

நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் மொத்த வாக்காளர்கள்  14 இலட்சத்து 28 ஆயிரத்து 252 பேர் உள்ளனர். உதகை, குன்னூர், கூடலூர், மேட்டுப்பாளையம், அவிநாசி, பவானிசாகர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.  நீலகிரி தொகுதியில் இன்று வாக்குபதிவு நிலவரம் காலை  9 மணி 8.7 சதவிகிதம் . 11 மணி 21.69 சதவிகிதம். பகல் 1 மணிக்கு  40.88 சதவிகிதம். அதைதொடர்ந்து பிற்பகல் 3 மணி நிலவரம் 53.02 சதவிதம் பதிவாகியுள்ளது.

News April 19, 2024

1 மணி வரை வாக்குபதிவு 40.88%

image

நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் மொத்த வாக்காளர்கள்  14,28,252 பேர் உள்ளனர். உதகை, குன்னூர், கூடலூர், மேட்டுப்பாளையம், அவிநாசி, பவானிசாகர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கி உள்ளன.  நீலகிரி தொகுதியில் இன்று (19 தேதி ) வாக்குபதிவு நிலவரம் காலை  9 மணி 8.7 % . 11 மணிக்கு 21.69 %. அதன்பிறகு பகல் 1 மணிக்கு 40.88 % சதவிதம் பதிவாகியுள்ளது.

News April 19, 2024

1 மணி நிலவரப்படி 40.88 %  வாக்குப்பதிவு

image

நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் காலை 7 மணியில் வாக்குப்பதிவு துவங்கியது. காலை முதல் வாக்குப்பதிவு மந்தமாக காணப்பட்டது .மேலும் கட்சி தொண்டர்கள் தொடர்ந்து வாக்குகளை சேகரித்து வருகின்றனர். தற்போது 1 மணி நிலவரப்படி. 40.88 % சதவீதம் வாக்கு பதிவாகியுள்ளது. மேலும் வாக்குப்பதிவானது மாலை 6 மணி வரை நடைபெறுகின்றன

News April 19, 2024

நீலகிரி கலெக்டர் ஜனநாயக கடமை

image

நீலகிரி மாவட்டத்தில் காலை 7 மணிமுதல் ஓட்டுப்பதிவு நடைபெற்று வருகிறது. உதகை புனித சூசையப்பர் கல்வியல் கல்லூரி வாக்குச் சாவடியில் இன்று நீலகிரி மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான மு.அருணா தனது வாக்கினை பதிவு செய்தார். முன்னதாக மாவட்ட ஆட்சியர் மு.அருணா பல்வேறு வாக்குச்சாவடிகளில் நடைபெறும் வாக்குப்பதிவினை பார்வையிட்டார்.

News April 19, 2024

நீலகிரி: 11 மணி நிலவரப்படி 21.69% சதவீதம் வாக்கு பதிவு

image

நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் காலை 7 மணியில் வாக்குப்பதிவு துவங்கியது. காலை முதல் வாக்குப்பதிவு மந்தமாக காணப்பட்டது. 11 மணி நிலவரப்படி 21.69% சதவீதம் வாக்கு பதிவாகியுள்ளது. மேலும் வாக்குப்பதிவானது மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. மக்கள் தொடர்ந்து வாக்களித்து வருகின்றனர்.