Theni

News February 28, 2025

மின்னணு முறையில் 3 குவாரிகள் 13.99 கோடிக்கு ஏலம்

image

தேனி மாவட்டத்தில் அரசு புறம்போக்கு, தனியார் நிலங்களில் பல்வேறு குவாரிகள் செயல்படுகின்றன. குவாரிகள் இதுவரை நேரடி ஏலம் மூலம் விடப்பட்டு வந்தது. இந்நிலையில் முதன் முறையாக மின்னணு முறையில் ஆண்டிபட்டி தாலுகா சண்முகசுந்தரபுரத்தில் 2, போடி தாலுகா கோடாங்கிபட்டியில் 1 என மொத்தம் 3 குவாரிகள் ஏலம் விடப்பட்டன. இந்த மூன்று குவாரிகள் ரூ.13.99 கோடிக்கு ஏலம் போனதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News February 27, 2025

விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

image

தேனி கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் நாளை 28.02.2025 இலவச மிஷன் எம்ப்ராய்டரி பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. இந்த வகுப்பில் விருப்பமுள்ளவர்கள் கலந்து கொண்டு பயனடையலாம் என வகுப்பு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் தகவலுக்கு 9500314193, 9043651202, 04546251578 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். வகுப்பில் சேர்வதற்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்.

News February 27, 2025

டீக்கடையில் மக்களுடன் கலந்துரையாடிய கலெக்டர்

image

ஆண்டிபட்டி வட்டத்தினுள் நடைபெற்று வரும் உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் இன்று காலை (27.02.2025) ஆண்டிபட்டி அருகே கன்னியப்பிள்ளைபட்டி ஊராட்சியில் உள்ள தேனீர் கடையில் மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங், தேனீர் அருந்தி பொதுமக்களுடன் கலந்துரையாடினார். அப்போது பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகளை நேரடியாக அவரிடம் எடுத்துரைத்தனர். இதில் வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

News February 27, 2025

போட்டித் தேர்வு விழிப்புணர்வு முகாம்

image

தேனி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாநில அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடைபெற உள்ள தேர்வுக்கு மாவட்டத்தில் உள்ள ஆதரவற்ற விதவைகள் பயன்பெறும் வகையில் மார்ச்.4 அன்று சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதில் பாடக் குறிப்புகள் வழங்கப்பட உள்ளன. பங்கேற்க விரும்பும் ஆதரவற்ற விதவை பெண்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரிலோ அல்லது 63792 68661 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார். ஷேர்

News February 27, 2025

யூனியன் வங்கியில் வேலை: அப்ளை பண்ணுங்க

image

யூனியன் வங்கியில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘அப்ரென்டிஸ்’ பிரிவில் தமிழகம் முழுவதும் 122 காலிப் பணியிடங்கள் உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க எதாவது ஒரு பட்டப்படிப்பு படித்திருந்தால் போதும். 20 -28 வயதில் இருக்க வேண்டும். மாதம் ரூ. 15000 வழங்கப்படும். விரும்புவோர் மார்ச் 5ஆம் தேதிக்குள் <>விண்ணப்பிக்க <<>>வேண்டும். வங்கி வேலையில் சேர விரும்பும் உங்க நண்பர்களுக்கு பகிரவும்.

News February 27, 2025

வருஷநாடு கோவில்பாறை அருகே கரடி தாக்கி இருவர் பலி

image

தேனி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மணிகண்டன் 45 கருப்பையா 55. இவர்கள் கோவில்பாறை கண்மாய் அருகேயுள்ள அவர்களது நிலத்தில் குடியிருந்து விவசாயம் செய்கின்றனர். நேற்றிரவு தோட்டத்தில் இருவரும் எலுமிச்சை பழங்கள் பறித்து டூ வீலரில் ஏற்றுவதற்காக நடந்து வந்துள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த கரடி திடீரென கருப்பையா, மணிகண்டன் இருவரையும் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டனர். வனத்துறையினர் விசாரிகின்றனர்.

News February 26, 2025

தேனி: பொறியியல் கல்லூரி மாணவர் உடல் நல்லடக்கம்

image

போடிநாயக்கனூர் அரசு பொறியியல் கல்லூரியின் கழிவறையில் இறந்து கிடந்த விக்னேஷின் உடல் பிரேத பரிசோதனை செய்து தேனி அரசு மருத்துவ கல்லூரி பிணவறையில் வைக்கப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து நேற்று அவரது உடல் சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டம் பர்கிட் மாநகரம் அண்ணாநகரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

News February 26, 2025

குடும்பத்தில் பிரச்சனையா? இந்த கோவில் உங்களுக்கு உதவலாம்

image

தேனி மாவட்டம் பங்களாமேடு பகுதியில் அமைந்துள்ள
மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் கால பைரவருக்கு தனி சன்னதி உள்ளது.
ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமி
தினத்தன்றும் இங்கு நடைபெறும் சிறப்பு அபிஷேகத்தில் கலந்து கொண்டு,
கால பைரவரை வழிபட்டால் தீய நபர்கள் நம்மிடம் இருந்து விலகி , குடும்பத்தில் ஏற்படும்
பிரச்சனை குறையும் என்பது ஐதீகம்.

News February 26, 2025

தேனி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்

image

தேனி மாவட்ட அணைகளின் (பிப்.26) நீர்மட்டம்: வைகை அணை: 61.88 (71) அடி, வரத்து: இல்லை, திறப்பு: 69 க.அடி, பெரியாறு அணை: 115.95 (142) அடி, வரத்து: 106 க.அடி, திறப்பு: 400 க.அடி, மஞ்சளார் அணை: 36.95 (57) அடி, வரத்து: 7 க.அடி, திறப்பு: 55 க.அடி, சோத்துப்பாறை அணை: 77.40 (126.28) அடி, வரத்து: இல்லை, திறப்பு: 25 க.அடி, சண்முகா நதி அணை: 26.25 (52.55) அடி, வரத்து: இல்லை, திறப்பு: இல்லை

News February 26, 2025

வனத்துறையினரால் மாடுகளை விற்பனை செய்யும்  மக்கள்

image

சின்னமனூா் ஹைவேவிஸ் பேரூராட்சியில் மேகமலை உள்ளிட்ட 7 மலைக் கிராமங்கள் உள்ளன. இங்குள்ள தோட்டத் தொழிலாளர்கள் வீடுகளில் ஆடு, மாடுகளை வளா்த்து வருகின்றனா். தற்போது வனப்பகுதியில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு செல்லக்கூடாது என வனத்துறையினர் மலைக்கிராமத்தினருக்கு தடை விதித்துள்ளனர். இதனால் கால்நடைகளுக்கு தேவையான தீவனம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதால் கால்நடைகளை குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!