India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தேவதானப்பட்டி அருகே கெங்குவார்பட்டி பகுதியை சேர்ந்தவர் செல்வி (44). இவர் நேற்று (அக்.3) அப்பகுதியில் உள்ள தென்னந்தோப்பு ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்பொழுது எதிர்பாராத விதமாக காலடியில் இருந்த பாம்பு ஒன்று இவரை தீண்டி உள்ளது. செல்வியை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.

தேனி மக்களே; உஜ்வாலா யோஜனா என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கபட்டுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இங்கே <

ஜெயமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பாண்டி (40). இவரது மனைவி பாண்டிமீனா (35). கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 3 மாதமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். மனைவியை சமாதானப்படுத்தி அழைத்து வரலாம் என மனைவியின் அண்ணன் தங்கப்பாண்டியிடம், பாண்டி பேசிய நிலையில் அவரை அவதூறாக பேசி கத்தியால் குத்தி தங்கபாண்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். ஜெயமங்கலம் போலீசார் வழக்கு (அக்.3) பதிவு.

தேனியில் அத்தியாவசிய பொருட்கள் சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு சென்றடையும் வகையில் உறுதி செய்யும் நோக்கில் முன்னுரிமை குடும்ப அட்டைதாரர்களுக்கு உள்ள அனைத்து நபர்களின் விவரங்களை உறுதி செய்யும் நோக்கில் கைவிரல் பதிவின் மூலம் உறுதி செய்யப்படும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி அக்டோபர்-31ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் ஆட்சியர் தகவல் ரேஷன் கார்ட் வைத்திருக்கும் அனைடவருக்கும் SHARE பண்ணுங்க

தேனி மாவட்டத்தில் இன்று (03.10.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் தேவையுள்ளவர்கள் அந்த அந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.

தேனியை சேர்ந்தவர் சந்தன பீர் ஒலி. இவர் நேற்று முன்தினம் வேலை விஷயமாக பைக்கில் வத்தலகுண்டு நோக்கி சென்றுள்ளார். எ.காமாட்சிபுரம் அருகே சென்று கொண்டிருந்த பொழுது கண்ணில் தூசி பட்டதால் பைக்கை ஓரமாக நிறுத்திவிட்டு அப்பகுதியில் உள்ள நர்சரியில் தண்ணீர் வாங்கி முகத்தை கழுவி உள்ளார். மீண்டும் திரும்பி வந்த பொழுது பைக் திருடப்பட்டது தெரிய வந்தது. திருட்டு குறித்து பெரியகுளம் போலீசார் வழக்கு (அக்.3) பதிவு.

தேனி மாவட்டத்தில் உள்ள முதியோர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 05.10.2025 மற்றும் 06.10.2025 ஆகிய இரண்டு நாட்களில் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே நேரடியாக சென்று ரேஷன் பொருட்கள் அனைத்தும் வழங்கப்படவுள்ளது, என தேனி மாவட்டத்தின் ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.

தேனி மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். மேலும் பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம். சந்தேகங்களுக்கு உங்கள் மாவட்ட அதிகாரியை 0454-6262112 அணுகலாம். SHARE பண்ணுங்க.

போடி பகுதியை சேர்ந்தவர் இன்பம் (50). இவர் மகளிர் குழுக்களில் லோன் எடுத்துள்ளார். அதற்கான தொகையை சரிவர கட்ட முடியாத நிலையில் வேதனையில் இருந்து வந்த இன்பம் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத பொழுது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து போடி நகர் போலீசார் நேற்று (அக்.2) வழக்கு பதிவு செய்து விசாரணை

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க <
Sorry, no posts matched your criteria.