India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஊட்டி சீசனை அடுத்து கேரளா, கர்நாடகா உட்பட தமிழ்நாடு சுற்றுலா பயணிகள் வார இறுதியில் மட்டும் அல்லாமல் தினசரி வந்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் பந்தலூர் நாடுகாணி, சேரம்பாடி வனப்பகுதி சாலை ஓரங்களில் பிளாஸ்டிக் பைகளில் உணவு கழிவுகளை நிரப்பி வீசி செல்கின்றனர். இதனால் வன விலங்கு மற்றும் சுற்று சூழல் பாதித்து வருகிறது.

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இன்று(ஏப்.07) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், தும்மனட்டி அரசு பள்ளி மாணவர் விடுதி காப்பாளர் சரவணன் அவர்கள் உத்தரபிரதேச மாநிலத்தில் இந்திய பாரா ஒலிம்பிக் கமிட்டி மூலம் நடைபெற்ற தேசிய அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா பளுதூக்கும் போட்டியில் தேசிய அளவில் இரண்டாம் இடம் பெற்று வெள்ளிப்பதக்கம் வென்றதற்கு ஆட்சியர் பாராட்டுக்கள் தெரிவித்தார்.

கூடலூர், பொன்னூர் அருகே உள்ள பொன்வயல் பகுதியில் பொன்மலை முருகன் கணபதி ஆலயத்தின் 18ஆம் ஆண்டு திருத்தேர் திருவிழாவையொட்டி, ஏப்ரல் 12ஆம் தேதி காலை 9 மணிக்கு வழுக்கு மரம் ஏறும் போட்டி நடைபெற உள்ளது. கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் பொன்.ஜெயசீலன் இந்த போட்டியை தொடங்கி வைக்கிறார்.போட்டி விவரங்கள்:
இடம்: பொன்வயல், கூடலூர்
நாள்: ஏப்ரல் 12, 2024
நேரம்: காலை 9 மணி முதல்
பரிசு: முதல் பரிசு ரூ.10,000

அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ளபணியிடங்களை நிரப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, விண்ணப்பங்களை www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, விண்ணப்பிக்கலாம். ஊதியமாக ரூ.7700 முதல் 24200 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப்.23ஆகும். (SHARE பண்ணுங்க.)

நேற்று வார விடுமுறை என்பதால், கேரளாவில் இருந்து, கூடலுார் நாடுகாணி வழியாக ஊட்டிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வாகனங்களில் வருகை தந்தனர். இந்நிலையில், சர்வரில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, நேற்று காலை ஒரு மணி நேரத்துக்கு மேலாக, இ–பாஸ் பதிவு செய்ய முடியாமல் சுற்றுலா பயணிகள் சிரமப்பட்டனர். இதனால், இரண்டு கி.மீ., துாரத்துக்கு வாகனங்கள் வரிசையில் நிறுத்தப்பட்டது.

2025ஆம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த பாறு கழுகுகள் கணக்கெடுப்பு தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடக மாநில வனத்துறை உடன் ஒருங்கிணைந்து காட்சி கோண எண்ணிக்கை முறையில் 106 இடங்களில் கணக்கெடுப்பு நடைபெற்றது. தமிழ்நாட்டில் மொத்தம் 157 கழுகுகள் மதிப்பிடப்பட்டுள்ளன. அதில் நீலகிரி மாவட்டத்தில் 120 கழுகுகள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு 12th, Any Degree, Diploma, DMLT, ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஊதியம் ரூ.60,000 வரை வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க <

“ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு எந்தவொரு கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. தனியார் சுற்றுலா வாகனங்களுக்கு மட்டுமே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சுற்றுலாப் பயணிகள் அரசுப் பேருந்துகளில் சென்று வரட்டும்” என்றனர். பின்னர் அரசு தாக்கல் செய்துள்ள மறு ஆய்வு மனு வரும் ஏப்.8-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

நீலகிரி வனப்பகுதிகளில் அந்நிய மரங்கள் அகற்றம் தொடர்பான வழக்குகள் நீதிபதிகள் என்.சதீஷ்குமார்,டி.பரதசக்கரவர்த்தி கொண்ட சிறப்பு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் “நீலகிரியில் 191 இடங்களில் அந்நிய மரங்களை அகற்றுவதற்கு சிப்பர்,பல்வரீஷ் போன்ற நவீன எந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது” என்று விளக்கம் அளித்து இது தொடர்பான காணொளி காட்சி காட்டப்பட்டது. நீதிபதிகள் பாராட்டு தெரிவித்தனர்.

வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் இன்று தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், நீலகிரி மாவட்டத்தில் இன்று கனமழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரியில், நேற்று இரவு பல இடங்களில் மழை பெய்தது குறிப்பிடத்தக்கது. மக்களே வெளியில் செல்லும்போது குடையுடன் செல்லுங்கள். SHARE IT!
Sorry, no posts matched your criteria.