Theni

News October 10, 2025

தேனி: வழக்கு பணியாளர் பணிக்கு விண்ணப்பியுங்க

image

தேனி கனவிலக்கு அரசு மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தின் ஒழிவிடாமக உள்ள இரண்டு வழக்கு பணியாளர் பணியிடம் தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்பப்படவுள்ளது. இந்த பணியிடத்துக்கான தகுதியான மற்றும் முழு விவரங்களை www. theni Nic.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம் என தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் தெரிவித்துள்ளார்.

News October 10, 2025

தேனியில் கல்லூரி மாணவி தற்கொலை

image

தேனி மாவட்டம், சின்னமனூர் பகுதியை சேர்ந்தவர் வர்ஷினி பிரியா (18). கல்லூரி மாணவியான இவருக்கு கடந்த சில வருடங்களாக தீராத தலைவலி இருந்து வந்துள்ளது. அதற்கு சிகிச்சை எடுத்தும் பலன் அளிக்காத காரணத்தினால் மன வேதனையில் இருந்து வந்த வர்ஷினி பிரியா நேற்று (அக்.9) அவரது பெற்றோர்கள் கோவிலுக்கு சென்ற பொழுது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து சின்னமனூர் போலீசார் வழக்கு பதிவு.

News October 10, 2025

தேனி உங்களுடன் ஸ்டாலின் முகாம் இன்றுடன் நிறைவு

image

தேனி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் இன்றுடன் நிறைவடைகிறது. இதுவரை நடைபெற்ற முகாம்களில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 55,996 பேர் மனு அளித்துள்ளனர். இதில் 25,136 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. 3,000 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. மற்ற மனுக்களுக்கு தீர்வு காணும் நடவடிக்கை நடைபெற்று வருகிறது. இது தவிர மகளிர் உரிமைத்தொகை கோரி 53,384 பேர் விண்ணப்பித்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தகவல்.

News October 10, 2025

தேனி: எம்.எல்.ஏ.விடம் ஐ.டி விசாரணை

image

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் மகாராஜன். இவரது தம்பி லோகிராஜன் ஆகியோரிடம் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணை முடிவில் ஆவணங்கள் ஏதும் கைப்பற்றப்படவில்லை. இவர்கள் இருவரும் அரசு ஒப்பந்ததாரர்கள். சகோதரர் லோகிராஜன் அதிமுக பிரமுகர் என்பது குறிப்பிடத்தக்கது.

News October 10, 2025

தேனி: இன்றைய உழவர் சந்தை விலை நிலவரம்

image

தேனி உழவர் சந்தையின் இன்றைய (அக்.10) காய்கறி விலை நிலவரம். (1 கிலோ) கத்தரிக்காய் ரூ.33-35, வெண்டைக்காய் ரூ.36, முள்ளங்கி ரூ.32, பாகற்காய் ரூ.40, முட்டைகோஸ் ரூ.25, பல்லாரி ரூ.26, சின்ன வெங்காயம் ரூ.45, தக்காளி ரூ.22, உருளைக்கிழங்கு ரூ.26, பீன்ஸ் ரூ.62, கேரட் ரூ.40, புடலங்காய் ரூ.32, பச்சை மிளகாய் ரூ.45 ஆகிய விலைகளில் விற்பனையாகின்றன.

News October 10, 2025

தேனி விவசாயிகள் ஆந்திர முதல்வருக்கு கடிதம்

image

தேனி, கூடலுாரில் உள்ள வாழை விவசாயிகள் ஆந்திர முதல்வர், துணை முதல்வருக்கும் பதிவுத் தபால் அனுப்பினர். அந்த தபாலில்: தேனி மாவட்டத்தில் விளையும் பச்சை வாழைப்பழத்திற்கு கடுமையான விலை வீழ்ச்சி ஏற்பட்டு விவசாயிகளுக்கு அதிக நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் மிகக் குறைந்த விலையில் அனுப்பப்படுவது ஆகும். அதனால் ஆந்திராவில் வாழைப்பழ விலையை உயர்த்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

News October 10, 2025

தேனி : G Pay / PhonePe / Paytm பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

image

தேனி மக்களே, இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

News October 10, 2025

தேனி: கமாண்டோ வீரர்களுக்கு பேரிடர் மீட்பு ஒத்திகை

image

தேனி மாவட்டத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் கமாண்டோ வீரர்களுக்கான பயிற்சி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று (அக்.9) வீரபாண்டி முல்லைப் பெரியாற்றில் நீர்நிலைகளில் அடித்து செல்லப்பட்டவர்களை கயிறு மூலம் சென்று மீட்கும் பயிற்சி வழங்கபட்டது. மத்திய தொழிலக பாதுகாப்பு படைப்பிரிவில் சிறப்பு பயிற்சி பெற்ற துாத்துக்குடியை சேர்ந்த மைக்கேல் தலைமையில் இப்பயிற்சி வழங்கபட்டது.

News October 10, 2025

குமுளி: எச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தல்

image

தமிழக கேரளாவை இணைக்கும் முக்கிய வழித்தடமாக உள்ள குமுளி மலைப்பாதையில் பல ஆபத்தான வளைவுகள் உள்ளது. பல இடங்களில் சாய்ந்து விழும் நிலையில் மரங்கள் உள்ளன. மண் சரிவு ஏற்படும் அபாயமும் உள்ளது. இன்று அப்பகுதியில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் மலைச்சாலையில் வாகனங்களில் செல்பவர்கள் பாதுகாப்புடனும் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என மாவட்ட காவல் துறை அறிவுறுத்தல்.

News October 10, 2025

தேனி: ஓ.பி.எஸ் வழக்கு தள்ளி வைப்பு

image

எம்.பி நவாஸ் கனியின் வெற்றியை எதிர்த்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த தேர்தல் வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. ஓ.பன்னீர்செல்வம் நேரில் ஆஜராகி 38 சாட்சி ஆவணங்களை தாக்கல் செய்தார், நவாஸ் கனி தரப்பு எதிர்ப்பு தெரிவித்ததால், குறைகளை நிவர்த்தி செய்து ஆவணங்களை தாக்கல் செய்ய நீதிமன்றம் ஓ.பி.எஸ்-க்கு உத்தரவிட்டு, வழக்கை வரும் 29-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது.

error: Content is protected !!