Thenilgiris

News May 11, 2024

ஜூலை 2இல் துணைத் தேர்வு?

image

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இந்நிலையில், தேர்வில் தேர்ச்சி பெறாத, தேர்வு எழுதாத மாணவர்களின் எதிர்கால நலன் கருதி 10ஆம் வகுப்பு துணைத் தேர்வை ஜூலை 2ஆம் தேதி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் தேர்ச்சி பெறுபவர்கள் இந்தக் கல்வியாண்டிலேயே உயர் கல்வி பயிலத் தகுதியுடையோராவார். இதற்கான தேர்வு அட்டவணை இன்று (மே 11) வெளியிடப்படும் எனத் தெரிகிறது.

News May 10, 2024

10 வகுப்பு பொது தேர்வு முடிவு- மாணவி அசத்தல்

image

பந்தலூர், எருமாடு அரசு மகளிர் உயர்நிலை பள்ளியில் 10-ஆம் வகுப்பு பொது தேர்வில் மாணவி அஸானா 489 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். இவருடைய தந்தை நாகராஜ். தாயார் சஜிதா. இருவரும் ஆட்டோ ஓட்டுநராக உள்ளனர். தேர்வில் முதலிடம் பிடித்த மாணவிக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

News May 10, 2024

நீலகிரியிலிருந்து பெங்களூரு புறப்பட்ட சென்ற முதல்வர்

image

கர்நாடக முதலமைச்சர் சித்தராமைய்யா கடந்த 7ஆம் தேதி உதகை வந்தார். ஒரு தனியார் பங்களாவில் தங்கி இருந்து ஓய்வு எடுத்தார். அவர் இன்று உதகையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பெங்களூர் புறப்பட்டுச் சென்றார். AICC உறுப்பினர் விவேக் லஜபதி, மாநில காங்கிரஸ் செயலாளர் நாகராஜ், மாவட்ட செயலாளர்கள் எஸ்.எம்.ரபீக், மானேக் சந்திரன், ரவிக்குமார் மற்றும் காங்கிரசார் மலர் கொத்து வழங்கி வழியனுப்பி வைத்தனர்.

News May 10, 2024

நீலகிரி 29ஆவது இடம்!

image

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே.10) வெளியாகியுள்ளது. அதன்படி நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 85.68% ஆக பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 81.93 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 90.17 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். அரசு பள்ளிகளில் தேர்ச்சி அடிப்படையில் நீலகிரி மாவட்டம் 29ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

News May 10, 2024

கோடை விழா துவக்கம்

image

உலக புகழ்பெற்ற இயற்கை சுற்றுலாத்தலமான நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் கோடை விழா களைகட்டுவது வழக்கம். இந்த ஆண்டு தேர்தல் கட்டுப்பாடுகளால் கோத்தகிரி, கூடலூர் பகுதிகளில் உள்ள பூங்காக்களில் எந்த ஒரு நிகழ்வும் நடைபெறவில்லை என்றாலும், இன்று உதகையில் 126வது மலர் கண்காட்சி கோலாகலமாக துவங்கி உள்ளது. ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தந்தவண்ணம் உள்ளனர்.

News May 10, 2024

10th RESULT: நீலகிரியில் 90.61% தேர்ச்சி!

image

தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 10) வெளியாகியுள்ளது. அதன்படி நீலகிரி மாவட்டத்தில் 90.61% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 86.77% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 94.32% தேர்ச்சி அடைந்துள்ளனர். www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் தேர்வு முடிகளை அறிந்து கொள்ளலாம்.

News May 10, 2024

ஆர்வ கோளாறால் அபாயத்தை தேடாதீர்!

image

சர்வதேச பிரசித்தி பெற்ற ஊட்டி மலர் கண்காட்சியை காண சுற்றுலா பயணிகள் வெளி மாநிலம், வெளி மாவட்டம், வெளி நாடு என வாகனங்களில் வருகிறார்கள். அதேபோல் மலை ரயில் பயணத்துக்கு பல மாதங்களுக்கு முன்பு முன்பதிவு செய்துள்ளனர். அப்படி ரயிலில் பயணம் செய்பவர்கள் வன விலங்குகளை கண்டதும் ஆர்வத்தில் கதவில் தொங்கியபடி செல்பி எடுப்பதை தவிர்க்க வேண்டும் என்று ரயில்வே துறை அறிவுறுத்தி உள்ளது.

News May 10, 2024

உதகை மலர் கண்காட்சி திருவிழா கோலம்

image

உதகை அரசினர் தாவரவியல் பூங்காவில் 126வது மலர் கண்காட்சி, ரோஜா பூங்காவில் 19வது 
ரோஜா  கண்காட்சி ஆகியவை இன்று தொடங்குகிறது. இந்த கண்காட்சிகள் மே 19ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. உதகை அரசினர் கலைக்கல்லூரி மைதானத்தில் தென்னிந்திய கென்னல் கிளப் சார்பில் நாய்கள் கண்காட்சி இன்று தொடங்கி 12 தேதிவரை 3 நாள் நடைபெறுகிறது. உதகை நகரம் மூன்று நிகழ்ச்சிகளால் திருவிழா கோலம் பூண்டுள்ளது.

News May 10, 2024

ஊட்டியில் காவல் உதவி மையங்கள் அமைப்பு

image

இன்று (மே 10) ஊட்டி மலர்காட்சி காண வரும் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி போலீசார் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதனடிப்படையில், குற்ற சம்பவங்களை தடுக்க சிறப்பு கிரைம் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் முக்கிய சுற்றுலா தலங்கள் அருகில் காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது என்று மாவட்ட எஸ்பி சுந்தரவடிவேல் அறிவித்துள்ளார்.

News May 10, 2024

ஊட்டியில் ரூ.77 லட்சம் பரிசு அறிவிப்பு

image

ஊட்டியில் கோடை சீசனின்போது மெட்ராஸ் ரேஸ் கிளப் சார்பில் குதிரை பந்தயம் நடத்தப்படுகிறது. நடப்பாண்டின் 137வது குதிரை பந்தயம் கடந்த மாதம் 6ஆம் தேதி தொடங்கி நடந்து வருகின்றது. இதற்காக சென்னை, பெங்களூரு உட்பட பல மாநிலங்களில் இருந்து 500 பந்தய குதிரைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. முக்கிய போட்டியான
நீலகிரிஸ் டெர்பி மே 12ம் தேதி நடக்கிறது. டெர்பி குதிரை பந்தயத்துக்கு ரூ.77 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.