Theni

News February 20, 2025

தேனியில் வேலைவாய்ப்பு முகாம்

image

தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை (பிப்.21) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதில் 10ம் வகுப்பிற்கு கீழ் கல்வித்தகுதி உடையவர்கள், பிளஸ் 2, ஐ.டி.ஐ., பட்டப்படிப்பு, நர்ஸிங், தையல் பயிற்சி முடித்தவர்கள், சுயவிபர நகல், கல்விச்சான்றுகள் நகல்களுடன் பங்கேற்று பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு 76959 73923 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார். *ஷேர்

News February 20, 2025

கல்லூரி மாணவர் மரணம்; பழங்குடி ஆணையம் தலையீடு

image

போடிநாயக்கனூர் அரசு பொறியியல் கல்லூரி மாணவர் விடுதியில் எறும்பு கடித்து இரத்தம் வந்ததாக கூறப்பட்ட மாணவர் விக்னேஷ் மரணம் குறித்து சிபிசிஐடி விசாரணை வேண்டி நடத்தப்பட்ட போராட்டத்தை,தேசிய பட்டியல்/பழங்குடி ஆணையம் தாமாக முன்வந்து தேனி/நெல்லை ஆட்சியர்களிடமும் காவல் கண்காணிப்பாளர்களிடமும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பிய அறிவிப்பு.

News February 20, 2025

காரை மறித்து ரூ.7.5 லட்சம் வழிப்பறி; 8 பேரிடம் விசாரணை

image

தேனியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவர் தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக உள்ளார். இவர் நேற்று(பிப்.19) தனது காரில் ரூ.7.5 லட்சம் வைத்து கொண்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது மற்றொரு காரில் வந்த கும்பல் ஒன்று ராமகிருஷ்ணன் காரை வழிமறித்து அவரை தாக்கி விட்டு பணத்தை எடுத்து சென்றனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் காரில் சென்ற 8 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 19, 2025

பாஜகவில் உறுப்பினர்களாக இணைந்த இளைஞர்கள்

image

தேனி‌ மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்டத் தலைவர் P.இராஜபாண்டியன் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து இளைஞர்கள் விலகி தங்களை பாரதிய ஜனதா கட்சியில் இன்று உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட தலைவர் P.C.பாண்டியன், மாவட்ட, நகர நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் உடனிருந்தனர்.

News February 19, 2025

வைகை அணையில் இருந்து 600 கன அடி தண்ணீர் திறப்பு

image

ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் இருந்து ஒருபோக பாசன நிலங்களுக்காக முறை பாசனத்தின் படி தண்ணீரின் இருப்பை பொருத்தும் மழை அளவை பொருத்தும் திறந்து விடப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த இரண்டு நாட்களாக நிறுத்தப்பட்ட தண்ணீர் இன்று காலை மீண்டும் ஒருபோக பாசன நிலத்திற்கு 600 கன அடி தண்ணீர் அணையில் இருந்து திறக்கப்பட்டது. அணையின் நீர்மட்டம் 63.29 கன அடியாக உள்ளது.

News February 19, 2025

தேனி மாவட்டத்தில் சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழு ஆய்வு

image

தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவை மதிப்பீட்டு குழு சார்பில் இன்று காலை 10 மணியளவில் ரயில்வே பாலம் பணிகள் பார்வையிடல், NADP மையம் பார்வையிடல், பெரியகுளம் வேளாண்மை துறை சார்பில் வேளாண் இயற்கை இடுபொருள் மையம் பார்வையிடுதல், விவசாயிகளை சந்தித்தல், வீரபாண்டி திருக்கோவில் திருப்பணிகள் பார்வையிடல், சின்னமனூர் நகராட்சியில் சேதமடைந்த சாலைகள் சீரமைப்பு பணிகள் பார்வையிடல் முதலிய ஆய்வுகள் நடைபெற உள்ளது.

News February 19, 2025

தேனி: லாரி ஓட்டுநர்கள் சாலை மறியல்

image

கேரள போலீசாரை கண்டித்து லாரி ஓட்டுநர்கள் சாலை மறியல்தமிழக கேரள எல்லையான கம்பம் மெட்டு சோதனை சாவடியில் நேற்று (பிப்.18) கேரள போலீசார் தமிழக லாரி ஓட்டுனர் ஒருவரை தாக்கியதுடன் அவரை கைது செய்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடா்ந்து தமிழக லாரி ஓட்டுனர்கள் லாரி ஓட்டுநரை தாக்கியதை கண்டித்தும், அவரை உடனே விடுதலை செய்ய வலியுறுத்தியும் கம்பம் மெட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News February 18, 2025

தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இன்று 18.02.2025 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

News February 18, 2025

சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழு நாளை வருகை

image

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டுக் குழு(2024-2025) தேனி மாவட்டத்தில் நாளை (19.02.2025) குழுவின் தலைவர் காந்திராஜன் தலைமையில், குழு உறுப்பினர்களான சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற பேரவை செயலக அலுவலர்களுடன் வருகின்றனர். வேளாண், கால்நடை பராமரிப்பு, நெடுஞ்சாலை, சிறைச்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்து ஆய்வு மேற்கொள்ள உள்ளனர் என கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.

News February 18, 2025

தேனியில் தனியார் வேலை வாய்ப்பு முகாம்

image

தேனி மாவட்டம், வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 21.02.2025 அன்று நடைபெறவுள்ளது. மேலும் விவரங்களுக்கு 7695973923 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இவ்வாய்ப்பினை தேனி மாவட்ட வேலைநாடுநர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார். *ஷேர்

error: Content is protected !!