Thenilgiris

News May 3, 2024

ஊட்டிக்கு நாளை முதல் 25 கூடுதல் பஸ்

image

அக்கினி வெயில் நாளை காலை 9.30 க்கு தொடங்குகிறது. இதை தொடர்ந்து, மலை மாவட்டமான நீலகிரியில் உள்ள கோத்தகிரி, கோடநாடு, குன்னூர், ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் படை எடுத்து வருகின்றனர். இதனால், ஏற்கனவே இருக்கும் வழித்தட பேருந்துகள் போதியதாக இல்லை. இதை கருத்தில் கொண்ட மாநில போக்குவரத்து துறை கோவையில் இருந்து நாளை முதல் 25 சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

News May 3, 2024

யாருக்கெல்லாம் இ – பாஸ் தேவை இல்லை

image

வருகிற மே7 ம் தேதி முதல் நீலகிரி செல்ல இ – பாஸ் கட்டாயம் என அரசு அறிவித்து உள்ள நிலையில், யாருக்கெல்லாம் இ-பாஸ் தேவையில்லை என்பது குறித்து வட்டார போக்குவரத்து துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் வெளி மாவட்ட பதிவு எண் கொண்டு நீலகிரியில் பயன் படுத்தி வரும் வாகனம், மற்றும் நீலகிரி பதிவு எண் கொண்ட வாகனங்களுக்கு இ பாஸ் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 3, 2024

நீலகிரி சிம்ஸ் பூங்கா சிறப்புகள்!

image

குன்னூரில் உள்ள தாவரவியல் பூங்கா, 12 ஹெக்டர் பரப்பளவு கொண்டது. இதை ஜே.டி. சிம்ஸ் மற்றும் மேஜர் முர்ரே ஆகியோரால் 1874 துவக்கப்பட்டதாகும். இதில் இயற்கையாக மரங்கள், செடிகள், புதர்கள் வளர்க்கப்பட்டன. அதனுடன் இப்பூங்காவில் உலகம் முழுவதுமிருந்து அரிய வகை தாவரங்களும் கொண்டுவரப்பட்டன. இந்தப் பூங்காவில் 85 குடும்பங்களைச் சேர்ந்த, 1000க்கும் மேற்பட்ட இனத்தாவரங்கள் இங்கு பாதுகாத்துப் பராமரிக்கப்படுகிறது.

News May 3, 2024

நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்பு

image

நீலகிரியில் அடுத்த 4 நாட்களுக்கு (மே.6) இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கி.மீ முதல் 40 கி.மீ வரை) ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், நீலகிரி மாவட்டத்தில் மே.7ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நீலகிரியில் இதுவரை இல்லாத அளவு உட்சபட்ட வெப்ப அலையின் தாக்கம் இருந்து வந்த நிலையில் இச்செய்தி வெளியாகியுள்ளது.

News May 3, 2024

மசினகுடியில் கடும் வறட்சி: 15 மாடுகள் உயிரிழப்பு

image

உதகை அருகே மசினகுடி பகுதியில் கடும் வறட்சி நிலவுகிறது. தாவரங்கள், புல்வெளிகள் காய்ந்து நீர்நிலைகள் வறண்டு காணப்படுகின்றன. இதனால் தீவனம் இல்லாமல், தாகம் தீர்க்க தண்ணீர் இல்லாமல் மாடுகள் அங்குமிங்கும் அலைகின்றன. கடந்த ஒரு வாரத்தில் சுமார் 15 மாடுகளுக்கு மேல் இறந்தன. அங்கு ஒரு குவாரி பகுதியில் நேற்று (மே 2) மட்டும் 5 மாடுகளின் உடல்கள் கிடந்தன. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

News May 3, 2024

நீலகிரியில் பூங்கா மூடியதால் ஏமாற்றம்

image

கோத்தகிரி கன்னேரிமூக்கு பகுதியில் நீலகிரி முதல் கலெக்டர் ஜான் சல்லிவன் முகாம் அலுவலகம் (CAMP OFFICE) தற்போது மாவட்ட ஆவண காப்பகமாக செயல்பட்டு வருகிறது. இதனை காண கணிசமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதன் அருகே ஜான் சல்லிவன் நினைவு பூங்கா உள்ளது. நடப்பாண்டு வறட்சி காரணமாக பராமரிக்கப்படாமல் மூடப்பட்டுள்ளதால் இதை பார்க்க வருபவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

News May 2, 2024

இன்று மாலை 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில், நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் ஆகிய 6 மாவட்டங்களில் இன்று மாலை 7 மணி வரை இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News May 2, 2024

ஊட்டியில் விழிப்புணர்வு

image

ஊட்டி ஏடிசி பேருந்து திடல் அருகே ஆட் கடத்தல் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு நடந்தது. இதற்கு நீதிபதி லிங்கம் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி பிரவினாதேவி, சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளர் லட்சுமணதாஸ், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குநர் கீர்த்தி வேல்ராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.

News May 2, 2024

நீலகிரியில் மழைக்கு வாய்ப்பு

image

நீலகிரி மாவட்டத்தில் இன்று (மே.02) இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கி.மீ முதல் 40 கி.மீ வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிகத்து வரும் நிலையில், தற்போது மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

News May 2, 2024

நீலகிரி வாலிபர் இத்தாலியில் மர்ம சாவு

image

பந்தலூர் ஆனைகட்டியை சேர்ந்தவர்கள் வில்சன்-தங்கமா தம்பதி. இவர்களின் மகன் சஜீஷ் (34). இவர் 2018 முதல் இத்தாலியில் பணியாற்றிவந்தார். இந்த நிலையில், அவரை தொடர்புகொள்ள முடியாததால் இத்தாலியில் உள்ள சஜீஷின் உறவினர் உதவியுடன் விசாரித்தபோது அவர் உயிரிழந்ததும், அவரது உடல் இத்தாலி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதும் தெரியவந்தது. சஜீஷ் உடலை இந்தியாவுக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.