Thenilgiris

News May 1, 2024

நீலகிரி: எல்லையில் துப்பாக்கி சண்டை

image

தமிழக கேரளா எல்லை பகுதியில் அதிரடிப்படையினர் முகாமிட்டு நக்சல்களை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று பகல் 11 மணிக்கு வனப்பகுதிக்குள் சென்ற தண்டர்போஸ்ட் போலீசார் மற்றும் நக்சல் இடையே 9 முறை துப்பாக்கி சூடு சண்டை நடந்துள்ளது. இது குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. இது அந்த பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

News May 1, 2024

உஷ்ணம் தணிக்க கலெக்டர் அறிவுரை

image

நீலகிரி மாவட்ட ஆட்சி தலைவர் அருணா விடுத்துள்ள செய்தியில், ‘வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் அதை தணிக்க, அதிக தண்ணீர் குடியுங்கள், வெயிலில் பயிற்சி வேண்டாம், காலை 11 முதல் 3.30 வரை சூரிய வெளிச்சத்தில் நிற்காதீர், மது குடிக்காதீர், பழம், காய்கறி சாப்பிடுங்கள், லேசான உணவை எடுத்து கொள்ளுங்கள்’ என்று அறிவுறுத்தி உள்ளார்.

News April 30, 2024

குன்னூர் நகரமன்ற தலைவர் ஆய்வு

image

குன்னூர் நகர மன்ற தலைவர் விளையாட்டு மேம்பாட்டு அணி மாநில துணை செயலாளர் பா.மு.வாசிம் ராஜா அவர்கள் இன்று
குன்னூர் நகராட்சி 10வது வார்டு டைகர் ஹில் பகுதியில் 28 ஆண்டுகளுக்கு பிறகு சீரமைக்கப்பட்ட தார் சாலையினை அப்பகுதி நகரமன்ற உறுப்பினர் ஐ.பாக்கியவதி அவர்களுடன் ஆய்வு செய்தார். உடன் மாவட்ட பிரதிநிதி எஸ்.மணிகண்டன் MC, ஒப்பந்ததாரர் உள்ளனர்.

News April 30, 2024

நீலகிரி கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

image

சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களுக்கு, ”முதலமைச்சர் மாநில இளைஞர் விருது” ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று 15 வயது முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் மட்டுமே இதற்காக விண்ணப்பிக்க முடியும். மேலும் விண்ணப்பிக்க 01.05.2024 முதல் 15.05.2024 வரை விண்ணபிக்கலாம் என நீலகிரி ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News April 30, 2024

நகராட்சி மார்க்கெட் கடைகளுக்கு விடுமுறை

image

ஊட்டி அனைத்து வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ள தகவல்: மதுரையில் 41வது வணிகர் மாநாடு மற்றும் பேரணி மே 5ஆம் தேதி நடைபெறுகிறது. அறைய தினம்  உதகை மார்க்கெட் கடைகளுக்கு காலை 6 மணிமுதல் மாலை 6 மணி வரை விடுமுறை விடப்படுகிறது. மேலும் 4ஆம் தேதி இரவு 10 மணி வரை கடைகள்  திறந்திருக்கும். பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான பொருள்களை முன்கூட்டியே வாங்கி வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

News April 30, 2024

நீலகிரி: டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

image

மே ஒன்றாம் தேதி தொழிலாளர் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு வாணிப கழகத்தின் கீழ் இயங்கும் மதுபான கடைகள் மற்றும் மதுபான விடுதிகள் ஆகியவற்றை நாள் முழுவதும் அடைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. உத்தரவை மீறி செயல்படுபவர்கள் மீது சட்டப்பிரிவுகளுக்கு கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News April 30, 2024

நீலகிரி: அதிகரிக்கும் விதிமீறிய காட்டேஜ்கள்

image

நீலகிரியில் காட்டேஜ்கள்
விதிமீறலை தடுக்க, ஊட்டி, குன்னுார், கோத்தகிரி, கூடலுார் ஊராட்சி ஒன்றியங்களின் கீழ் உள்ள, 35 கிராம ஊராட்சிகள், 11 பேரூராட்சி மற்றும் 3 நகராட்சி பகுதிகளில் விதிமீறி கட்டப்பட்ட காட்டேஜ்கள் குறித்து அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கணக்கெடுப்பு நடத்தி நடவடிக்கை எடுக்க,
சுற்று சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

News April 30, 2024

நீலகிரி ஆட்சியர் அருணா அறிவிப்பு

image

தற்போது நிலவும் தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வுகாண பல கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. ஊட்டி நகராட்சியை பொருத்தமட்டில் மே இறுதிவரை சமாளிக்கக்கூடிய அளவுக்கு அணைகளில் நீர் இருப்பு உள்ளது. ஒரு சில இடங்களில் மட்டும் வாரம் ஒருமுறை நீர் விநியோகிக்கப்படும் நிலை உள்ளது. அதுவும் கூடிய விரைவில் சரிசெய்யப்படும். தவிர தேவைப்படும் பகுதிகளுக்கு லாரிகள் மூலம் நீர் விநியோகிக்கப்படும் என நீலகிரி ஆட்சியர் தெரிவித்தார்.

News April 30, 2024

நீலகிரியில் காய்கறிகள் விலை கிடுகிடு உயர்வு

image

நீலகிரி மாவட்டத்தில் மலை காய்கறிகள் பயிரிடப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக கோடை வெயில் தாக்கத்தினால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தோட்டங்களில் பயிரிட்டுள்ள காய்கறிகள் தண்ணீர் பாய்ச்ச இயலாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர். காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்து
அவரை ரூ.180, பீன்ஸ் ரூ.200, கேரட் ரூ.80, ப்ரக்கோலி ரூ.240
விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

News April 30, 2024

நீலகிரியில் செயற்கை நுண்ணறிவு கேமராக்கள்

image

நீலகிரி மாவட்டம் கூடலூரிலிருந்து கேரளா மாநிலம் வயநாடுக்கு செல்லும் சாலையில் உள்ள நோலக்கோட்டை பஜாருக்கு தினமும் காட்டு யானைகள் நுழைந்து சேதப்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில் காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவதை கண்காணிக்க செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் 90 இடங்களில் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.