India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தேனி மாவட்டம், முத்து தேவன் பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வினோத் குமார் (வயது 30). தனியார் நிறுவன ஊழியர். இவர் தனது வீட்டின் அருகே சம்பவ தினத்தன்று டூவீலரை நிறுத்தி இருந்தபோது டூவீலர் திருடு போயிருந்தது. பல இடங்களில் தேடிப் பார்த்து டூவீலர் கிடைக்காததால், வினோத் குமார் வீரபாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.

உத்தமபாளையம் தாமஸ் குடியிருப்புக்கு அருகே உள்ள காலி வீட்டு மனையிடத்தில் இரு தினங்களுக்கு முன்பு முகம்மது மீரான் (25). என்பவர் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் இந்த கொலையில் தொடர்புடைய இளஞ்செழியன் (22), முத்தையா (25), விஜய் (25), சிவா (24) ஆகியோரை கைது (செப்.28) செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி மக்களே இந்தியன் வங்கியில் இந்தியா முழுவதும் காலியாக உள்ள 171 சிறப்பு அதிகாரி / Specialist Officer பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதிகேற்ப மாதம் ரூ.64820 – ரூ.120940 வரை சம்பளம் வழங்கபபடும். 23 முதல் 36 வயதுகுட்பட்ட ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் இங்கே <

போடியை சேர்ந்தவர் கோபால்ராஜ். இவர் உறவினர்களுடன் திண்டுக்கல் சென்று போடிக்கு காரில் திரும்பினார். வழியில் தேனி ரத்தினம் நகரில் உள்ள அங்காடிக்கு சென்றனர். பொருட்கள் வாங்கிய பின் காருக்கு செல்ல ரோட்டை கடந்தபோது அல்லிநகரம் குறிஞ்சி நகர் மதன்குமார் 21, ஓட்டி வந்த டூவீலர் கோபால்ராஜ், மீது மோதி விபத்து நடந்தது. சிகிச்சையில் இருந்த கோபால்ராஜ் உயிரிழந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.

கரூரில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் இன்று (செப்.,29) ஒரு நாள் கடையடைப்பு தமிழக வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தேனி மாவட்டத்திலும் கடை அடைக்கப்பட்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் திறந்திருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் கடையடைப்பா? கமெண்ட் பண்ணுங்க.

மத்திய பணியாளர் தேர்வாணையம் (SSC) மூலம் காலியாக உள்ள 7565 Constable (Executive) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. காலியிடங்கள் : 7565
3. கல்வித் தகுதி: 12-ம் வகுப்பு
4. வயது: 18-25 (SC/ST-30, OBC-28)
5. கடைசி நாள் : 21.10.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க<

▶️முதலில் http://cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
▶️ பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
▶️ இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
▶️ பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்கள்

ஆண்டிப்பட்டி, ரோசனப்பட்டியை சேர்ந்தவர் வேல்த்தாய். இவர் 15 நாட்களுக்கு முன் வீட்டில் உள்ள பீரோவின் முதல் லாக்கரில் 2 பவுன் செயின், மற்றொரு 4 பவுன் செயின், உள் லாக்கரில் 2 பவுன் செயின் மோதிரம், கம்மல் ஆகியவற்றை வைத்து கதவை பூட்டி சாவியை வீட்டில் உள்ள ஒரு அறையில் வைத்திருந்தார். இந்நிலையில் நேற்று முன் தினம் நகையை சரி பார்த்த பொழுது 4 பவுன் செயினை மட்டும் காணவில்லை. இது குறித்து போலீசார் விசாரணை.

பெரியகுளம் அருகே கோட்டைப்பட்டியை சோ்ந்தவா் முத்து (65). மாற்றுத் திறனாளியான இவருக்கு குடும்பம் இல்லாத காரணத்தினால் சாலையில் சுற்றித் திரிந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் ஜி.மீனாட்சிபுரம் அருகே சாலையில் நின்று கொண்டிருந்த பொழுது அடையாளம் தெரியாத வாகனம் இவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் உயிரிழந்தார். விபத்து குறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்கு (செப்.27) பதிவு.

தேனி மக்களே உஜ்வாலா யோஜனா என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கபட்டுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இங்கே <
Sorry, no posts matched your criteria.