India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
போடி தாலுகாவை சேர்ந்த 30 வயது பெண் தேனி அரசு விடுதியில் தங்கி 5ம் வகுப்பு படிக்கும் தனது 10 வயது மகனுக்கு அதே விடுதியில் தங்கியிருக்கும் 8ம் வகுப்பு படிக்கும் 12 வயது மாணவன், 9ம் வகுப்பு படிக்கும் 14 வயது, 13 வயது மாணவன் ஆகியோர் பாலியல் தொல்லை அளித்ததாக தேனி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து (நவ.8) 3 சிறுவர்களையும் கைது செய்து சிறார் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.
தேனி மாவட்டத்தில் புது நினைவு திட்டத்தின் கீழ் வட்ட அளவிலான குறைதீர் கூட்டம் இன்று(நவ.09) பெரியகுளம் தாலுகா மேல்மங்கலம், தேனி தாலுகா அரண்மனை புதூர், ஆண்டின்படி தாலுகா கொத்தப்பட்டி, போடி தாலுகா திம்மி நாயக்கன்பட்டி, உத்தமபாளையம் தாலுகா அம்மாபட்டி ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது என்று தேனி மாவட்ட ஆட்சியர் ஆர்.வி. ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
கம்பம் அருகே உள்ள தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள தேக்கடியில் வருகிற 12ந் தேதி பகல் 12 மணிக்கு தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா மற்றும் இடுக்கி மாவட்ட ஆட்சியர் விக்னேஸ்வரி ஆகியோர் சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்களின் அடிப்படை வசதிகள் குறித்து பேச விருக்கின்றனர். இந்நிகழ்ச்சியில் இரு மாவட்ட அலுவலர்களும் கலந்து கொள்கிறார்கள்.
தேனி மாவட்டத்தில் இன்று(நவ.8) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
தேனி பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி கடந்த 2023-ம் ஆண்டு தனது மகளான சிறுமிக்கு தனது கணவர் பாலியல் தொல்லை அளித்ததாக கூறி தேனி காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் போலீசார் அவரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வழக்கின் தீர்ப்பாக இன்று குற்றவாளி சரவணனுக்கு ஐந்தாண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.
பள்ளிக்கல்வித் துறை சார்பில் தேனி மாவட்டம் ராசிங்காபுரம், அப்பிப்பட்டி, லோயர்கேம்ப் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் ரூ.275.88 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறை கட்டடங்களை இன்று(நவ.8) முதல்வர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதையடுத்து நடைப்பெற்ற நிகழ்வில் தேனி ஆட்சியர் ஷஜீவனா, கம்பம் MLA ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு விளக்கேற்றினர்.
முல்லைப் பெரியாறு அணையில் கடந்த சில நாட்களாக மழையின் காரணமாக நவம்பர் 6 அன்று அணையின் நீர்மட்டம் 125 அடியை எட்டியது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மழையின்றி 1346 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று(நவ.07) வினாடிக்கு 751 கன அடியாக குறைந்தது. அணையின் நீர்மட்டம் 124.90 அடியாக காணப்பட்டது. (மொத்த உயரம் 152 அடி). தமிழகப் பகுதிக்கு குடிநீர் மற்றும் சாகுபடிக்காக 1100 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் நிரந்தர ஆதார் மையம் செயல்பட்டு வருகின்றது. ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் மாவட்டத்தில் ஏதாவது ஒரு நிரந்தர ஆதார் மையம் செயல்படும் என மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நவ.10 அன்று தேனி தாலுகா அலுவலகத்தில் உள்ள ஆதார் மையம் செயல்படும் எனவும் பொதுமக்கள் இதனை பயன்படுத்தி பயன்பெறலாம் என மாவட்ட நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.
பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டி பேரூராட்சி 9வது வார்டு ஆர்.எஸ்.புரம் தெருவில் பத்து நாளைக்கு ஒருமுறை மட்டுமே தண்ணீர் வழங்குவதால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தண்ணீர் இன்றி மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் தேவதானப்பட்டி பேரூராட்சி நிர்வாகம் முறையாக குடிநீர் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கம்பம் அருகே தமிழக-கேரள எல்லையில் உள்ள ராமக்கல் மெட்டு இயற்கை எழில் கொஞ்சும் சிறந்த சுற்றுலா தலமாகும். அங்கிருந்து பார்த்தால் தேவாரம், கோம்பை போன்ற பகுதிகள் நம் கண்களுக்கு விருந்தளிக்கும். சுற்றுலா வரும் பயணிகள் தாங்கள் கொண்டு வரும் பிளாஸ்டிக் கழிவுகளை ஆங்காங்கு போட்டு விட்டு செல்வதால் வனத்துறையினர் தடை விதித்தனர். தற்போது கலெக்டர் பேச்சுவார்த்தைக்குப் பின் சுற்றுலாவுக்கு அனுமதியளிக்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.