Theni

News September 23, 2024

வைகை அணையின் நீர்மட்டம் குறைந்தது

image

ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக 2099 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. வைகை அணைக்கு நீர் வரத்தாக 1013 தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. தண்ணீர் வெளியேற்றத்தை விட நீர்வரத்து குறைவாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் குறைந்து கொண்டே வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் 58.76 அடியாக குறைந்து காணப்படுகிறது.

News September 23, 2024

தேனியில் கேரள மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை

image

தேனி மாவட்டத்தில் உள்ள நர்சிங் கல்லூரியில் படித்த கேரள மாணவியை கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்து திண்டுக்கல் ரயில் நிலையத்தில் விட்டுச் சென்ற மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

News September 23, 2024

அரசு மாருதி மேல்நிலைப் பள்ளியில் தேனி எம்பி ஆய்வு செய்தார்

image

பெரியகுளம் அருகே உள்ள சில்வார்பட்டி உள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் இன்று தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் பள்ளியின் அடிப்படை வசதிகள் தொடர்பாக ஆய்வு செய்தார். அப்போது பள்ளி கட்டிடங்கள் மற்றும் மாணவர்களுக்கான அடிப்படை வசதிகள் அனைத்தும் சரியாக உள்ளதாக ஆய்வு செய்து அங்குள்ள ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார். இதில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார் உடன் இருந்தார்.

News September 23, 2024

கம்பத்தில் 22 கிலோ கஞ்சா பறிமுதல்

image

தேனியில் கஞ்சா புழக்கத்தை தடுக்க எஸ்பி சிவபிரசாத் உத்தரவின் பேரில் போலீஸாா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா். இந்நிலையில், நேற்று 18- ஆம் கால்வாய் பகுதியில் ஒரு காரை போலீஸாா் சோதனையிட்டதில் 22 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரித்தனா். விசாரணையில், கம்பத்தை சேர்ந்த முருகேசனுக்கு (44) இதில் தொடா்பு இருப்பது தெரியவந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து முருகேசனை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

News September 22, 2024

தேனியில் விரைவு மிதிவண்டி போட்டி

image

தேனியில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில், முன்னாள் முதல்வா் அண்ணாதுரை பிறந்த நாளை முன்னிட்டு செப்.28 அன்று 17 வயதிற்குட்பட்டவர்களுக்கு விரைவு மிதி வண்டி போட்டி நடைபெற உள்ளது. போட்டியில் பங்கேற்க வருபவர்கள் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியரிடமிருந்து பெற்ற வயது சான்றிதழ், வங்கி கணக்கு பாஸ் புத்தகம், ஆதாா் அட்டை நகல்களை கொண்டுவர வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 22, 2024

யானைகள் நடமாட்டம் வனத்துறை எச்சரிக்கை

image

ஆண்டிபட்டி, ஏத்தக்கோவில் ஒண்டிவீரன் கோயில் அருகே செப்.16 அன்று யானைகள் வந்து சென்றதற்கான தடயங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. யானைகள் நடமாட்டம் கேமரா மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. அப்பகுதியில் உள்ள விளை நிலங்களுக்கு யானைகள் வந்தால் விவசாயிகள் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். யானையை விரட்டும் போது வனப் பணியாளர்களுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

News September 21, 2024

தேனியில் 3 சிறுவர்கள் பலி: ஜாமீன் மனு தள்ளுபடி

image

தேனியில் விநாயகர் சதுர்த்தியின்போது டிராக்டர் கவிழ்ந்து 3 சிறுவர்கள் உயிரிழந்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட டிராக்டர் ஓட்டுநர் விநாயகமூர்த்தி அளித்த ஜாமின் மனுவை தள்ளுபடி செய்யக்கோரி தேனி முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பா.அருண்குமார் இடையீட்டு மனு தாக்கல் செய்தார். அவரின் மனுவை ஏற்று டிராக்டர் ஓட்டுநர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

News September 21, 2024

182 ஏக்கர் அரசு நில மோசடி மேலும் ஒருவர் கைது

image

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு பின்புறத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான 182 ஏக்கர் நிலத்தை பட்டா போட்டு விற்பனை செய்த வழக்கில் அரசு அதிகாரிகள் உட்பட பலர் மீது சிபி சிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக நேற்று வடபுதுபட்டியைச் சேர்ந்த நரேஷ் குமாரை(32) போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News September 21, 2024

புதிதாக தொழில் துவங்க ரூ.1 கோடி வரை கடன் பெறலாம்

image

முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ் முன்னாள் படை வீரர்கள், உயிர் நீத்த படைவீரர்களின் கைம் பெண்கள் புதிதாக தொழில் துவங்க ரூ.1 கோடி வரை கடன் பெற்று பயனடையாளம் விரிவான திட்ட விவரங்களுடன் முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு அக்.10க்குள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

News September 20, 2024

தேனியில் எலுமிச்சை விலை இருமடங்கு உயர்வு

image

தேனி மாவட்டத்தில் பெரியகுளம், போடி, வருஷநாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் எலுமிச்சை சாகுபடி செய்யப்பட்டு வருகின்றது. மே, ஜூன் மாதங்களில் எலுமிச்சை விளைச்சல் அதிகமாக காணப்பட்டதன் காரணமாக கிலோ ரூ.80 முதல் 100 வரை விற்கப்பட்டது. தற்போது எலுமிச்சையில் ஏற்பட்ட வைரஸ் நோய் தாக்குதலால் விளைச்சல் மிகவும் குறைந்துள்ளது. இதன் காரணமாக தற்போது எலுமிச்சை விலை உயர்ந்து கிலோ ரூ.200க்கு விற்கப்பட்டு வருகிறது.