Thenilgiris

News April 29, 2024

கோடைக்கால விளையாட்டு பயிற்சி முகாம்

image

உதகை எச்ஏடிபி விளையாட்டு மைதானத்தில் தடகளம், கூடைப்பந்து, கால்பந்து பயிற்சி, குன்னுார் அறிஞர் அண்ணா மேல்நிலை பள்ளி மைதானத்தில் ஹாக்கி விளையாட்டுக்கான பயிற்சி இன்று தொடங்கி மே 13ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது. இதில் 10 முதல் 18 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவியர் பயிற்சி முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் மாவட்ட விளையாட்டு இளைஞர் நலன் அலுவலர் அலுவலகத்தில் பதிவு செய்யலாம்.

News April 29, 2024

நீதித்துறையில் வேலை வாய்ப்பு

image

நீலகிரி மாவட்ட நீதித்துறையில் 33 காலியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி. வயது வரம்பு: ஜூலை 1ஆம் தேதி 2024 அன்று 32 வயதுக்குள் இருக்க வேண்டும். பணி இடங்கள் தொடர்பான கூடுதல் விவரங்களை https://www.mhc.tn.gov.in/recruitment/notification_dist தளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம். இதற்கான விண்ணப்பங்களை மே 27ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

News April 29, 2024

பறவை காய்ச்சல் தடுப்பு பணி தீவிரம்

image

கேரளாவில் பறவை காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில், பந்தலுார் அருகே சேரம்பாடி சோலாடி சோதனை சாவடியில் கால்நடை டாக்டர் நவீன் தலைமையிலான குழுவினர் கேரளாவில் இருந்து தமிழக எல்லைக்குள் வரும் சரக்கு வாகனங்கள் அனைத்தையும் கிருமி நாசினி தெளிக்கப்பட்ட பின்னரே அனுமதிக்கின்றனர். கிராம பகுதிகளில் கோழிகள், வாத்துக்கள் வளர்ப்போர் மத்தியில் பறவை காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

News April 29, 2024

நீலகிரி முதுமலை புலிகள் காப்பகம்!

image

ஊட்டியில் இருந்து 70கி.மீ தொலைவில் உள்ளது. 688.59 ச.கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த மேற்குத் தொடர்ச்சி மலைகள் 65 மில்லியன் ஆண்டுகள் பழமையானது. இந்தியாவில் காணப்படும் பறவை இனங்களில் எட்டு சதவீதம் முதுமலையில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இங்கு புலி, யானை, சிறுத்தை, புள்ளிமான், குரைக்கும் மான் போன்ற விலங்குகள் இங்கு உள்ளன. இங்கு சில சாலைகளில் பயணத்தை மேற்கொள்ள சில நேரக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

News April 29, 2024

வெப்பத்தால் சாதனங்கள் செயலிழப்பா?

image

நீலகிரி எம்பி தொகுதி அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்செல்வன் நேற்று மாலை ஓட்டு எண்ணும் மையத்தை பார்வையிட்ட பின் நிருபர்களிடம் கூறியதாவது: கேமராக்கள் செயல் இழந்துவிட்டன. அதிக வெப்பம் காரணமாக சூடானதால் இந்த பிரச்சனை ஏற்பட்டது என தேர்தல் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இது நம்பும்படியாக இல்லை, சரியான விளக்கம் கிடைக்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

News April 29, 2024

ஊட்டிக்கே இந்த நிலைமையா?

image

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கூட இதுவரை இல்லாத வகையில் வெப்பம் பதிவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் ஊட்டியில் நேற்று 84.2 டிகிரி (29 செல்சியஸ்) வெயில் பதிவானது. அதாவது இயல்பை விட 10 டிகிரி பாரன்ஹீட் (5.4 டிகிரி செல்சியஸ்) அதிகரித்துள்ளது. இதற்கு முன்பு 1969, 1986, 1993, 1995, 1996 ஆகிய ஆண்டுகளில் 80.6 டிகிரி முதல் 83.3 டிகிரி வரையில் பதிவாகி இருந்தது.

News April 29, 2024

முதுமலை புலிகள் காப்பகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு

image

முதுமலையில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியால் தாவரங்கள் உதிர்ந்து வனப்பகுதி பசுமை இழந்து காணப்படுகிறது. வன விலங்குகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. யானை, காட்டெருமை உள்ளிட்ட விலங்குகள் உணவு, குடிநீருக்காக இடம் பெயர்ந்துள்ளன. வன விலங்குகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, வனத்துறையினர் மாயார் ஆற்றிலிருந்து வாகனங்கள் மூலம் தண்ணீர் எடுத்து வந்து தொட்டிகளில் நிரப்புகின்றனர்.

News April 29, 2024

நீலகிரியில் வெளியான முக்கிய அறிவிப்பு

image

உலக புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான நீலகிரி மாவட்டம் ஆண்டுதோறும் மே மாதம் முழுவதும் கோத்தகிரி குன்னூர் ஊட்டி கூடலூர் பகுதியில் உள்ள பூங்காக்களில் கண்காட்சிகள் நடைபெறுவது வழக்கம்.கோடை விழாவை காண உள்ளூர் வெளிமாநில வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஏராளமான வருகை தந்து மகிழ்வார்கள்.
இந்த ஆண்டு உதகையில் 126 மலர்கண்காட்சி மே 10 முதல் 20 ஆம் தேதி வரை நடைபெற என அறிவிக்கப்பட்டுள்ளது

News April 28, 2024

உதகையில் 11 நாள் மலர் கண்காட்சி

image

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 126ஆவது மலர் கண்காட்சி மே 17ஆம் தேதி முதல் மே 22ஆம் தேதி வரை 6 நாள் நடத்த ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தற்போது மலர் கண்காட்சி தேதி மாற்றப்பட்டுள்ளது. அதன்படி வருகின்ற மே 10ஆம் தேதி முதல் மே 20ஆம் தேதி வரை 11 நாட்கள் மலர் கண்காட்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

News April 28, 2024

நீலகிரி ஆட்சியர் அருணா விளக்கம்

image

நீலகிரி கலெக்டர் அருணா கூறியுள்ளதாவது; அதிக வெப்பத்தால் ஷார்ட் சர்க்யூட் ஏற்பட்டு சிசிடிவி செயலிழப்பு ஏற்பட்டது. வேறு எந்தவித முறைகேடும் நடக்கவில்லை. வாக்கு பதிவு இயந்திரம் பாதுகாப்பாக உள்ளன. சந்தேகம் இருந்தால் கட்சியினரை அழைத்து சென்று காட்ட தயாராக இருக்கிறோம் என்றும் (CCTV) கேமரா செயலிழப்புக்கு விளக்கம் அளித்து உள்ளார்.