Theni

News February 2, 2025

கடைகளுக்கு அவசியம் லைசென்ஸ் வேண்டும் 

image

தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா ஆலோசனையின் படி, மாவட்ட உணவு வணிகர் நல அலுவலர் விடுத்துள்ள செய்தியில்; மாவட்டத்தில் ஹோட்டல், மளிகை, பேக்கரி, இறைச்சி, டீ கடைகள், சாலையோர உணவுக் கடைகள் வைத்து நடத்துபவர்கள் உணவு வணிகர் லைசென்ஸ் பெற வேண்டும். அன்னதானம் செய்தாலோ அதற்கு உணவு தடுப்பு அலுவலரிடம் லைசென்ஸ் பெற வேண்டும் என உணவு வணிகர் நல அலுவலர் தெரிவித்துள்ளார்.

News February 1, 2025

தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இன்று (பிப்.01) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

News February 1, 2025

கனரா வங்கி வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் விழிப்புணர்வு

image

தேனி கனரா வங்கி ஊரக வேலை வாய்ப்பு பயிற்சி மையம், மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சி நிறுவனம் இணைந்து நடத்தும் தொழில் முனைவோருக்கான அரசியல் திட்டங்கள் மானியங்களுடன் வங்கி கடன் உதவிகள், சுய வேலைவாய்ப்பு தேவைகள் குறித்து ஒருநாள் விழிப்புணர்வு மற்றும் ஊக்குவிக்கும் நிகழ்ச்சி கனரா வங்கி ஊரக வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஷஜீவனா தலைமையில் நடைபெற்றது.

News February 1, 2025

தேனியில் திருமணமான அன்றே சோகம்

image

கதிர்நரசிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் பரமேஸ்வரன். இவரது மகள் சௌமியா (24). இருக்கும் கம்பத்தை சேர்ந்த ஒருவருக்கும் நேற்று (ஜன.31) திருமணம் நடைபெற்ற நிலையில் தம்பதியினரை பரமேஸ்வரன் தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். அப்பொழுது சௌமியா பாத்ரூம் செல்வதாக கூறிவிட்டு சென்றவர். அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ராஜதானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News February 1, 2025

50% மானியத்தில் விதைகள் – விவசாயிகளுக்கு அறிவிப்பு 

image

ஆண்டிபட்டி ஒருங்கிணைந்த வேளாண்மை அலுவலகத்தில் கோடை சாகுபடிக்கு ஏற்ற அதிக மகசூல் தரும் மேம்படுத்தப்பட்ட கம்பு, உளுந்து, குதிரைவாலி, பருத்தி விதைகள் போதுமான அளவு இருப்பில் உள்ளன. விவசாயிகள் இதனை 50 சதவீத மானிய விலையில் வாங்கி பயன்பெறலாம். தேவைப்படும் விவசாயிகள் தங்கள் நிலத்திற்கான ஆவணங்களை வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் வழங்கி விதைகளை வாங்கி பயன்பெறலாம் என வேளாண்துறையினர் தெரிவித்துள்ளனர்.

News February 1, 2025

தேனி மாவட்டத்தில் கோழிகளுக்கு தடுப்பூசி முகாம்

image

தேனி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் பிப்.01ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை 8 வாரம் வயதுடைய கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் கோழிகளுக்கு இலவசமாக தடுப்பூசி போடுவதால் கோழி வளர்ப்போர் பயன்பெற்று கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

News February 1, 2025

தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இன்று (ஜன.31) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

News January 31, 2025

தேனி வடக்கு மாவட்ட தவெக நிர்வாகிகள் தேர்வு

image

தமிழக வெற்றிக் கழகத்தின் தேனி வடக்கு மாவட்ட செயலாளராக பிரகாஷ், இணைச் செயலாளராக விக்னேஷ், பொருளாளராக ராஜசீரளன், துணைச் செயலாளர்களாக பாலமுருகன், கஸ்தூரி, செயற்குழு உறுப்பினர்கள் திவ்யா சூர்யா, சங்கீதா, திவ்யா, பகவதி, ராஜ்குமார், சந்தோஷ், கிருஷ்ண மூர்த்தி, நாகராஜன், கெளதம்ராஜ், அருண்பாண்டியன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

News January 31, 2025

தேனி மக்களே.. புகைப்படப் போட்டிக்கு தயாரா?

image

ஈர நிலங்கள் தினத்தை முன்னிட்டு “ஈரநிலங்களின் சாரம்ச புகைப்படம்” என்ற தலைப்பில் புகைப்பட போட்டி நடக்கிறது. இப்போட்டியில் பங்கு பெறுபவர்கள் தேனி மாவட்ட நீர்நிலைகளில் வாழும் விலங்கினங்கள், தாவரங்கள்,பறவைகளின் படங்களை அனுப்பலாம்.வரும் 6 ஆம் தேதி மாலை 5.00 மணிக்குள் அனுப்ப வேண்டும். போட்டி விபரங்களுக்கு 6383489107 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சித் தலைவர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

News January 31, 2025

தேனி: தொழிலாளர்களுக்கு நிவாரணம் அறிவிப்பு

image

தேனி மாவட்டத்தில் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்த அமைப்பு சாரா தொழிலாளர்களில் யாரேனும் 2022 மார்ச் 31 வரை விபத்துக்களால் ஊனம், மரணம் அடைந்திருந்தால் நிவாரணம் வழங்கப்பட உள்ளது. ஊனம் அடைந்தவர்கள், மரணமடைந்தவர்களின் வாரிசுகள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 04545-250853 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தேனி தொழிலாளர் அமலாக்கப் பிரிவு உதவி ஆணையர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!