Theni

News September 30, 2024

வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

image

ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக அதிகப்படியான தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்ததால் நீர்மட்டம் குறைந்து கொண்டே வந்தது. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ய தொடங்கியுள்ளது. இதனால் அணைக்கு நீர்வரத்து 1649 கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரித்ததால் அணையின் நீர்மட்டமும் படிப்படியாக உயர தொடங்கியுள்ளது.

News September 30, 2024

புதிதாக தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம்

image

தமிழக அரசால் முதல் தலைமுறை தொழில் முனைவோர்களுக்காக புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பன்னிரெண்டாம் வகுப்பு (+2) தேர்ச்சி பெற்றவர்கள் & பட்டம், பட்டயம், ஐடிஐ/தொழிற்கல்வி ஆகிய கல்வித் தகுதி பெற்ற முதல் தலைமுறை தொழில் முனைவோர்கள் தொழில் தொடங்க விண்ணப்பித்து தொழில் முனைவோர்கள் பயன்பட்டுக் கொள்ளலாம் என்று கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

News September 30, 2024

வயிற்று வலியை தாங்க முடியாம்மால் ஒருவர் தற்கொலை

image

தேனி மாவட்டம் மயிலாடும்பாறை அருகே கோரையூத்துபகுதியில் பவித்ராவின் கணவர் சூர்யா இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துவந்துள்ளது. இதனால் அவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டது.இந்தநிலையில் இன்று அதிகாலை வயிற்று வலியை தாங்க முடியாமல் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். மயிலாடும்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News September 30, 2024

தேனி அருகே கரடிகள் நடமாட்டம்

image

மேற்கு தொடர்ச்சி மலைசார்ந்துள்ள கணவாய் மலைப்பகுதி, டி.சுப்புலாபுரம், திம்மரநாயக்கனூர் பகுதிகளில் சமீப காலமாக கரடிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. கொச்சி-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை ஒட்டியுள்ள டி.சுப்புலாபுரம் விலக்கில் கரடிகள் நடமாட்டம் குறித்த எச்சரிக்கை பலகையை வனத்துறை வைத்துள்ளது. வனப்பகுதியை ஒட்டிய விவசாய நிலங்களுக்கு தனியாக காலை,இரவு செல்ல வேண்டாம் என வனச்சரகர் அருண்குமார் தெரிவித்துள்ளார்

News September 29, 2024

துணை முதல்வரை சந்தித்த தேனி எம்.பி

image

தமிழ்நாடு அரசின் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இன்று(செப்.29) பதவி ஏற்றுக்கொண்டார். இந்நிலையில், தேனி வடக்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயலாளரும் தேனி மக்களவைத் தொகுதி உறுப்பினருமான தங்க தமிழ்செல்வன் நேரில் சென்று உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பணிகளை சிறப்பாக செய்திட தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

News September 29, 2024

தேனி தம்பதி கொலையில் திருப்பம்

image

தர்மபுரி மாவட்டம் புதிய சிப்காட் சாலை பகுதியில் 24ம் தேதி அடையாளம் தெரியாத இருவர் கொலை செய்ய்ப்பட்டு
அழுகிய நிலையில் சடலங்கள் மீட்கப்பட்டன. அதியமான் கோட்டை இன்ஸ்பெக்டர் லதா தலைமையில் இரு
தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இறந்தவர்கள் இருவரும் கம்பத்தை சேர்ந்த மணிகண்டன் அவரது மனைவி
பிரேமலதா 50 என விசாரணையில் தெரியவந்தது. மணிகண்டனின் டிரைவர் தேவராஜ் பணத்திற்காக இவர்களை
கொன்றுள்ளார்.

News September 28, 2024

தேனியில் கனமழை!

image

தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களில் இன்று(செப்.,28) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன்படி தேனி, மதுரை, தென்காசி, நெல்லை, குமரி, விருதுநகரிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலையில் மழை பெய்யத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் மழை நீர் தேங்கவும்
வாய்ப்புள்ளது. வெளியில் செல்வோர் குடையுடன் செல்வது நல்லது. SHARE IT.

News September 28, 2024

80 வாகனங்கள் மீது வழக்கு பதிவு

image

தேனி மாவட்டத்தில் கடந்த ஏழாம் தேதி முதல் 9ஆம் தேதி வரை பெரியகுளம், தேனி, உத்தமபாளையம், சின்னமனூர், ஆண்டிபட்டி பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது விதிமுறைகளை பின்படுத்தாத 80 வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் இதுவரை 12 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 68 வாகனங்கள் கைப்பற்றி உரிய நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத் தெரிவித்துள்ளார்.

News September 28, 2024

முதலமைச்சர் கோப்பை விளையாட்டு வீரர்களுக்கு பரிசு

image

முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டியில் தேனி மாவட்டத்தில் 16158 விளையாட்டு வீரர்கள் பதிவு செய்தனர். இதில் 8,598 விளையாட்டு வீரர்கள் 5 பிரிவுகளாக நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றனர். இந்த விளையாட்டுப் போட்டிகளில் தனிநபர் மற்றும் குழு போட்டிகள் வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்த விளையாட்டு வீரர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் ரொக்க பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழை வழங்கினார்.

News September 28, 2024

மகளிர் சுய உதவிக்கு ஊக்கத்தொகை வழங்கிய ஆட்சியர்

image

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பாக மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ஊட்டச்சத்து உணவு திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான மகளிர் சுய உதவி குழுக்கள் கலந்து கொண்டு பல்வேறு உணவுகளை தயார் செய்து அதை பார்வைக்காக வைத்திருந்தனர். அதை மாவட்ட ஆட்சித் தலைவர் ஷஜீவனா பார்வையிட்டார் இதில் வெற்றி பெற்ற மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ஊக்கத்தொகையை வழங்கினர்.