India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு முன் நடக்கும் அதிகாரிகள் ஆய்வுக் கூட்டம் தேனி கலெக்டர் ரஞ்சித்சிங் தலைமையில் நேற்று மார்ச் 17 காலை 9:00 மணிக்குத் துவங்கியது. காலை 9:15 மணிக்கு மேல் வந்த 12 அதிகாரிகளை ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்க அவர் அனுமதிக்கவில்லை. கூட்ட அரங்கிற்கு வெளியே அவர்கள் காத்திருந்தனர். மீண்டும் 10:30 மணிக்கு மக்கள் குறைதீர் கூட்டம் துவங்கியதும் அதிகாரிகள் உள்ளே சென்றனர்.
மதுரை-போடி இடையே உள்ள 96 கி.மீ., தூர அகல ரயில் பாதை தற்போது ரூ.98.33 கோடி செலவில் மின் மயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் கரிசல் கிஷோர் மதுரை – போடி இடையே ரயில்வே ட்ராக்கை ஆய்வு செய்தார். அதிகாரிகளிடம் போடியிலிருந்து மதுரைக்குக் காலையில் ரயில் இயக்க வேண்டும் எனப் பயணிகள் கோரிக்கை விடுத்தனர். இத்திட்டம் பரிசீலனையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பகுதியில் அமைந்துள்ளது பரமசிவன் கோவில். மலைமேல் அமைந்துள்ள இக்கோவிலில் தலவிருட்சம் தரும் வேம்பு மரம் உள்ளது. சிவராத்திரி, திருக்கிருத்திகை, உள்ளிட்ட நாட்களில் இங்குள்ள வேம்பு மரத்தை வழிபட்ட பிறகு , இங்கு நடைபெறும் பூஜைகளில் கலந்து கொண்டு மூலவரையும் ,உற்சவரையும் வழிபட்டால் கடன் தொல்லை நீங்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. ஷேர் செய்து உதவுங்கள் .
தேனி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் காவலர் குடியிருப்பு வளாகம் அமைந்துள்ளது. இந்த வளாகத்தில் பாம்பின் நடமாட்டம் இருப்பதை கண்ட குடியிருப்பு வாசிகள் தேனியைச் சேர்ந்த பாம்பு பிடிக்கும் நபரான பாம்பு கண்ணனுக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த பாம்பு கண்ணன் குடியிருப்பு பகுதியில் பதுங்கி இருந்த சுமார் 5 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பினை பத்திரமாக மீட்டு வனத்துறையினர் உதவியுடன் வனப்பகுதியில் விடுவித்தார்.
தேனி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் லட்சுமி தலைமையில் தேனி மின் உதவி கொட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாளை (மார்ச்.18) காலை 11 மணி முதல் பகல் ஒரு மணி வரை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தேனி, போடி, ராசிங்காபுரத்தை சேர்ந்த மின் நுகர்வோர்கள் தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகளை தெரிவிக்கலாம் என தேனி செயற்பொறியாளர் பிரகலாதன் தெரிவித்துள்ளார்.
தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டியில் 3-வது புத்தகத் திருவிழா வருகிற மார்ச் 21 ல் நடக்கிறது.பழனிசெட்டிபட்டியில் உள்ள மேனகா மில்ஸ் மைதானத்தில் புத்தக திருவிழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மைதானத்தை கலெக்டர் ரஞ்ஜீத்சிங் ஆய்வு செய்தார். டி.ஆர்.ஓ., மகாலட்சுமி, தேனி ஏ.எஸ்.பி., கேல்கர் சுப்ரமணிய பாலசந்திரா, கலெக்டர் நேர்முக உதவியாளர் முத்துமாதவன், தேனி வட்டாட்சியர் சதீஸ்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்
தேனி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சுருளி அருவி உள்ளது. இந்த மலையில் உள்ள மேகமலை, மகாராஜா மெட்டு, ஹைவேவிஸ், தூவானம் போன்ற அடர்ந்த வனப் பகுதிகளில் பெய்யும் மழைநீரே சுருளி மலையில் அருவியாகக் கொட்டுகிறது. இந்நிலையில், சில ஆண்டாகப் பருவநிலை மாற்றத்தால், அருவிக்கு வரும் நீர்வரத்து படிப்படியாகக் குறைந்தது. இங்கு வந்த சுற்றுலாப் பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பின.
தேனி மாவட்டத்தில் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரங்களை தினமும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மூலம் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் இரவு நேரங்களில் ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் இதில் குறிப்பிட்டுள்ள எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
தேவதானப்பட்டி மூங்கிலணையில் வேண்டிய வரங்களை வாரி வழங்கும் கற்பக விருட்சமாய், பக்தர்களின் இன்னல்களை அகற்றி அரவணைக்கும் காமதேனுவாய் அருள்பாலிக்கிறாள் மூங்கிலணை காமாட்சி. பிள்ளை வரம், திருமணப் பாக்கியம், தொழில் முன்னேற்றம் வேண்டுவோர், மனமுருகி அம்மனை வழிபட்டுச் செல்கின்றனர். இங்கே வந்து அம்மனை வழிபடும்போது கௌளி ஒலித்தால் அப்போது, வேண்டியது நிச்சயம் பலிக்கும் என்பது நம்பிக்கை.
கூடலூர் வடக்கு காவல் நிலைய போலீசார் நேற்று (மார்ச்.15) ரோந்து பணி மேற்கொண்டனர். கூடலூர் புதிய பேருந்து நிலையம் அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த சிவமூர்த்தி என்பவரிடம் விசாரணை மேற்கொண்ட போது அவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி சீட்டுகளை விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. அவரிடமிருந்து 37 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் சிவமூர்த்தியை கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.