Theni

News September 15, 2024

தேனியில் பெண்ணை அரிவாளால் வெட்டிய பெண் கைது

image

தேனி, பின்னத்தேவன்பட்டியை சேர்ந்தவர் முருகேஸ்வரி, இவரது மகள் மீனா. இவர்கள் இருவரும் சம்பவ நாளன்று அதே பகுதியில் உள்ள ராமர் என்பவரது வீட்டு அருகில் அமர்ந்து பேசி சிரித்துக்கொண்டிருந்தனர். அப்போது வந்த ஜோதியம்மாள் என்னை பார்த்து ஏன் சிரிக்கிறீர்கள் என கூறி தகராறு செய்து, தான் வைத்திருந்த அரிவாளை கொண்டு முருகேஸ்வரியை வெட்டி கொலைமிரட்டல் விடுத்தார். போலீசார் ஜோதியம்மாள் மீது வழக்கு பதிவு செய்தனர்.

News September 15, 2024

பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற வங்கி அலுவலர் கைது

image

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன் (23). இவர் பெரியகுளத்தில் உள்ள தனியார் வங்கியில் விவசாய கடன் வழங்கும் பிரிவில் அலுவலராக பணி புரிந்து வந்தார். இவர் பெரியகுளம் பகுதியை சேர்ந்த 42 வயது பெண் ஒருவரிடம், விவசாய கடன் கொடுப்பது சம்பந்தமாக வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தவறாக நடந்துள்ளார். இதுகுறித்து பெண் அளித்த புகாரில் கார்த்திகேயனை போலீசார் நேற்று (செப்.14) கைது செய்தனர்

News September 14, 2024

தேனி மாவட்டத்தில் நடந்த குரூப் 2 தேர்வு விவரம்

image

தேனி மாவட்டத்தில் பெரியகுளம் தாலுகாவில் -9 தேர்வு மையம், உத்தமபாளையம் -15, தேனி -28  என 3 தாலுகாக்களில் 52 தேர்வு மையங்களில் 15,004 பேர் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வு எழுத இருந்தனர். ஆனால் இன்று நடந்த குரூப் 2 தேர்வில் 11,279 பேர் மட்டுமே தேர்வு எழுதியுள்ளனர். மீதம் 3725 பேர் தேர்வு எழுத வரவில்லை என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளனர்.

News September 14, 2024

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1689 வழக்கு விசாரணை

image

தேனி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் பெரியகுளம், உத்தமபாளையம், ஆண்டிபட்டி மற்றும் போடிநாயக்கனூர் வட்ட சட்டப் பணிகள் குழுவினால் இன்று நீதிமன்ற வளாகத்திலும் தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) மூலம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் வங்கிகளில் கடனுக்காக 1689 வழக்குகள் விசாரிக்கப்பட்டது. இந்த விசாரணை வழக்குகள் மூலமாக ரூ 178029846/- க்கு தீர்வு காணப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

News September 14, 2024

தேனியல் ரூ.10 லட்சம் மதிப்பிலான போதை பொருள் சிக்கியது

image

தேனி மாவட்ட தமிழக எல்லை குமுளியில் எஸ்ஐ சுனில் தலைமையிலான போலீசார் இன்று அதிகாலை வாகனசோதனையில் ஈடுபட்டனர். அப்போது, காரில் கடத்திய சர்வதேச மதிப்பில் சுமார் ரூ.10 லட்சம் மதிப்பிலான 60 கிராம் எம்.டி.எம்.எ (மெத்திலின் எடியோக்சி மெத்தாம்பேட்டமைன்) என்னும் தடை செய்யப்பட்ட போதை பொருளையும், காரையும் பறிமுதல் செய்தனர். மேலும் அதை கடத்திவந்த பிக்கு(42), அனூப் வர்கீஸ்(37) ஆகியோரையும் கைது செய்தனர்.

News September 14, 2024

பாராட்டு சான்றிதழ் வழங்கிய காவல் கண்காணிப்பாளர்

image

தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவபிரசாத் தலைமையில் இன்று கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்வது போன்ற பணிகளை திறம்படச் செய்த காவல்துறையினருக்கு சீர்மிகு பணிகளை பாராட்டி நற்சான்றிதழ் வழங்கியும் மேலும் சிறப்பாக பணியாற்ற தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

News September 14, 2024

தேனியில் முன்னாள் அமைச்சர் செய்தியாளர் சந்திப்பு

image

தேனியில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அதில், “ஜி.எஸ்.டி விவகாரத்தில் அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் கேட்ட கேள்விக்கு மத்திய அமைச்சர் உரிய முறையில் பதில் அளித்து இருக்கலாம்; மாற்றாக அவரை அழைத்து மன்னிப்பு கோர வைத்தது, எந்த ஒரு தமிழனாலும் ஏற்றுக்கொள்ள முடியாது; இதை நான் கண்டிக்கிறேன்” என கூறினார்.

News September 14, 2024

குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வு மையத்தை பார்வையிட்ட ஆட்சியர்

image

தேனி மாவட்டம், வடபுதுப்பட்டி நாடார் சரசுவதி பொறியியல் கல்லூரியில் தமிழ்நாடு
அரசு தேர்வாணயம் மூலம் குரூப் 2, குரூப் 2 ஏ பணியிடங்களுக்கான முதல்நிலை எழுத்துத்தேர்வு நடைபெற்று வரும் தேர்வு மையங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா நேரில், பார்வையிட்டார். உடன் அரசு தேர்வாணையம் குழு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

News September 14, 2024

முதலமைச்சரை சந்தித்த தேனி எம்.பி

image

அமெரிக்காவில் தொழில் முதலீட்டு சுற்றுப் பயணத்தை முடித்துவிட்டு இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சென்னை வந்தடைந்தார். சென்னை வந்தடைந்த முதலமைச்சர் ஸ்டாலினை திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேனி வடக்கு மாவட்ட செயலாளரும் தேனி மக்களவைத் தொகுதி உறுப்பினருமான தங்க தமிழ் செல்வன் நேரில் சென்று சந்தித்தார்.

News September 14, 2024

16 பொறியாளர்கள் பணியிடை மாற்றம்: ஆட்சியர் உத்தரவு

image

தேனி மாவட்டத்தில் பெரியகுளம், ஆண்டிபட்டி, கடமலை-மயிலை, சின்னமனூர், போடி, உத்தமபாளையம், கம்பம் ஆகிய 8 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் உள்ளன. இந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் உதவி பொறியாளர்களாக பணியாற்றக்கூடிய 16 ஒன்றிய பொறியாளர்களை அதிரடியாக இடமாற்றம் செய்து தேனி மாவட்ட ஆட்சியர் ஆர்.வி ஷஜீவனா உத்தரவிட்டுள்ளார்.