India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஈர நிலங்கள் தினத்தை முன்னிட்டு “ஈரநிலங்களின் சாரம்ச புகைப்படம்” என்ற தலைப்பில் புகைப்பட போட்டி நடக்கிறது. இப்போட்டியில் பங்கு பெறுபவர்கள் தேனி மாவட்ட நீர்நிலைகளில் வாழும் விலங்கினங்கள், தாவரங்கள்,பறவைகளின் படங்களை அனுப்பலாம்.வரும் 6 ஆம் தேதி மாலை 5.00 மணிக்குள் அனுப்ப வேண்டும். போட்டி விபரங்களுக்கு 6383489107 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சித் தலைவர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டத்தில் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்த அமைப்பு சாரா தொழிலாளர்களில் யாரேனும் 2022 மார்ச் 31 வரை விபத்துக்களால் ஊனம், மரணம் அடைந்திருந்தால் நிவாரணம் வழங்கப்பட உள்ளது. ஊனம் அடைந்தவர்கள், மரணமடைந்தவர்களின் வாரிசுகள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 04545-250853 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தேனி தொழிலாளர் அமலாக்கப் பிரிவு உதவி ஆணையர் தெரிவித்துள்ளார்.
விநாயகா டிரைவிங் பயிற்சி பள்ளி நிர்வாகம், தேனி வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் சந்தானகிருஷ்ணன் ஏற்பாட்டில் பிப்.2ல் ‘ஹேப்பி ஸ்ட்ரீட்’ நிகழ்ச்சி நடக்க இருந்தது.இந்நிகழ்ச்சி நாளில் பொது போக்குவரத்து தேவையின்றி மாற்றுப்பாதையில் செல்ல வேண்டிய கட்டாயம் போன்ற காரணங்களால் இந்நிகழ்ச்சிநடத்த எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் ‘ஹேப்பி ஸ்ட்ரீட்’ நிகழ்ச்சி நடத்த தடை விதித்து எஸ்.பி., சிவபிரசாத் உத்தரவிட்டுள்ளார்.
தேனி மாவட்டத்தில் இன்று பெரியகுளம், போடி, உத்தமபாளையம், கம்பம் ஆகிய பகுதிகளில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) செய்யலாம். அவசர உதவிக்கு 100 காவல் கட்டுப்பாட்டு அறை 04546-250100 – 8870985100 டயல் செய்யலாம் என்று தேனி மாவட்ட போலீசார் தங்களது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.
தேனி மாவட்டத்தில் இன்று 30.01.2025 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.
ரயில்வே பணிகளுக்காக பிப்.01 அன்று தேனி பழைய பேருந்து நிலையம் பெரியகுளம் சாலையில் உள்ள ரயில்வே லெவல் கிராசிங் கேட்டும், ஜன.31 அன்று நள்ளிரவு 12:30 மணி முதல் அதிகாலை 3:30 மணி வரை தேனி வன அலுவலகம் பங்களா மேடு சாலையில் உள்ள ரயில்வே லெவல் கிராசிங் கேட்டும் மூடப்படும். மேற்குறிப்பிட்ட நேரங்களில் அவ்வழியை தவிர்த்து மாற்றுப்பாதையில் பயணிக்கும்படி ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக தேனி பழைய பேருந்து நிலையம் அருகே ஹேப்பி ஸ்ட்ரீட் எனும் கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெறும் என தனியார் அமைப்பு நிகழ்ச்சிக்கான அறிவிப்புகளை வெளியிட்டிருந்தது. இது மக்கள் மத்தியில் அதிருப்தி எழ இன்று(ஜன.30)மாவட்ட எஸ்.பி.அலுவலகம் தரப்பில் இருந்து இந்நிகழ்ச்சிக்கு அனுமதி இல்லை என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு மாவட்ட மக்கள் காவல்துறைக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.
சின்னமனூர் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் சுரேஷ் கண்ணன் இன்று (ஜன.30) நகர் பகுதியில் உள்ள பேக்கரி மற்றும் தேநீர் கடைகளில் ஆய்வு மேற்கொண்டார். இதில் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகளை பறிமுதல் செய்தும், வாடிக்கையாளர்களுக்கு கொடுக்க வைத்திருந்த தரம் இல்லாத உணவுப் பொருட்களை கைப்பற்றியும் 3000 ரூபாய் அபராதம் விதித்தார். மேலும் கடை லைசன்ஸ் இல்லாத கடைகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கினார்.
ஜி.கல்லுப்பட்டி ஊராட்சி தலைவர் பதவி 2020.ல் பட்டியலின பெண்ணிற்கு ஒதுக்கப்பட்டது. இவ்வூரை சேர்ந்த பழனிசாமி மனைவி மகேஸ்வரி பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர். அதை மறைத்து பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்தவர் என போலி ஜாதி சான்றிதழை வழங்கி வெற்றி பெற்றார். இது குறித்து எதிர்த்து போட்டியிட்ட சின்னத்தாய் அளித்த புகாரில் தேவதானப்பட்டி போலீசார் மகேஸ்வரி மீது நேற்று (ஜன.29) வழக்கு பதிவு செய்தனர்.
தேனி மாவட்டத்தில் இன்று 29.01.2025 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.