Thenilgiris

News April 25, 2024

சிறப்பு வாய்ந்த பழங்குடியினர் அருங்காட்சியகம்!!

image

பழங்குடியினர் அருங்காட்சியகம், உதகையில் மு.பாலாடா, பழங்குடியினர் ஆய்வு மைய வளாகத்தில் அமைந்துள்ளது. இவ்வருங்காட்சியகம் கி.பி 1989 -1995ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இதன் முக்கிய நோக்கம், பழங்குடியினரின் பாரம்பரிய கலாச்சாரத்தைப் பாதுகாப்பதாகும். இதில் தமிழகத்தில் வாழும் 36 வகை பழங்குடியினரின் ஆபரணங்கள், வேட்டைக்கருவிகள், வீட்டுப்பொருட்கள், மாதிரி வீடுகள் விவசாய கருவிகள் போன்றவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது

News April 25, 2024

முதுமலை : சுற்றுலா பயணிகளே உஷார்

image

முதுமலை புலிகள் காப்பகத்துக்கு வரும் பயணியர் வசதிக்காக, சுற்றுலா சார்ந்த வாகன சவாரி, தங்கும் விடுதி ஆகியவை ‘ஆன்லைன் புக்கிங் செய்யும் வசதி வனத்துறை மூலம் செயல்படுகிறது. இந்நிலையில், முதுமலை துணை இயக்குநர் வித்யா, “MUDUMALAITIGERRESERVE. COM என்ற இணையதளத்தில் மட்டும் முன் பதிவு செய்ய வேண்டும். எந்த தனியார் ஏஜென்சிகளுக்கும் அனுமதி வழங்கப் படவில்லை” என தெரிவித்துள்ளார்.

News April 25, 2024

WAY2NEWS எதிரொலி வைக்கப்பட்ட அறிவிப்பு பலகை

image

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள டால்பின் நோஸ், லாம்ப்ஸ்ராக் பகுதியில் குத்தகைக்கு எடுத்த தனியார் துறை வாகன பார்க்கிங்க்கு அதிக கட்டணம் வசூலிப்பதாக (ஏப்.,21) நமது WAY2NEWS  தளத்தில் செய்தி பதிவிடப்பட்டது. இதன் விளைவாக பர்லியார் ஊராட்சி மன்ற தலைவர் இதில் தலையிட்டு வாகனங்களுக்கு எவ்வளவு வசூலிக்க வேண்டும் என்று புகார் அளிக்கும் எண்ணுடன் அறிவிப்பு பலகை வைக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

News April 25, 2024

கோத்தகிரியில் ஆலோசனை கூட்டம்

image

மே 5 வணிகர் தின மாநாடு முன்னிட்டு தமிழக முழுவதும் கடைகள் அடைப்பது தொடர்பாகவும் மற்றும் மார்க்கெட்டில் அடிப்படை வசதிகளை பெறுவது தொடர்பாகவும் ஆலோசனை கூட்டம் கோத்தகிரி மார்க்கெட் வியாபாரிகள் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட தலைவர், செயலாளர், பொருளாளர் தலைமை தாங்கினர். உடன் கோத்தகிரி மார்க்கெட் சங்க பொறுப்பாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

News April 25, 2024

மக்களவை தேர்தல் தொகுதி வாரியான வாக்கு விவரம்

image

நீலகிரி மக்களவைத் தொகுதி ஊட்டி, குன்னூர், மேட்டுப்பாளையம், கூடலூர், அவினாசி, பவானி சாகர் என 6 சட்டமன்ற தொகுதிகளை கொண்டுள்ளது. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் குன்னூரில் 1,25,778 பேர், உதகையில் 1,31,789 பேர், கூடலூரில் 1,28,934 பேர், மேட்டுப்பாளையத்தில் 2, 20710 பேர், அவிநாசியில்  2,20710 பேர் பவானிசாகரில் 1,97, 880 பேர் வாக்களித்துள்ளனர். மொத்தமாக தொகுதி முழுவதும் 70.95% வாக்குப்பதிவாகியுள்ளது

News April 25, 2024

நீலகிரி கலெக்டர் எச்சரிக்கை அறிவிப்பு

image

நீலகிரியில் வெயிலின் தாக்கம் கூடுதலாகி வருவதால் பொதுமக்கள் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். அவசர தேவையின்றி பகல் 12 முதல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். வெயில் தாக்கத்தில் உடல்நல குறைவு ஏற்பட்டால் மருத்துவரை அணுக வேண்டும்’ என நீலகிரி ஆட்சியர் மு.அருணா தேவி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

News April 25, 2024

குன்னூர் பகுதியில் அறிவிக்கப்பட்ட மின் நிறுத்தம் ரத்து

image

குன்னூர் அருகே ஜெகதளா துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (ஏப்.,24) குன்னூர் நகரம் உள்பட பல்வேறு இடங்களில் காலை 10 மணி முதல் 12 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்து இருந்தது. தற்போது மின் நிறுத்தம் ரத்து செய்வதாக குன்னூர் மின்வாரிய பொறியாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதனால் வழக்கம் போல மின்சாரம் இருக்கும்.

News April 24, 2024

கேரளா கோழி, முட்டை நீலகிரி வர தடை

image

கேரளாவில் பறவை காய்ச்சல் பரவி வருவதால், நீலகிரி மாவட்ட எல்லையில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் நீலகிரிக்கு கேரளாவில் இருந்து கோழி, முட்டை போன்றவைகள் வாகனங்களில் ஏற்றி வருவது மறு உத்தரவு வரும் வரை தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது என கலெக்டர் அருணா அறிவித்துள்ளார்.

News April 24, 2024

தந்தி மாரியம்மன் புலி வாகன உற்சவம்: பக்தர்கள் உற்சாகம்

image

நீலகிரி மாவட்டம் குன்னூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற தந்தி மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த 3 வார காலமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று (ஏப்.22) கிருஷ்ணாபுரம் பொதுமக்களின் சார்பாக அம்மனின் புலி வாகன உற்சவ நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வில் ஆடல், பாடல், அன்னதானம், அம்மன் அலங்கார ஊர்வலம், சிறப்பு வழிபாடு, சிறப்பு அபிஷேகம், மண்டகப்படி உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

News April 24, 2024

ரேஷன் அரிசியில் எலியின் எச்சம்: மக்கள் அச்சம்

image

கூடலூர் அருகே உள்ள பந்தலூரில் அமைந்துள்ள நியாயவிலை கடையில் வழங்கப்பட்ட அரிசியில் எலியின் எச்சம், சணல் கயிறு, கான்கிரீட் கற்கள் இருப்பதை கண்டு பயனாளிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கடை ஊழியர்களிடம் கேட்டபோது, ஊழியர்கள் மிகவும் அலட்சியமாக பதில் கூறுவதாக பயனாளிகள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே அரசு சம்பந்தப்பட்ட துறையை கண்காணித்து தரமான அரிசியை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை எழுந்துள்ளது.