Theni

News January 29, 2025

தேனி எம்.பி அலுவலகத்தில் கொள்ளை

image

தேனி எம்பியும், மாவட்ட செயலாளருமான தங்க தமிழ்ச்செல்வனின் அலுவலகத்தில் நேற்று முன் தினம் இரவு மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே இருந்த லேப்டாப், கணிணிகள், ஹார்ட் டிஸ்க், பரிசுப் பொருட்கள் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். கொள்ளையர்களை கைது செய்வதற்காக போலீசார் தீவிர விசாரணை; நகரில் வாகன சோதனையும் முடுக்கி விடப்பட்டுள்ளது.

News January 29, 2025

சாப்பிடும் போது, புரையேறி இளைஞர் மரணம்

image

கூடலூர், நாராயணதேவன்பட்டியில் உள்ள மந்தையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் இளங்கோ. இவரது மகன் அஜய்(24). கடந்த 2 தினங்களுக்கு முன்னர், அஜய் வீட்டில் உணவு சாப்பிட்டபோது திடீரென அவருக்கு புரையேறியது. அவரது குடும்பத்தினர் முதலுதவி செய்தும் சரியாகவில்லை. கம்பம் அரசு மருத்துவமனையில் அஜயை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்தாக தெரிவித்தனர். கூடலூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News January 29, 2025

வேலை வாங்கித் தருவதாக 13.8 லட்சம் மோசடி

image

கம்பம் சுருளிபட்டியை சேர்ந்தவர் ஆனந்தபிரபு. இவர் தன்னிடம் நெடுஞ்சாலைத் துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி அருண்யா, சசிகுமார் ஆகியோரிடம் ரூ.13.85 லட்சத்தை பெற்றுக்கொண்டு போலி பணி நியமன ஆணையை வழங்கி மோசடி செய்ததாக தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் அருண்யா, சசிக்குமார் மீது போலீசார் நேற்று(ஜன.28) வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 29, 2025

தேனியில் மீண்டும் மக்களுடன் முதல்வர் முகாம்

image

தேனி மாவட்டத்தில் கடந்தாண்டு நடைபெற்ற மக்களுடன் முதல்வர் முகாமில் பெறப்பட்ட மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டன. இந்நிலையில் மீண்டும் மக்களுடன் முதல்வர் முகாம் நடத்துவதற்கான பணிகள் துவங்கி உள்ளது. மாவட்டத்தில் பொருளாதாரம், கல்வி உள்ளிட்டவற்றில் பின்தங்கிய பகுதிகள், மலை கிராமங்கள் கணக்கெடுக்கப்பட்டு வருகின்றன. இப்பகுதிகளில் மட்டும் முகாம் நடத்த ஆலோசிக்கப்பட்டு வருவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News January 29, 2025

கலைஞர் கனவு இல்ல திட்டம்: 1300 பேருக்கு வீடுகள்

image

கலைஞர் கனவு இல்ல திட்டம் பயனாளிகளுக்கு அரசு தலா ரூ.3.50 லட்சம் இலவசமாக வழங்குகிறது. தேனியில் கடந்தாண்டு இத்திட்டத்தில் 961 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு வீடுகள் கட்டப்பட்டுவருகிறது. அடுத்த நிதியாண்டிற்கு 1300 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் பற்றிய விபரங்கள் கிராம சபையில் வைத்து ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இதில் தேர்வு செய்யப்படுவர்களுக்கு வீடு கட்டுவதற்கான பணி ஆணை வழங்கப்பட உள்ளது.

News January 28, 2025

தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இன்று 28.01.2025 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

News January 28, 2025

சாப்பிடும் போது புறையேறி இளைஞர் உயிரிழப்பு

image

கூடலூர் பகுதியை சேர்ந்தவர் அஜய் (24). இவர் நேற்று முன் தினம் (ஜன.26) இரவு அவரது வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்த பொழுது திடீரென தொண்டையில் புறையேறிக் கொண்ட நிலையில் மயங்கி விழுந்துள்ளார். அவரை மீட்ட உறவினர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் மருத்துவர்கள் அஜய் உயிரிழந்ததாக தெரிவித்தனர். இதுகுறித்து கூடலூர் வடக்கு போலீசார் நேற்று (ஜன.27) வழக்குப்பதிவு செய்து விசாரணை.

News January 28, 2025

கூடலூர் அருகே விவசாயியை தாக்கிய கரடி

image

தேனிகூடலூர் கண்ணகி நகர் பகுதியைச் சேர்ந்தவர் கோபால். இவர் பெருமாள் கோவில் புலத்தில் இலவ மரங்களை குத்தகை எடுத்து விவசாயம் செய்து வருகிறார். இவர் நேற்று தனது நண்பர் ராமருடன் தோட்டத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது, புதருக்குள் மறைந்திருந்த கரடி கோபாலை தாக்கியது. அதனைத் தொடர்ந்து அக்கம் பக்கத்து விவசாயிகள் கரடியை விரட்டினர். கோபால் படுகாயம் அடைந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.

News January 28, 2025

தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இன்று (ஜன.27) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

News January 27, 2025

விதி மீறிய 35 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

image

தேனி தொழிலாளர் அமலாக்கப்பிரிவு உதவி ஆணையர் மனுஜ் ஷ்யாம் ஷங்கர் தலைமையில் தேனியில் உள்ள கடைகள், ஓட்டல்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் நேற்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஜன.26ல் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதா என ஆய்வு நடந்தது. விதிமுறைகளை பின்பற்றாத 35 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உதவி ஆணையர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!