Theni

News May 14, 2024

+1 RESULT: தேனி 90.08% தேர்ச்சி!

image

தமிழ்நாட்டில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 14) வெளியாகியுள்ளன. அதன்படி தேனி மாவட்டத்தில் மாணவர்கள் 85.84% பேரும், மாணவியர் 94.04% பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக 90.08% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. மாணவர்கள் www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் தேர்வு முடிகளை அறிந்து கொள்ளலாம்.

News May 14, 2024

பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

image

முல்லைப் பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் நேற்று மழை பெய்ததால் நேற்று வரை வினாடிக்கு 100 கன அடியாக இருந்த அணையின் நீர்வரத்து, இன்று காலை முதல் வினாடிக்கு 405 கனஅடியாக அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 115.10 அடியாகவும் அணியிலிருந்து தமிழக பகுதிக்கு விவாதிக்க நூறு கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது. பெரியார் அணை 24.8 மி.மீ, தேக்கடி 6.மி.மீ மழை பதிவாகி உள்ளது.

News May 14, 2024

விளையாட்டு வீரா் இட ஒதுக்கீட்டில் மாணவா் சோக்கை

image

உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் ஹெளதியா கல்லூரியில் விளையாட்டு வீரா்களுக்கான இட ஒதுக்கீட்டின் கீழ் சேர விரும்பும் மாணவ மாணவிகளுக்காக மே 16-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை விளையாட்டு போட்டிகளுக்கான தோ்வு நடைபெறுகிறது. இதில் பங்கேற்க ஆா்வமுள்ள இளநிலை, முதுநிலை வீரா்கள், கல்லூரி உடற்கல்வி இயக்குநரை அணுகி போட்டித் தேர்வில் கலந்து கொள்ளலாம் என கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது. 

News May 13, 2024

தேனி மாவட்டத்தில் மழை

image

குமரிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இரவு10 மணி வரை தேனி மாவட்டத்தில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 13, 2024

தேனி மாவட்டத்தில் மழை

image

குமரிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இரவு 7 மணி வரை தேனி மாவட்டத்தில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 13, 2024

திருமலைராயப் பெருமாள் கோவில் கொடியேற்றம்

image

தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டம்
கோம்பை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அருள்பாலித்து வரும் பிரசித்தி பெற்ற
அருள்மிகு திருமலைராயப்பெருமாள் திருக்கோயில்
தேர் திருவிழாவை முன்னிட்டு இன்று மலைக்கோவிலில் உள்ள
கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டது. இன்று காலை விசேஷ பூஜை
செய்யப்பட்டு, வேதங்கள் முழங்க மலை
அடிவாரத்தில் கொடி ஏற்றப்பட்டது. இதில் ஏராளமாக பக்தர்கள் கலந்து கொண்டனர்.

News May 13, 2024

விளையாட்டு விடுதியில் சேர கால்பந்து வீரர்கள் தேர்வு

image

தமிழகத்தில் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் மாவட்டம் வாரியாக விளையாட்டு விடுதிகள் செயல்படுகின்றன. ஒவ்வொரு மாவட்டத்திலும் குறிப்பிட்ட விளையாட்டுகளுக்கு பயிற்சி வழங்கி மாநில, தேசிய, சர்வதே போட்டிகளில் பங்கேற்க வைக்கின்றனர். இதற்கான வீரர்கள் தேர்வு மாவட்ட வாரியாக நடக்கிறது. இந்நிலையில் மாநில அளவிலான கால்பந்து வீரர்கள் தேர்வு தேனி மாவட்ட விளையாட்டு அரங்கில் மே 20 முதல் 25 வரை நடைபெறவுள்ளது.

News May 13, 2024

தேனியில் இன்று மழை பெய்ய வாய்ப்பு

image

தமிழகத்தை ஒட்டிய மேல் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபாடும் பகுதி நிகழ்கிறது. இதன்படி தேனி மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் இன்று(மே 13) இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஆங்காங்கே கோடை மழை பெய்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

News May 13, 2024

பைக் மோதி நடந்து சென்றவர் பலி

image

சக்கம்பட்டியை சேர்ந்தவர் அய்யப்பன். இவர் ஆண்டிப்பட்டி பஜாரில் உள்ள நகைக்கடையில் வாட்ச்மேனாக பணிபுரிந்து வந்தார். நேற்று அவர் பணிக்கு செல்வதற்காக ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது வேகமாக வந்த பைக் அவர் மீது மோதியது. கீழே விழுந்த அவருக்கு தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

News May 13, 2024

கடமலைக்குண்டு அருகே இருதரப்பு மோதல்

image

தர்மராஜபுரத்தை சேர்ந்தவர் சிவகுமார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிலம்பரசன் குடும்பத்திற்கும் நிலப்பிரச்சினை இருந்து வந்தது. அதன் காரணமாக நேற்று இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு அடிதடி நடந்தது. சிவக்குமாரின் மகளை கையை பிடித்து இழுத்ததாகவும் , சிலம்பரசனின் தாய் ஜெயலட்சுமியின் சேலையை பிடித்து இழுத்ததாகவும் இரு தரப்பினரும் புகார் அளித்துள்ளனர்.